வாஸவேச்வரம் (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
Line 16: Line 16:
வாஸவேச்வரத்தில் உள்ள கோவிலில் குடிகொண்ட ஈசன் பெண்ணாசையால் சாபம் பெற்ற இந்திரனுக்கு சாப விமோசனம் அளித்தவர்.  ஒரு சிறிய வட்டத்துக்குள் ஆன்மா தேங்கிய ஊர்மக்கள் தன்முனைப்பாலும் காமத்தாலும் மட்டுமே செலுத்தப்படுகின்றனர். பண்பாலும், ஆளுமையாலும் ஓங்கி உயர்ந்து நிற்பவர் பெரியபாட்டா என்ற ஊர்த்தலைவர் மட்டுமே.  

முக்கியமாக மூன்று குடும்பங்களின் கதை சொல்லப்படுகிறது. பாட்டாவின் பெண்வழிப் பேத்தி தங்கமும் அவள் கணவன் டாக்டர் சுந்தா,  டாக்டரின் தாய் வன்மமும் சுடுசொல்லுமாகவே வாழும் அம்மாளுப்பாட்டி. சுந்தா வாய்  கிழிய முறை என்றும் நெறி என்றும் பேசி  தன் வாழ்வில் எதுவும் கடைபிடிக்காதவன்.  
முக்கியமாக மூன்று குடும்பங்களின் கதை சொல்லப்படுகிறது. பாட்டாவின் பெண்வழிப் பேத்தி தங்கமும். அவள் கணவன் டாக்டர் சுந்தா வாய்  கிழிய முறை என்றும் நெறி என்றும் பேசி  தன் வாழ்வில் எதுவும் கடைபிடிக்காதவன்.  

சந்திரசேகரனும் சுப்பையாவும் ஒன்று விட்ட சகோதரர்கள், தாயாதிகள். பெரிய பாட்டாவின் தமக்கை பேரன்கள்.
சந்திரசேகரனும் சுப்பையாவும் ஒன்று விட்ட சகோதரர்கள், தாயாதிகள். பெரிய பாட்டாவின் தமக்கை பேரன்கள்.

சந்திரசேகரன் செயலூக்கமும் தன் முனைப்பும் கொண்டவர். இருவருக்கும் சமமாகக் கிடைத்த நிலத்தை நன்கு கவனித்து,, உழைத்து நாநூறு ஏக்கராக ஆக்கிக்கொண்டவர். மனைவி ரோகிணி  பேரழகி, நகரத்தில் வளர்ந்தவள், கிராம கலாசாரத்துடன் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் தவிப்பவள். கணவனின் அன்புக்காக ஏங்கி அவன் அழகை ஆராதிக்க வேண்டுமென்று விரும்புபவள். சந்திரசேகரன் ஊருக்கெல்லாம் இன்முகம் காட்டி, மனைவியைத் துரும்பாக மதிப்பவர்.
சந்திரசேகரன் செயலூக்கமும் தன் முனைப்பும் கொண்டவர். இருவருக்கும் சமமாகக் கிடைத்த நிலத்தை நன்கு கவனித்து,, உழைத்து நாநூறு ஏக்கராக ஆக்கிக்கொண்டவர். மனைவி ரோகிணி  பேரழகி, நகரத்தில் வளர்ந்தவள், கிராமத்துடன் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் ,கணவனின் அன்புக்காக ஏங்கி அவன் தன் அழகை ஆராதிக்க வேண்டுமென்று விரும்புபவள். சந்திரசேகரன் ஊருக்கெல்லாம் இன்முகம் காட்டி, மனைவியைத் துரும்பாக மதிப்பவர்.
 
சுப்பையா சிறு வயதிலிருந்தே சந்திரசேகரனுடன் ஒப்பிடப்பட்டே வளர்ந்தவன். அவன் தாய் மட்டுமே அவன்மேல் நம்பிக்கை வைத்து நடத்திச் சென்றவள். தாயின் மரணத்துக்குப்பின் சுப்பையாவின் மனம் அமர்ந்து விட்டது. செயலூக்கமின்றி கடும் மன அழுத்தத்தோடு வாழ்கிறான். மனைவி விச்சுவும் அவனை சந்திரசேகரனோடு ஒப்பிட்டு தேளாகக் கொட்டுகிறாள்.
 
பிச்சாண்டி முற்போக்குக் கொள்கைகளும், எதற்கும் அஞ்சா நெஞ்சுரமும் உடைய இளைஞன். குடும்பக் கட்டுப்பாடு, பொதுவுடமை பற்றியெல்லாம் பிரச்சாரம் செய்பவன்.  பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறான். ரோகிணியும் அவனும் மனதிற்குல் ஒருவரையொருவர் ஆராதிக்கிறார்கள்.
 
சுப்பையாவின் தந்தை மிக வசதியாக வாழ்ந்து, நொடித்தவர். சிறு வயதிலிருந்தே சந்திரசேகரனுடன் ஒப்பிடப்பட்டே வளர்ந்தவன். அவன் தாய் மட்டுமே அவன்மேல் நம்பிக்கை வைத்து நடத்திச் சென்ர்வள். தாயின் மரணத்துக்குப்பின் சுப்பையாவின் மனம் அமர்ந்து விட்டது. செயலூக்கமின்றி கடும் மன அழுத்தத்தோடு வாழ்கிறான்.

இதிலும் மணவினை தாண்டிய உறவுகள், தடை தாண்டிய காமம் மற்றும் தாண்டாத காமமாக வருகின்றன.
இதிலும் மணவினை தாண்டிய உறவுகள், தடை தாண்டிய காமம் மற்றும் தாண்டாத காமமாக வருகின்றன.

Revision as of 01:41, 19 March 2022

நன்றி:காலச்சுவடு பதிப்பகம்

வாசவேஸ்வரம் கிருத்திகா (மதுரம் பூதலிங்கம்) எழுதிய, வாசவேஸ்வரம் என்ற ஒரு சிறிய வட்டத்தில் ஆன்மா தேங்கி நிற்கும் கற்பனை கிராமத்தில் 1940 களில் நடக்கும் கதை. தன்முனைப்பும் காமமுமே மனிதர்களைச் செலுத்தும் விசையாக இருக்கின்றன. தமிழின் முக்கியமான நாவல்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது

நவீன தமிழ்ப் புனைவுகளில் பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதிய முதல்​பெண் படைப்பாளி கிருத்திகா இவரது நான்காவது நாவல் வாஸவேச்வரம் கதாகாலட்சேபத்துடன் முடிவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல் தமிழகத்தின்​தென்பகுதியிலுள்ள ஒரு கற்பனைக்கிராமத்தை கதாபத்திரங்களை ​மையமாகக் கொண்டு கனவுகளாலும் கதைகளாலும் புனையப்பட்டுள்ள வாழ்வியல் சம்பிரதாயங்களின் திரை நீக்கி அவற்றின் யதார்த்தத்தை உணர்த்துகிறது, எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் கடந்தபின்னும் புத்துணர்ச்சியுடன் படிக்க முடிவதே இந்த நாவலின் சிறப்பு,

ஆசிரியர்

கிருத்திகா வின் இயற்பெயர் மதுரம் பூதலிங்கம் ( 1915 - 2009) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர். தமிழில் கிருத்திகா என்ற புனைபெயரிலும் ஆங்கிலத்தில் மதுரம் பூதலிங்கம் என்ற பெயரிலும் எழுதினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகே பூதப்பாண்டியில் பிறந்து, மும்பையில் வளர்ந்தவர். திருப்பதிசாரத்தைச்(திருவெண்பரிசாரம்) சேர்ந்த இந்திய அரசில் உயரதிகாரியாக இருந்த பூதலிங்கம் பிள்ளையை மணம் செய்துகொண்டார்.

.ஆங்கிலத்தில் மிக அழகாக மேடையில் பேசக்கூடியவர். சம்ஸ்கிருதத்திலும் பெரும்புலமை படைத்தவர். பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தமிழில் புகை நடுவினில், சத்யமேவ, பொன்கூண்டு, வாஸவேஸ்வரம். தர்ம ஷேத்ரே ,புதிய கோணங்கி,நேற்றிருந்தோம் போன்ற நாவல்களை எழுதியவர்.

உருவாக்கம், பதிப்பு

கிருத்திகா 1966 ல் எழுதிய வாசவேஸ்வரம் நாவலில் தன் புகுந்த ஊரான திருப்பதிசாரத்தைக் களமாக்கி, அங்கு வாழ்ந்த மக்களின் சாயலில் கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார். சுதந்திரத்துப்பின் தேக்க நிலையில் நின்ற, அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு இன்னும் தலை தூக்காத கிராமத்தை சித்தரித்திருக்கிறார். முதல் பதிப்பு 1966ல் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் வெளிவந்த அதே வருடம் வெளிவந்தது. காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் பதிப்பு 2007 டிசம்பரில் வெளி வந்தது.

கதைச்சுருக்கம்

வாஸவேச்வரத்தில் உள்ள கோவிலில் குடிகொண்ட ஈசன் பெண்ணாசையால் சாபம் பெற்ற இந்திரனுக்கு சாப விமோசனம் அளித்தவர். ஒரு சிறிய வட்டத்துக்குள் ஆன்மா தேங்கிய ஊர்மக்கள் தன்முனைப்பாலும் காமத்தாலும் மட்டுமே செலுத்தப்படுகின்றனர். பண்பாலும், ஆளுமையாலும் ஓங்கி உயர்ந்து நிற்பவர் பெரியபாட்டா என்ற ஊர்த்தலைவர் மட்டுமே.

முக்கியமாக மூன்று குடும்பங்களின் கதை சொல்லப்படுகிறது. பாட்டாவின் பெண்வழிப் பேத்தி தங்கமும். அவள் கணவன் டாக்டர் சுந்தா வாய் கிழிய முறை என்றும் நெறி என்றும் பேசி தன் வாழ்வில் எதுவும் கடைபிடிக்காதவன்.

சந்திரசேகரனும் சுப்பையாவும் ஒன்று விட்ட சகோதரர்கள், தாயாதிகள். பெரிய பாட்டாவின் தமக்கை பேரன்கள்.

சந்திரசேகரன் செயலூக்கமும் தன் முனைப்பும் கொண்டவர். இருவருக்கும் சமமாகக் கிடைத்த நிலத்தை நன்கு கவனித்து,, உழைத்து நாநூறு ஏக்கராக ஆக்கிக்கொண்டவர். மனைவி ரோகிணி பேரழகி, நகரத்தில் வளர்ந்தவள், கிராமத்துடன் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் ,கணவனின் அன்புக்காக ஏங்கி அவன் தன் அழகை ஆராதிக்க வேண்டுமென்று விரும்புபவள். சந்திரசேகரன் ஊருக்கெல்லாம் இன்முகம் காட்டி, மனைவியைத் துரும்பாக மதிப்பவர்.

சுப்பையா சிறு வயதிலிருந்தே சந்திரசேகரனுடன் ஒப்பிடப்பட்டே வளர்ந்தவன். அவன் தாய் மட்டுமே அவன்மேல் நம்பிக்கை வைத்து நடத்திச் சென்றவள். தாயின் மரணத்துக்குப்பின் சுப்பையாவின் மனம் அமர்ந்து விட்டது. செயலூக்கமின்றி கடும் மன அழுத்தத்தோடு வாழ்கிறான். மனைவி விச்சுவும் அவனை சந்திரசேகரனோடு ஒப்பிட்டு தேளாகக் கொட்டுகிறாள்.

பிச்சாண்டி முற்போக்குக் கொள்கைகளும், எதற்கும் அஞ்சா நெஞ்சுரமும் உடைய இளைஞன். குடும்பக் கட்டுப்பாடு, பொதுவுடமை பற்றியெல்லாம் பிரச்சாரம் செய்பவன். பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறான். ரோகிணியும் அவனும் மனதிற்குல் ஒருவரையொருவர் ஆராதிக்கிறார்கள்.

இதிலும் மணவினை தாண்டிய உறவுகள், தடை தாண்டிய காமம் மற்றும் தாண்டாத காமமாக வருகின்றன.

கதை மாந்தர்

இலக்கிய இடம்

உசாத்துணை

வாசவேஸ்வரம்-Silicon Shelf

சில கடிதங்களும் இரண்டு நாவல்களும்- கிருத்திகா