வாஸவேச்வரம் (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
Line 10: Line 10:


== உருவாக்கம், பதிப்பு ==
== உருவாக்கம், பதிப்பு ==
கிருத்திகா 1966 ல் எழுதிய வாசவேஸ்வரம் நாவலில் தன் புகுந்த ஊரான திருப்பதிசாரத்தைக் களமாக்கி, அங்கு வாழ்ந்த மக்களின் சாயலில் கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார்.  சுதந்திரத்துப்பின்  ஒரு சிறிய வட்டத்தில் ஆன்மா தேங்கி நின்ற, அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு இன்னும் தலை தூக்காத கிராமத்தை சித்தரித்திருக்கிறார். முதல் பதிப்பு 1966ல்  தி.ஜானகிராமனின் ''அம்மா வந்தாள்''  வெளிவந்த அதே வருடம்  வெளிவந்தது. காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் பதிப்பு 2007 டிசம்பரில் வெளி வந்தது.
கிருத்திகா 1966 ல் எழுதிய ''வாசவேஸ்வரம்'' நாவலில் தன் புகுந்த ஊரான திருப்பதிசாரத்தைக் களமாக்கி, அங்கு வாழ்ந்த மக்களின் சாயலில் கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார்.  சுதந்திரத்துப்பின்  ஒரு சிறிய வட்டத்தில் ஆன்மா தேங்கி நின்ற, அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு இன்னும் தலை தூக்காத கிராமத்தை சித்தரித்திருக்கிறார். முதல் பதிப்பு 1966ல்  தி.ஜானகிராமனின் ''அம்மா வந்தாள்''  வெளிவந்த அதே வருடம்  வெளிவந்தது. காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் பதிப்பு 2007 டிசம்பரில் வெளி வந்தது.


== கதைச்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==
== கதை மாந்தர் ==


== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==

Revision as of 00:26, 19 March 2022

நன்றி:காலச்சுவடு பதிப்பகம்

வாசவேஸ்வரம் கிருத்திகா (மதுரம் பூதலிங்கம்) எழுதிய, வாசவேஸ்வரம் என்ற ஒரு சிறிய வட்டத்தில் ஆன்மா தேங்கி நிற்கும் கற்பனை கிராமத்தில் 1940 களில் நடக்கும் கதை. தன்முனைப்பும் காமமுமே மனிதர்களைச் செலுத்தும் விசையாக இருக்கின்றன. தமிழின் முக்கியமான நாவல்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது

நவீன தமிழ்ப் புனைவுகளில் பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதிய முதல்​பெண் படைப்பாளி கிருத்திகா இவரது நான்காவது நாவல் வாஸவேச்வரம் கதாகாலட்சேபத்துடன் முடிவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல் தமிழகத்தின்​தென்பகுதியிலுள்ள ஒரு கற்பனைக்கிராமத்தை கதாபத்திரங்களை ​மையமாகக் கொண்டு கனவுகளாலும் கதைகளாலும் புனையப்பட்டுள்ள வாழ்வியல் சம்பிரதாயங்களின் திரை நீக்கி அவற்றின் யதார்த்தத்தை உணர்த்துகிறது, எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் கடந்தபின்னும் புத்துணர்ச்சியுடன் படிக்க முடிவதே இந்த நாவலின் சிறப்பு,

ஆசிரியர்

கிருத்திகா வின் இயற்பெயர் மதுரம் பூதலிங்கம் ( 1915 - 2009) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர். தமிழில் கிருத்திகா என்ற புனைபெயரிலும் ஆங்கிலத்தில் மதுரம் பூதலிங்கம் என்ற பெயரிலும் எழுதினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகே பூதப்பாண்டியில் பிறந்து, மும்பையில் வளர்ந்தவர். திருப்பதிசாரத்தைச்(திருவெண்பரிசாரம்) சேர்ந்த இந்திய அரசில் உயரதிகாரியாக இருந்த பூதலிங்கம் பிள்ளையை மணம் செய்துகொண்டார்.

.ஆங்கிலத்தில் மிக அழகாக மேடையில் பேசக்கூடியவர். சம்ஸ்கிருதத்திலும் பெரும்புலமை படைத்தவர். பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தமிழில் புகை நடுவினில், சத்யமேவ, பொன்கூண்டு, வாஸவேஸ்வரம். தர்ம ஷேத்ரே ,புதிய கோணங்கி,நேற்றிருந்தோம் போன்ற நாவல்களை எழுதியவர்.

உருவாக்கம், பதிப்பு

கிருத்திகா 1966 ல் எழுதிய வாசவேஸ்வரம் நாவலில் தன் புகுந்த ஊரான திருப்பதிசாரத்தைக் களமாக்கி, அங்கு வாழ்ந்த மக்களின் சாயலில் கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார். சுதந்திரத்துப்பின் ஒரு சிறிய வட்டத்தில் ஆன்மா தேங்கி நின்ற, அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு இன்னும் தலை தூக்காத கிராமத்தை சித்தரித்திருக்கிறார். முதல் பதிப்பு 1966ல் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் வெளிவந்த அதே வருடம் வெளிவந்தது. காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் பதிப்பு 2007 டிசம்பரில் வெளி வந்தது.

கதைச்சுருக்கம்

கதை மாந்தர்

இலக்கிய இடம்

உசாத்துணை

வாசவேஸ்வரம்-Silicon Shelf

சில கடிதங்களும் இரண்டு நாவல்களும்- கிருத்திகா