first review completed

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்: Difference between revisions

From Tamil Wiki
Line 16: Line 16:
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தை டேவிற் றேர்னர் என்ற திரைப்படக்க கலைஞர் திரைப்படத் துறையில் நுழையுமாறு ஊக்கப்படுத்தினார். அவர் பயின்ற திரைப்படக் கல்லூரியில் அத்திரைப்படப் பயிற்சியைப் பெற்ற முதல் ஆசியப் பெண்ணாக ராஜேஸ்வரி ஆனார். அத்திரைப்படக் கல்லூரியின் அதிபர் ப்ரசித் கையம் இவரை ஊக்குவித்தார். பயிற்சி நெறிக்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆராய்ச்சிக் கட்டுரைக்காகத் தமிழகம் சென்றபோது பாலுமகேந்திரா உட்பட்ட பல்வேறு திரைப்படக் கலைஞர்களைச் சந்தித்து உரையாடினார்.  

ஈழத்தில் தமிழ் அகதிகளை அடிப்படையாகக் கொண்டு ‘Escape From Genocide’ என்ற விவரண ஆவணப்படத்தை 1986ஆம் ஆண்டிலும், ‘Private Place’ என்ற திருமண வாழ்வில் பாலியல் வன்முறை தொடர்பான 16MM என்ற திரைப்படத்தை 1988-ஆம் ஆண்டிலும் தயாரித்துள்ளார்.  
ஈழத்தில் தமிழ் அகதிகளை அடிப்படையாகக் கொண்டு ‘Escape From Genocide’ என்ற விவரண ஆவணப்படத்தை 1986ஆம் ஆண்டிலும், திருமண வாழ்வில் பாலியல் வன்முறை தொடர்பான "The Private Place – A 16 mm Film" என்ற திரைப்படத்தை 1988-ஆம் ஆண்டிலும் தயாரித்தார்.
 
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
"ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதன்மையாக ஒரு சமூகப்பணியாளர். அரசியல் செயல்பாட்டாளர். அவரது புனைகதைகள் அனைத்தும் அந்த கருத்தியல்செயல்பாட்டின் பகுதியாக அமையும் பிரச்சார நோக்கம் கொண்டவை." என எழுத்தாளர் [[ஜெயமோகன்]] மதிப்பிட்டார்.

Revision as of 09:49, 11 February 2024

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (பிறப்பு: ஜனவரி 1, 1943) ஈழத்துப் பெண் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர். சமூகப்பணியாளர். அரசியல் செயல்பாட்டாளர். சிறுகதைகள், நாவல்கள், ஆய்வுக் கட்டுரைகள், மருத்துவ நூல்கள் எழுதினார்.

பிறப்பு, கல்வி

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இலங்கை அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கோளாவிலில் ஜனவரி 1, 1943-ல் பிறந்தார். கந்தப்பர் குழந்தைவேல், கந்தையா மாரிமுத்து ஆகியோரின் மூன்றாவது குழந்தை. யாழ்ப்பாணத்தில் தாதியாகப் பணிபுரிந்தார். 1988-ல் இங்கிலாந்தில் திரைப்படத்துறையில் சிறப்புப்பட்டம் (London College of Printing) பெற்ற முதல் ஆசியப் பெண்மணி. 1966-இல் லண்டன் பல்கலைக்கழகத்தில் மானிட மருத்துவ வரலாற்றுத்துறையில் முதுமாணிப் பட்டம் (London University) பெற்ற முதல் ஆசியப் பெண்.

தனிவாழ்க்கை

ராஜேஸ்வரி 1969ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியத்தை மணந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். 1970 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்த்தில் அவரது கணவர் பாலசுப்ரமணியம் அவர்களின் தொடர்பால் முற்போக்கு இலக்கியங்கள் அவருக்கு அறிமுகமாகின. சாதியக் கொடுமையால் எரிகாயங்களுக்கு இலக்காகிப் பரிதாபமாய் இறந்துபோன ஒரு கொடுமையை மையமாக வைத்து ‘சித்திரத்தில் பெண் எழுதி’ என்ற சிறுகதை செ.யோகநாதன் நடாத்திய ‘வசந்தம்’ என்ற பத்திரிகையில் பிரசுரமாகிருந்தது. டொமினிக் ஜீவா நடாத்திய மல்லிகையிலும் ‘எழில்நந்தி’ என்ற புனைபெயரில் அவர் எழுதி வந்திருக்கின்றார். ‘கோடை விடுமுறை’ என்ற அவரது முதல் நாவல் ‘அலை’ வெளியீட்டினரால் பிரசுரம் பெற்று தில்லையாற்றங்கரை, உலகமெல்லாம் வியாபாரிகள், 'தேம்ஸ் நதிக்கரையில்' (1992), 'பனி பெய்யும் இரவுகள்' (1993) 'வசந்தம் வந்து போய்விட்டது' (1997), 'அவனும் சில வருடங்களும்' (2000) ஆகிய நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.

‘இந்தியா டுடே’ என்ற சஞ்சிகையில் தொடர்ச்சியாக ‘விருந்தினர் பக்கம்’ என்ற பிரிவில் எழுதி வந்திருக்கிறார். கோவை ஞானி ராஜேஸ்வரியின் இலக்கிய முயற்சிகளுக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்து வந்திருக்கிறார். தமிழகத்தில் அவரது நூல்களை வெளிக்கொணர்வதில் செ.கணேசலிங்கன் அவர்கள் பல உதவிகள் செய்துள்ளார்.

மருத்துவ நூல்கள், ஆராய்ச்சி நூல் முதலானவற்றையும் சிறுகதை, நாவல் முதலிய புனைவிலக்கியங்களையும் படைத்துள்ளார். 'தாயும் சேயும்' என்ற மருத்துவ நூலை 2002-ல் வெளியிட்டார். 'உங்கள் உடல் உளம் பாலியல் நலம்' என்ற மருத்துவ அறிவியல் வகையைச் சேர்ந்த நூலை 2003-ஆம் ஆண்டு வெளியிட்டார். தமிழ்கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும் எனும் நூலை 2000-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

திரைவாழ்க்கை

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தை டேவிற் றேர்னர் என்ற திரைப்படக்க கலைஞர் திரைப்படத் துறையில் நுழையுமாறு ஊக்கப்படுத்தினார். அவர் பயின்ற திரைப்படக் கல்லூரியில் அத்திரைப்படப் பயிற்சியைப் பெற்ற முதல் ஆசியப் பெண்ணாக ராஜேஸ்வரி ஆனார். அத்திரைப்படக் கல்லூரியின் அதிபர் ப்ரசித் கையம் இவரை ஊக்குவித்தார். பயிற்சி நெறிக்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆராய்ச்சிக் கட்டுரைக்காகத் தமிழகம் சென்றபோது பாலுமகேந்திரா உட்பட்ட பல்வேறு திரைப்படக் கலைஞர்களைச் சந்தித்து உரையாடினார்.

ஈழத்தில் தமிழ் அகதிகளை அடிப்படையாகக் கொண்டு ‘Escape From Genocide’ என்ற விவரண ஆவணப்படத்தை 1986ஆம் ஆண்டிலும், திருமண வாழ்வில் பாலியல் வன்முறை தொடர்பான "The Private Place – A 16 mm Film" என்ற திரைப்படத்தை 1988-ஆம் ஆண்டிலும் தயாரித்தார்.

இலக்கிய இடம்

"ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதன்மையாக ஒரு சமூகப்பணியாளர். அரசியல் செயல்பாட்டாளர். அவரது புனைகதைகள் அனைத்தும் அந்த கருத்தியல்செயல்பாட்டின் பகுதியாக அமையும் பிரச்சார நோக்கம் கொண்டவை." என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிட்டார்.

விருது

  • விபவி இலக்கிய விருது
  • சிறந்த சிறுகதைக்கான ‘சுபமங்களா’ இதழின் பரிசு
  • அக்கரைப்பற்று எழுத்தாளர்களால் வழங்கப்பட்ட கலைவாணி விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது

நூல் பட்டியல்

நாவல்
  • ஒரு கோடை விடுமுறை
  • தில்லையாற்றங்கரை
  • உலகமெல்லாம் வியாபாரிகள்
  • தேம்ஸ் நதிக்கரையில் (1992)
  • பனி பெய்யும் இரவுகள் (1993)
  • வசந்தம் வந்து போய்விட்டது (1997)
  • அவனும் சில வருடங்களும்
  • நாளைய மனிதர்கள்
சிறுகதை
  • நேற்றைய மனிதர்கள்
  • லண்டன் 1995
  • அரைகுறை அடிமைகள்
  • ஏக்கம்
மருத்துவ நூல்
  • உங்கள் உடல் உளம் பாலியல் நலம்
  • தாயும் சேயும்
ஆராய்ச்சி நூல்
  • தமிழ்கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்

உசாத்துணை

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.