பட்டினத்து அடிகள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:பட்டினத்து அடிகள்.png|thumb|276x276px|பட்டினத்து அடிகள்]]
பட்டினத்து அடிகள்  (குருபூஜை நாள் ஜூலை 30) பொ.யு 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர்.  பதினொன்றாம் திருமுறை முதலான ஐந்து பிரபந்தங்களை எழுதியவர்.  
பட்டினத்து அடிகள்  (குருபூஜை நாள் ஜூலை 30) பொ.யு 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர்.  பதினொன்றாம் திருமுறை முதலான ஐந்து பிரபந்தங்களை எழுதியவர்.  

Line 14: Line 15:
== பாராட்டு ==
== பாராட்டு ==
* பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப்பிள்ளை போல் யாரும் துறப்பதரிதரிது
* பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப்பிள்ளை போல் யாரும் துறப்பதரிதரிது
[[File:பட்டினத்து அடிகள் சமாதி (திருவொற்றியூர்).webp|thumb|பட்டினத்து அடிகள் சமாதி (திருவொற்றியூர்)]]

== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==

Revision as of 16:18, 15 March 2022

பட்டினத்து அடிகள்

பட்டினத்து அடிகள் (குருபூஜை நாள் ஜூலை 30) பொ.யு 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர். பதினொன்றாம் திருமுறை முதலான ஐந்து பிரபந்தங்களை எழுதியவர்.

பிறப்பு

பட்டினத்து அடிகளின் காலம் பொ.யு 10ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம். இவர் ஒரு சிவனடியார். காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்தார். சிவநேசருக்கும், ஞானகலாம்பகைக்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் திருவெண்காடர். வாணிகத்தொழில் செய்து வந்தார். சிவகலை என்பவரை மணம் புரிந்தார். பிள்ளைப்பெயரில்லாமையால் மருதவாணரைத் தத்தெடுத்துக் கொண்டார்.

திருவொற்றியூர் கோவில்

திருவொற்றியூரில்தான் தனக்கு முக்தி என்பதை உணர்ந்து அங்கு லிங்க வடிவாக மாறி சிவசமாதி அடைந்ததாக நம்பப்படுகிறது. முக்தியும் பெற்றார். பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப் பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். பட்டினத்தார் முக்தியடைந்த ஆடி உத்திராடம் குருபூஜை விழாவாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.

வேறு பெயர்கள்

  • திருவெண்காடர்
  • திருவெண்காட்டு அடிகள்
  • பட்டினத்துப் பிள்ளையார்

பாராட்டு

  • பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப்பிள்ளை போல் யாரும் துறப்பதரிதரிது
பட்டினத்து அடிகள் சமாதி (திருவொற்றியூர்)

நூல் பட்டியல்

  • பதினொன்றாம் திருமுறைப் பிரபந்தங்கள்
  • திருக்கழுமல மும்மணிக்கோவை
  • கோயில் நான்மணிமாலை
  • நினைமின்மனனே
  • திருவேகம்பமுடையார் திருவந்தாதி
  • திருவேகம்பமாலை
  • கச்சித்திரு அகவல்

உசாத்துணை