being created

பிழைக்கும் வழி: Difference between revisions

From Tamil Wiki
(Page Created by ASN)
 
mNo edit summary
Line 1: Line 1:
[[File:Pizhaikkum vazhi magazine.jpg|thumb|பிழைக்கும் வழி இதழ் - டிசம்பர், 1918]]
[[File:Pizhaikkum vazhi magazine.jpg|thumb|பிழைக்கும் வழி இதழ் - டிசம்பர், 1918]]
பிழைக்கும் வழி (1909) விவசாயம் தொடர்பாக வெளிவந்த தமிழின் முன்னோடி இதழ்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் ஜி.ஏ. வைத்தியராமன்.  
பிழைக்கும் வழி (1909) விவசாயம் தொடர்பாக வெளிவந்த தமிழின் முன்னோடி இதழ்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் ஜி.ஏ. வைத்தியராமன்.  
(’பிழைக்கும் வழி’ என்ற தலைப்பில், 1948-ல் தமிழ்த்  திரைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது)

== பிரசுரம், வெளியீடு ==
== பிரசுரம், வெளியீடு ==
விவசாயம் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பதிப்பாளர் ஜி.ஏ. நடேசனின் சகோதரரான ஜி.ஏ. வைத்தியராமன், பிழைக்கும் வழி என்ற இதழை, ஜனவரி 1909-ல், தொடங்கினார்.  
விவசாயம் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பதிப்பாளர் [[ஜி.ஏ. நடேசன்|ஜி.ஏ. நடேசனின்]] சகோதரரான ஜி.ஏ. வைத்தியராமன், பிழைக்கும் வழி என்ற இதழை, ஜனவரி 1909-ல் தொடங்கினார். இவர், 1908-ல் [[ஜனாபிமானி]] என்ற இதழையும் தொடங்கி நடத்தினார்.  

80 பக்கங்களுடன் வெளிவந்த பிழைக்கும் வழி இதழின் தனிப்பிரதி விலை: உள்நாடு - ஆறணா; வெளிநாடு - எட்டணா. ஆண்டுச் சந்தா: உள்நாடு - நான்கு ரூபாய்;  வெளிநாடு - ஆறு ரூபாய்.  
80 பக்கங்களுடன் வெளிவந்த பிழைக்கும் வழி இதழின் தனிப்பிரதி விலை: உள்நாடு - ஆறணா; வெளிநாடு - எட்டணா. ஆண்டுச் சந்தா: உள்நாடு - நான்கு ரூபாய்;  வெளிநாடு - ஆறு ரூபாய்.  

Revision as of 22:42, 23 January 2024

பிழைக்கும் வழி இதழ் - டிசம்பர், 1918

பிழைக்கும் வழி (1909) விவசாயம் தொடர்பாக வெளிவந்த தமிழின் முன்னோடி இதழ்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் ஜி.ஏ. வைத்தியராமன்.

(’பிழைக்கும் வழி’ என்ற தலைப்பில், 1948-ல் தமிழ்த் திரைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது)

பிரசுரம், வெளியீடு

விவசாயம் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பதிப்பாளர் ஜி.ஏ. நடேசனின் சகோதரரான ஜி.ஏ. வைத்தியராமன், பிழைக்கும் வழி என்ற இதழை, ஜனவரி 1909-ல் தொடங்கினார். இவர், 1908-ல் ஜனாபிமானி என்ற இதழையும் தொடங்கி நடத்தினார்.

80 பக்கங்களுடன் வெளிவந்த பிழைக்கும் வழி இதழின் தனிப்பிரதி விலை: உள்நாடு - ஆறணா; வெளிநாடு - எட்டணா. ஆண்டுச் சந்தா: உள்நாடு - நான்கு ரூபாய்; வெளிநாடு - ஆறு ரூபாய்.

உள்ளடக்கம்

இதழின் முகப்புப் பக்கத்தில், “விவஸாயம், வியாபாரம், கைத்தொழில், பிரஜாலக்ஷணம், வித்தியா விஷயங்கள் அடங்கிய சகலருக்கும் உபயோகமான ஒரு மாதாந்தத் தமிழ்ப் பத்திரிகை” என்ற குறிப்பு இடம் பெற்றது. இதழின் பெயரான ‘பிழைக்கும் வழி’ என்பதன் கீழ் PRACTICAL LIFE என்ற ஆங்கில வாசகம் இடம்பெற்றது.

’பத்திராதிபர் குறிப்புகள்’ என்ற பத்தியில், இதழில் வெளியான சிறப்புப் பகுதிகள் குறித்த சுருக்க அறிமுகமும், ஆசிரியரின் குறிப்புகளும் இடம் பெற்றன. விவசாயம், கைத்தொழில், வர்த்தகம், கல்வி, சுகாதாரம் தொடர்பான செய்திகள் வெளிவந்தன. தேசியத் தலைவர்கள் வரலாறு, காங்கிரஸ் செய்திகள், இலக்கியம் போன்றவற்றிற்கும் இவ்விதழ் முக்கியத்துவம் அளித்தது. சிறு சிறுகதைகளும் வெளியாகின.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.