அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை)
 
(அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை - முதல் வரைவு)
Line 1: Line 1:
அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை(1904-1965) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை (செப்டம்பர் 3, 1904 - அக்டோபர் 14, 1965) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

== இளமை, கல்வி ==
== இளமை, கல்வி ==
தஞ்சாவூர் அருகே உள்ள அய்யம்பேட்டையில் பாக்கியத்தம்மாளின் மகனாக செப்டம்பர் 3, 1904 அன்று வேணுகோபால் பிள்ளை பிறந்தார்.
அய்யம்பேட்டை வீரப்பத்திரப் பிள்ளையிடம் முதலில் இசைப்பயிற்சி பெற்றார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு [[திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை]]யிடம் குருகுலவாசமாக நாதஸ்வரத்தில் மேற்பயிற்சி பெற்றார். கீர்த்தனைகளை சாஹித்யமாகக் கற்றவர்.

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
வேணுகோபால் பிள்ளை உடன்பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள்:
* மூத்த சகோதரி பாப்பம்மாள் (கணவர்: அய்யம்பேட்டை கிருஷ்ண பிள்ளை (நாதஸ்வரம்))
* ஞானசுந்தரம் பிள்ளை (தவில்)
* கணேச பிள்ளை (நாதஸ்வரம்)
* ராஜாத்தியம்மாள் (கணவர்: பரத விதூஷி பரோடா கௌரியம்மாள் மகன் துளஸீதாஸ் பிள்ளை)
* ஆறுமுகம் பிள்ளை (கணபதி அக்கிரகாரத்தில் வசித்தவர்)
* தர்மாம்பாள் (கணவர்: கும்பகோணம் வெங்கடாசலம் பிள்ளை)
அய்யம்பேட்டை கிருஷ்ண பிள்ளை என்ற நாதஸ்வரக் கலைஞரின் மகள் விசாலாக்ஷியம்மாளை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள்:
* சுப்பிரமணியம் (நாதஸ்வரம்)
* கனகம்மாள்
* கார்த்திகேயன்
* விஜயா
* சுசீலா

== இசைப்பணி ==
== இசைப்பணி ==
ராக ஆலாபனையில் புகழ் பெற்றிருந்த வேணுகோபால் பிள்ளை தோடி ராகத்தை முற்றிலும் கமகங்களாக வாசிக்கும் திறன் பெற்றிருந்தார். தோடி ராகத்துக்கு பெயர் பெற்ற திருவாவடுதுறை [[டி. என். ராஜரத்தினம் பிள்ளை]] வாசிக்கும் இடங்களில், வேணுகோபால் பிள்ளை தன் பாணியில் தோடி வாசித்துப் பலரது பாராட்டுக்களைப் பெற்றவர்.
பல மணி நேரம் தொடர்ந்து களைப்பின்றி ராக ஆலாபனை செய்வதில் வல்லவர். இவரது இசையை பாராட்டி கும்பகோணத்தில் ‘நல்லிசை நம்பி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. உடையார்பாளையம் ஜமீன், செட்டிநாடு முதலிய இடங்களில் பல பதக்கங்கள், சாதராக்கள் போன்ற பரிசுகளைப் பெற்றிருக்கிறார். சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் ஐந்து பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

====== மாணவர்கள் ======
====== மாணவர்கள் ======
அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
* ஏ.டி. கோவிந்தராஜ பிள்ளை (பம்பாயில் புகழ்பெற்ற நாட்டிய ஆசிரியராக விளங்கியவர், முதலில் நாதஸ்வரக் கலைஞர்)
* திருக்காட்டுப்பள்ளி வேணுகோபாலன்
* உறையூர் நாராயணஸ்வாமி
* சங்கீத வித்வான் மதுரை ஜி.எஸ். மணி (வாய்ப்பாட்டு கற்றார்)

====== தவில் வாசித்த இசைக்கலைஞர்கள் ======
====== தவில் வாசித்த இசைக்கலைஞர்கள் ======
அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

* அம்மாப்பேட்டை பக்கிரிப் பிள்ளை
* ஞானசுந்தரம் பிள்ளை (சகோதரர்)
* வேதாரண்யம் பொதுச்சாமி பிள்ளை
*உமையாள்புரம் தங்கவேல் பிள்ளை
* திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளை
*[[நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை]]
* நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
*மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளை
* திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
*திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
* கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
*கரந்தை ரத்தினம் பிள்ளை
* திருமங்கலம் சுந்தரேச பிள்ளை
*கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
* நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை
*கூறைநாடு கோவிந்தராஜ பிள்ளை
* நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் பிள்ளை
*நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை
* யாழ்ப்பாணம் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை
*நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் பிள்ளை
* திருவிடைமருதூர் வெங்கடேச பிள்ளை

== மறைவு ==
== மறைவு ==
திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை ஏப்ரல் 19, 1973அன்று மறைந்தார்.
அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை அக்டோபர் 14, 1965 அன்று மறைந்தார்.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

Revision as of 19:38, 12 March 2022

அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை (செப்டம்பர் 3, 1904 - அக்டோபர் 14, 1965) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

தஞ்சாவூர் அருகே உள்ள அய்யம்பேட்டையில் பாக்கியத்தம்மாளின் மகனாக செப்டம்பர் 3, 1904 அன்று வேணுகோபால் பிள்ளை பிறந்தார்.

அய்யம்பேட்டை வீரப்பத்திரப் பிள்ளையிடம் முதலில் இசைப்பயிற்சி பெற்றார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளையிடம் குருகுலவாசமாக நாதஸ்வரத்தில் மேற்பயிற்சி பெற்றார். கீர்த்தனைகளை சாஹித்யமாகக் கற்றவர்.

தனிவாழ்க்கை

வேணுகோபால் பிள்ளை உடன்பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள்:

  • மூத்த சகோதரி பாப்பம்மாள் (கணவர்: அய்யம்பேட்டை கிருஷ்ண பிள்ளை (நாதஸ்வரம்))
  • ஞானசுந்தரம் பிள்ளை (தவில்)
  • கணேச பிள்ளை (நாதஸ்வரம்)
  • ராஜாத்தியம்மாள் (கணவர்: பரத விதூஷி பரோடா கௌரியம்மாள் மகன் துளஸீதாஸ் பிள்ளை)
  • ஆறுமுகம் பிள்ளை (கணபதி அக்கிரகாரத்தில் வசித்தவர்)
  • தர்மாம்பாள் (கணவர்: கும்பகோணம் வெங்கடாசலம் பிள்ளை)

அய்யம்பேட்டை கிருஷ்ண பிள்ளை என்ற நாதஸ்வரக் கலைஞரின் மகள் விசாலாக்ஷியம்மாளை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள்:

  • சுப்பிரமணியம் (நாதஸ்வரம்)
  • கனகம்மாள்
  • கார்த்திகேயன்
  • விஜயா
  • சுசீலா

இசைப்பணி

ராக ஆலாபனையில் புகழ் பெற்றிருந்த வேணுகோபால் பிள்ளை தோடி ராகத்தை முற்றிலும் கமகங்களாக வாசிக்கும் திறன் பெற்றிருந்தார். தோடி ராகத்துக்கு பெயர் பெற்ற திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை வாசிக்கும் இடங்களில், வேணுகோபால் பிள்ளை தன் பாணியில் தோடி வாசித்துப் பலரது பாராட்டுக்களைப் பெற்றவர்.

பல மணி நேரம் தொடர்ந்து களைப்பின்றி ராக ஆலாபனை செய்வதில் வல்லவர். இவரது இசையை பாராட்டி கும்பகோணத்தில் ‘நல்லிசை நம்பி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. உடையார்பாளையம் ஜமீன், செட்டிநாடு முதலிய இடங்களில் பல பதக்கங்கள், சாதராக்கள் போன்ற பரிசுகளைப் பெற்றிருக்கிறார். சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் ஐந்து பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

மாணவர்கள்

அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • ஏ.டி. கோவிந்தராஜ பிள்ளை (பம்பாயில் புகழ்பெற்ற நாட்டிய ஆசிரியராக விளங்கியவர், முதலில் நாதஸ்வரக் கலைஞர்)
  • திருக்காட்டுப்பள்ளி வேணுகோபாலன்
  • உறையூர் நாராயணஸ்வாமி
  • சங்கீத வித்வான் மதுரை ஜி.எஸ். மணி (வாய்ப்பாட்டு கற்றார்)
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

  • ஞானசுந்தரம் பிள்ளை (சகோதரர்)
  • உமையாள்புரம் தங்கவேல் பிள்ளை
  • நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளை
  • திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
  • கரந்தை ரத்தினம் பிள்ளை
  • கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
  • கூறைநாடு கோவிந்தராஜ பிள்ளை
  • நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை
  • நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் பிள்ளை

மறைவு

அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை அக்டோபர் 14, 1965 அன்று மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013