under review

கு. கதிரவேற்பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 3: Line 3:
கு. கதிரவேற்பிள்ளை ( 1829- ) (வைமன் கு. கதிரவேற்பிள்ளை) (Wyman Kathiravetpillai) (1829 - ஏப்ரல் 14, 1904) தமிழ் அகராதி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். இலங்கையில் வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் பணியாற்றினார்.  தமிழ்ச் சொல் அகராதியை உருவாக்கியவர். இலங்கை இதழியலாளர்களில் முன்னோடி.   

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
====== மூதாதையர் ======
வல்வட்டித்துறை வேவில் வீரகத்திவிநாயகர் ஆலயம் கட்டிய “அடப்பனார்” ஐயம்பெருமாள் வேலாயுதம் பிள்ளை கதிரவேற்பிள்ளையின் தந்தை வழி பாட்டனார். வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் கட்டிய புண்ணியமூர்த்தி அவருடைய தாய்வழி பாட்டனார். அவர் தந்தை [[க. குமாரசுவாமி முதலியார்]] தமிழறிஞர்
====== பிறப்பு ======
கதிரவேற்பிள்ளை யாழ்ப்பாண மாவட்டம், உடுப்பிட்டியைச் சேர்ந்த க. குமாரசுவாமி முதலியாருக்கும் வல்வெட்டித்துறை புண்ணியமூர்த்தியின் மகள் சிவகாமிக்கும்  1829-ல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் சபாபதி முதலியார், மீனாட்சிப்பிள்ளை.  

கதிரவேற்பிள்ளை தன் தாய்வழிப்பேரன் புண்ணியமூர்த்தி மணியகாரரால் ஆரம்பிக்கப்பட்ட திண்ணைப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார்.  
====== கல்வி ======
கதிரவேற்பிள்ளை தன் தாய்வழித்தாத்தா புண்ணியமூர்த்தி மணியகாரரால் ஆரம்பிக்கப்பட்ட திண்ணைப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார்.  

1841-ல் [[வட்டுக்கோட்டை குருமடம்|வட்டுக்கோட்டை குருமடத்தில்]] சேர்ந்து உயர்கல்வி கற்றார். அங்கே தனது ஆசிரியராக இருந்த வைமனின் பெயரை தனது முதல் பெயராக சேர்த்துக்கொண்டு வைமன் கு. கதிரவேற்பிள்ளை என பெயர் பெற்றார்.
1841-ல் [[வட்டுக்கோட்டை குருமடம்|வட்டுக்கோட்டை குருமடத்தில்]] சேர்ந்து உயர்கல்வி கற்றார். அங்கே தனது ஆசிரியராக இருந்த வைமனின் பெயரை தனது முதல் பெயராக சேர்த்துக்கொண்டு வைமன் கு. கதிரவேற்பிள்ளை என பெயர் பெற்றார். [[கரோல் விசுவநாதபிள்ளை]], [[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]] போன்றவர்கள் அக்காலத்தில் வட்டுக்கோட்டை குருமடத்தில் பயின்றனர்.
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
கதிரவேற்பிள்ளை 1862-ல் உடுப்பிட்டியைச் சேர்ந்த முருகேசர் என்பவரின் மகளை மணந்தார். இவர்களுக்கு குமாரசாமி எனும் மகனும், திருத்தாட்சிப்பிள்ளை, பூம்பாவைப்பிள்ளை, சகுந்தலைப்பிள்ளை என்னும் மூன்று மகள்களும் பிறந்தனர். மகன் குமாரசாமி இளம் வயதிலேயே காலமானார். 1872-ஆம் ஆண்டில் மனைவி காலமானார்.  

Line 15: Line 21:
கதிரவேற்பிள்ளைக்கும் சிவகாமிப்பிள்ளைக்கும் பிறந்தவர் [[க. பாலசிங்கம்]] (1876-1952). இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கையின் நிறைவேற்றுப் பேரவையின் உறுப்பினராக இருந்தார்.

== ஆசிரியப் பணி ==
== ஆசிரியப் பணி ==
கதிரவேற்பிள்ளை 1848 - 1851-ல் வட்டுக்கோட்டை குருமடத்தில் ஆசிரியப்பணியில் சேர்ந்தார். ஆகஸ்ட் 1, 1851-ல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உவெசுலியன் கல்லூரி ஆசிரியராகச் சேர்ந்தார். ஏப்ரல் 24, 1855-ல் ஆசிரியத் தொழிலிலிருந்து விலகிக் கொண்டு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார்.
கதிரவேற்பிள்ளை 1848 - 1851-ல் வட்டுக்கோட்டை குருமடத்தில் ஆசிரியப்பணி புரிந்தார். ஆகஸ்ட் 1, 1851-ல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உவெசுலியன் கல்லூரி ஆசிரியராகச் சேர்ந்தார். ஏப்ரல் 24, 1855-ல் ஆசிரியத் தொழிலிலிருந்து விலகிக் கொண்டு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார்.

== இதழியல் ==
== இதழியல் ==
கதிரவேற்பிள்ளை மத்திய கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மே 6, 1853-ல் ’லிட்ரரி மிரர்’ (Literary Mirror) என்னும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வந்தார்.  
கதிரவேற்பிள்ளை மத்திய கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மே 6, 1853-ல் ’[[லிட்ரரி மிரர்]]’ (Literary Mirror) என்னும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வந்தார்.  

கல்விப் பரவலை நோக்கமாகக் கொண்டு வித்தியாதர்ப்பணம் என்னும் இதழையும் கதிரவேற்பிள்ளை நடத்தினார்.

கதிரவேற்பிள்ளை பிப்ரவரி 6, 1863-ல் "சிலோன் பேட்ரியாட்" Ceylon Patriot, இலங்காபிமானி என்ற பெயரில் ஒரு தமிழ் -ஆங்கில வாரப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார்.   
கதிரவேற்பிள்ளை பிப்ரவரி 6, 1863-ல் "சிலோன் பேட்ரியாட்" Ceylon Patriot, [[இலங்காபிமானி]] என்ற பெயரில் ஒரு தமிழ் -ஆங்கில வாரப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார்.   

== சட்டப்பணி ==
== சட்டப்பணி ==
====== வழக்கறிஞர் ======
பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி லீச்சிங் என்பவர் கதிரவேற்பிள்ளையை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பணியில் அமர்த்தினார்.  கொழும்பில் இருந்த தோமசு ட்றஸ்ட் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சியாளராக சேர்ந்தார். மே 5, 1858-ல் கொழும்பில் சட்ட அறிஞராக சத்தியப்பிரமாணம் எடுத்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.

இலங்கையின் பிரிட்டிஷ் ஆளுனராக இருந்த சர் வில்லியம் கிரிகரி கதிரவேற்பிள்ளையை மே 21, 1872 அன்று ஊர்காவல்துறை நீதிபதியாக நியமித்தார். 1884-ஆம் ஆண்டில் இலங்கை குடியுரிமை சேவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பருத்தித்துறை, மல்லாகம் சாவகச்சேரி ஆகிய நகரங்களில் காவல்துறை நீதிபதியாகவும், யாழ்ப்பாணம் உயர்நீதிமனற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.  
====== நீதிபதிப் பணி ======
இலங்கையின் பிரிட்டிஷ் ஆளுனராக இருந்த சர் வில்லியம் கிரிகரி கதிரவேற்பிள்ளையை மே 21, 1872 அன்று ஊர்காவல்துறை நீதிபதியாக நியமித்தார். 1884-ஆம் ஆண்டில் இலங்கை குடியுரிமை சேவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.  1884 ஆம் ஆண்டில் பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட உயர்நீதி மன்றத்திற்கு நீதிபதியான கதிரவேற்பிள்ளையவர்கள் 1885 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணநகரில் குடியேறினார். பருத்தித்துறை, மல்லாகம் சாவகச்சேரி ஆகிய நகரங்களில் காவல்துறை நீதிபதியாகவும், யாழ்ப்பாணம் உயர்நீதிமனற நீதிபதியாகவும் பணியாற்றினார்.
 
கதிரவேற்பிள்ளை 1898 நவம்பரில் தனது அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

====== சட்டத்தொகுப்பு ======
கோனலி என்னும் ஆங்கிலேய அதிகாரி டச்சுக்காரர்களால் தொகுக்கபட்ட யாழ்ப்பாணத்தின் தேசவழமைகளின் தொகுப்பினை மறுசீரமைக்கும் பணியினை கதிரவேற்பிள்ளைக்கு அளித்தார். அவர் மீட்டுருவாக்கம் செய்த யாழ்ப்பாணதேச வழமைச்சட்டம் இன்றும் புழக்கத்திலுள்ளது.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
====== நூல்தொகுப்பு ======
1886 ல் ஆங்கிலஆட்சியினரின் கீழ் இருந்த இந்திய மற்றும் காலனித்துவ நாடுகளின் புத்தக கண்காட்சிக்காக நூல்களை திரட்டி அனுப்பினார். அவை லண்டன் அருங்காட்சியக நூலகத்தில் உள்ளன.
====== அகராதி ======
கதிரவேற்பிள்ளை 1870 முதல் தமிழில் ஓர் அகராதியை உருவாக்கும் பணியை தொடங்கினார். சுன்னாகம் [[அ. குமாரசுவாமிப் புலவர்]] இவருக்கு  உதவினார். உடுப்பிட்டி ஆறுமுகம் பிள்ளை, ஊரெழு சு. சரவணமுத்துப் புலவர் ஆகியோரும் அகராதி ஆக்கத்திற்கு உதவினர். 1904-ல் வண்ணார்பண்ணை வி. சபாபதி ஐயரின் அச்சியந்திரசாலையில் 328 பக்கங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்ட தமிழ்ச் சொல் அகராதி அகர வரிசை வரையுமே கொண்டிருந்தது.  

பேரகராதியைத் தொகுத்து முடிப்பதற்குமுன் கதிரவேற்பிள்ளை மறைந்தார். அவர் மகன் க. பாலசிங்கம் மதுரை [[நான்காம் தமிழ்ச்சங்கம்|நான்காம் தமிழ்ச்சங்க]]த்தைக் கொண்டு பேரகராதியை முழுமையாக்கி வெளியிட்டார். 344 நூல்களிலிருந்து இவ் அகராதிக்கு மேற்கோள்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  

கதிரைவேற்பிள்ளை "தர்க்க சூடாமணி" என்ற நூலை 1862-ல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார்.   
====== நூல்கள் ======
கதிரைவேற்பிள்ளை தன் 15 வயதிலேயே இராமாயண விருத்தியுரை என்னும் நூலை எழுதினார். தர்க்க சூடாமணி என்ற நூலை 1862-ல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார்.   
== நினைவுகள் ==
== நினைவுகள் ==
கதிரவேற்பிள்ளை 1885-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்த வீடு "வைமன் வீடு" எனவும், வீடு அமைந்திருந்த வீதி "வைமன் வீதி" எனவும் பெயர் பெற்றது.  

Line 41: Line 60:
கு.கதிரவேற்பிள்ளை தமிழில் தொடக்ககால அகராதிகளை உருவாக்கியவர்களில் ஒருவர். தமிழ் நவீன அகராதி இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவர். இலங்கை  இதழியலின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.

== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* இராமாயண விருத்தியுரை
* தர்க்க சூடாமணி (1862)
* தர்க்க சூடாமணி (1862)
* தமிழ்ச் சொல் பேரகராதி
* தமிழ்ச் சொல் பேரகராதி
Line 46: Line 66:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

* [https://web.archive.org/web/20160304224057/http://www.valvai.com/valvai.com/siva/sons%20of%20the%20land%20002%20cont.html மண்ணின் மைந்தர்கள். இணையநூலகம்]
* [https://viruba.blogspot.com/2016/12/blog-post.html விஞ்ஞானமும் அகராதியும் விருபா]

* [https://www.jstor.org/stable/saoa.crl.29657145 உதயதாரகை பக்கம்]

* [https://tamiljournalism.wordpress.com/2020/05/07/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF/ உதயதாரகை முதல் காலைக்கதிர் வரை]

* [https://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/literature/tarkkachuud_aamand_i.pdf தர்க்கசூடாமணி இணையநூலகம்]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]

Revision as of 12:08, 22 December 2023

கு. கதிரவேற்பிள்ளை
அகராதி 1904

கு. கதிரவேற்பிள்ளை ( 1829- ) (வைமன் கு. கதிரவேற்பிள்ளை) (Wyman Kathiravetpillai) (1829 - ஏப்ரல் 14, 1904) தமிழ் அகராதி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். இலங்கையில் வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் பணியாற்றினார். தமிழ்ச் சொல் அகராதியை உருவாக்கியவர். இலங்கை இதழியலாளர்களில் முன்னோடி.

பிறப்பு, கல்வி

மூதாதையர்

வல்வட்டித்துறை வேவில் வீரகத்திவிநாயகர் ஆலயம் கட்டிய “அடப்பனார்” ஐயம்பெருமாள் வேலாயுதம் பிள்ளை கதிரவேற்பிள்ளையின் தந்தை வழி பாட்டனார். வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் கட்டிய புண்ணியமூர்த்தி அவருடைய தாய்வழி பாட்டனார். அவர் தந்தை க. குமாரசுவாமி முதலியார் தமிழறிஞர்

பிறப்பு

கதிரவேற்பிள்ளை யாழ்ப்பாண மாவட்டம், உடுப்பிட்டியைச் சேர்ந்த க. குமாரசுவாமி முதலியாருக்கும் வல்வெட்டித்துறை புண்ணியமூர்த்தியின் மகள் சிவகாமிக்கும் 1829-ல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் சபாபதி முதலியார், மீனாட்சிப்பிள்ளை.

கல்வி

கதிரவேற்பிள்ளை தன் தாய்வழித்தாத்தா புண்ணியமூர்த்தி மணியகாரரால் ஆரம்பிக்கப்பட்ட திண்ணைப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

1841-ல் வட்டுக்கோட்டை குருமடத்தில் சேர்ந்து உயர்கல்வி கற்றார். அங்கே தனது ஆசிரியராக இருந்த வைமனின் பெயரை தனது முதல் பெயராக சேர்த்துக்கொண்டு வைமன் கு. கதிரவேற்பிள்ளை என பெயர் பெற்றார். கரோல் விசுவநாதபிள்ளை, ஆணல்ட் சதாசிவம்பிள்ளை போன்றவர்கள் அக்காலத்தில் வட்டுக்கோட்டை குருமடத்தில் பயின்றனர்.

தனிவாழ்க்கை

கதிரவேற்பிள்ளை 1862-ல் உடுப்பிட்டியைச் சேர்ந்த முருகேசர் என்பவரின் மகளை மணந்தார். இவர்களுக்கு குமாரசாமி எனும் மகனும், திருத்தாட்சிப்பிள்ளை, பூம்பாவைப்பிள்ளை, சகுந்தலைப்பிள்ளை என்னும் மூன்று மகள்களும் பிறந்தனர். மகன் குமாரசாமி இளம் வயதிலேயே காலமானார். 1872-ஆம் ஆண்டில் மனைவி காலமானார்.

1874-ல் கோப்பாய் கதிரேசு என்பவரின் மகள் சிவகாமிப்பிள்ளையை திருமணம் புரிந்தார். சிவகாமியின் சகோதரர் சுப்பிரமணியம் என்பவருக்கு தனது தங்கை மீனாட்சியைத் திருமணம் செய்து கொடுத்தார். சுப்பிரமணியம்-மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் இந்துபோர்ட் சு. இராசரத்தினம்.

கதிரவேற்பிள்ளைக்கும் சிவகாமிப்பிள்ளைக்கும் பிறந்தவர் க. பாலசிங்கம் (1876-1952). இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கையின் நிறைவேற்றுப் பேரவையின் உறுப்பினராக இருந்தார்.

ஆசிரியப் பணி

கதிரவேற்பிள்ளை 1848 - 1851-ல் வட்டுக்கோட்டை குருமடத்தில் ஆசிரியப்பணி புரிந்தார். ஆகஸ்ட் 1, 1851-ல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உவெசுலியன் கல்லூரி ஆசிரியராகச் சேர்ந்தார். ஏப்ரல் 24, 1855-ல் ஆசிரியத் தொழிலிலிருந்து விலகிக் கொண்டு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார்.

இதழியல்

கதிரவேற்பிள்ளை மத்திய கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மே 6, 1853-ல் ’லிட்ரரி மிரர்’ (Literary Mirror) என்னும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வந்தார்.

கல்விப் பரவலை நோக்கமாகக் கொண்டு வித்தியாதர்ப்பணம் என்னும் இதழையும் கதிரவேற்பிள்ளை நடத்தினார்.

கதிரவேற்பிள்ளை பிப்ரவரி 6, 1863-ல் "சிலோன் பேட்ரியாட்" Ceylon Patriot, இலங்காபிமானி என்ற பெயரில் ஒரு தமிழ் -ஆங்கில வாரப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார்.

சட்டப்பணி

வழக்கறிஞர்

பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி லீச்சிங் என்பவர் கதிரவேற்பிள்ளையை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பணியில் அமர்த்தினார். கொழும்பில் இருந்த தோமசு ட்றஸ்ட் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சியாளராக சேர்ந்தார். மே 5, 1858-ல் கொழும்பில் சட்ட அறிஞராக சத்தியப்பிரமாணம் எடுத்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.

நீதிபதிப் பணி

இலங்கையின் பிரிட்டிஷ் ஆளுனராக இருந்த சர் வில்லியம் கிரிகரி கதிரவேற்பிள்ளையை மே 21, 1872 அன்று ஊர்காவல்துறை நீதிபதியாக நியமித்தார். 1884-ஆம் ஆண்டில் இலங்கை குடியுரிமை சேவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1884 ஆம் ஆண்டில் பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட உயர்நீதி மன்றத்திற்கு நீதிபதியான கதிரவேற்பிள்ளையவர்கள் 1885 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணநகரில் குடியேறினார். பருத்தித்துறை, மல்லாகம் சாவகச்சேரி ஆகிய நகரங்களில் காவல்துறை நீதிபதியாகவும், யாழ்ப்பாணம் உயர்நீதிமனற நீதிபதியாகவும் பணியாற்றினார்.

கதிரவேற்பிள்ளை 1898 நவம்பரில் தனது அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

சட்டத்தொகுப்பு

கோனலி என்னும் ஆங்கிலேய அதிகாரி டச்சுக்காரர்களால் தொகுக்கபட்ட யாழ்ப்பாணத்தின் தேசவழமைகளின் தொகுப்பினை மறுசீரமைக்கும் பணியினை கதிரவேற்பிள்ளைக்கு அளித்தார். அவர் மீட்டுருவாக்கம் செய்த யாழ்ப்பாணதேச வழமைச்சட்டம் இன்றும் புழக்கத்திலுள்ளது.

இலக்கிய வாழ்க்கை

நூல்தொகுப்பு

1886 ல் ஆங்கிலஆட்சியினரின் கீழ் இருந்த இந்திய மற்றும் காலனித்துவ நாடுகளின் புத்தக கண்காட்சிக்காக நூல்களை திரட்டி அனுப்பினார். அவை லண்டன் அருங்காட்சியக நூலகத்தில் உள்ளன.

அகராதி

கதிரவேற்பிள்ளை 1870 முதல் தமிழில் ஓர் அகராதியை உருவாக்கும் பணியை தொடங்கினார். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் இவருக்கு உதவினார். உடுப்பிட்டி ஆறுமுகம் பிள்ளை, ஊரெழு சு. சரவணமுத்துப் புலவர் ஆகியோரும் அகராதி ஆக்கத்திற்கு உதவினர். 1904-ல் வண்ணார்பண்ணை வி. சபாபதி ஐயரின் அச்சியந்திரசாலையில் 328 பக்கங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்ட தமிழ்ச் சொல் அகராதி அகர வரிசை வரையுமே கொண்டிருந்தது.

பேரகராதியைத் தொகுத்து முடிப்பதற்குமுன் கதிரவேற்பிள்ளை மறைந்தார். அவர் மகன் க. பாலசிங்கம் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தைக் கொண்டு பேரகராதியை முழுமையாக்கி வெளியிட்டார். 344 நூல்களிலிருந்து இவ் அகராதிக்கு மேற்கோள்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

நூல்கள்

கதிரைவேற்பிள்ளை தன் 15 வயதிலேயே இராமாயண விருத்தியுரை என்னும் நூலை எழுதினார். தர்க்க சூடாமணி என்ற நூலை 1862-ல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார்.

நினைவுகள்

கதிரவேற்பிள்ளை 1885-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்த வீடு "வைமன் வீடு" எனவும், வீடு அமைந்திருந்த வீதி "வைமன் வீதி" எனவும் பெயர் பெற்றது.

இலக்கிய இடம்

கு.கதிரவேற்பிள்ளை தமிழில் தொடக்ககால அகராதிகளை உருவாக்கியவர்களில் ஒருவர். தமிழ் நவீன அகராதி இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவர். இலங்கை இதழியலின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.

நூல் பட்டியல்

  • இராமாயண விருத்தியுரை
  • தர்க்க சூடாமணி (1862)
  • தமிழ்ச் சொல் பேரகராதி

உசாத்துணை

✅Finalised Page