ஜி. திரிவிக்ரமன் தம்பி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "முனைவர் ஜி.திரிவிக்ரமன் தம்பி ( ) குமரிமாவட்ட வரலாற்றாய்வாளர். நாட்டாரியல் அறிஞர். மொழியியலாளர் மற்றும் சொல்லாய்வாளர். குமரிமாவட்ட வரலாற்றை கூறும் தெக்கன்பாட்டு என்னும் பாடல...")
 
No edit summary
Line 1: Line 1:
முனைவர் ஜி.திரிவிக்ரமன் தம்பி ( ) குமரிமாவட்ட வரலாற்றாய்வாளர். நாட்டாரியல் அறிஞர். மொழியியலாளர் மற்றும் சொல்லாய்வாளர். குமரிமாவட்ட வரலாற்றை கூறும் தெக்கன்பாட்டு என்னும் பாடல்களை ஆராய்ந்து தொகுத்தவர்.

பிறப்பு, கல்வி
== பிறப்பு, கல்வி ==
 
ஜி. திரிவிக்ரமன் தம்பி 23 செப்டெம்பர் 1920ல் குமரிமாவட்டம் மணவாளக்குறிச்சியில் பிறந்தார். தந்தை ஆற்றிங்கல் தோட்டுவாரத்து அஞ்சுதெங்கு வீட்டில் கே. கோபாலபிள்ளை. தாய் பிள்ளையார்கோயில் பத்மாசதனம் ஜி.பவானியம்மா.  

Line 9: Line 8:
ஜி. திரிவிக்ரமன் தம்பி ’ஊர்பெயர்களில் மொழியியல் சான்றுகள்’ என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பெல்ஜியல் சர்வதேசப் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.  

தனிவாழ்க்கை
== தனிவாழ்க்கை ==
 
ஜி. திரிவிக்ரமன் தம்பி ஈப்பன்விளை ஆங்கில நடுநிலைப்பள்ளி, மணவாளக்குறிச்சி பாபுஜி உயர்நிலைப்பள்லி ஆகிய கல்விநிலையங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கேரளத்தில் என்.எஸ்.எஸ். உயர்நிலைப்பள்ளி மலையாளம் ஆசிரியரானார்.  

ஆய்வுவாழ்க்கை
== ஆய்வுவாழ்க்கை ==
 
ஜி. திரிவிக்ரமன் தம்பி தமிழை ஆழ்ந்து பயின்றவர். அவருடைய ஆய்வுகள் இரு களங்களைச் சேர்ந்தவை. தமிழ் செவ்விலக்கியங்களுக்கும் கன்யாகுமரிமாவட்டத்துக்குமான தொடர்பு, கன்யாகுமரிமாவட்ட நாட்டார்பாடல்களில் வெளிப்படும் வரலாற்றுப் பண்பாட்டுச் செய்திகள். இரு களங்களிலும் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியிருக்கிறார். குமரிமாவட்டத்தில் பல தொன்மையான குடும்பங்களில் பேணப்பட்டு வந்து பின்னர் அழியும் தருவாயிலிருந்த பழைய ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து பதிப்பித்த்வர் ஜி. திரிவிக்ரமன் தம்பி. அப்பணியில் [[ஆறுமுகப்பெருமாள் நாடார்|ஆறுமுகப்பெருமாள் நாடாருடன்]] இணைந்து பணியாற்றினார். [[அ.கா. பெருமாள்]] போன்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
ஜி. திரிவிக்ரமன் தம்பி

Revision as of 18:17, 13 December 2023

முனைவர் ஜி.திரிவிக்ரமன் தம்பி ( ) குமரிமாவட்ட வரலாற்றாய்வாளர். நாட்டாரியல் அறிஞர். மொழியியலாளர் மற்றும் சொல்லாய்வாளர். குமரிமாவட்ட வரலாற்றை கூறும் தெக்கன்பாட்டு என்னும் பாடல்களை ஆராய்ந்து தொகுத்தவர்.

பிறப்பு, கல்வி

ஜி. திரிவிக்ரமன் தம்பி 23 செப்டெம்பர் 1920ல் குமரிமாவட்டம் மணவாளக்குறிச்சியில் பிறந்தார். தந்தை ஆற்றிங்கல் தோட்டுவாரத்து அஞ்சுதெங்கு வீட்டில் கே. கோபாலபிள்ளை. தாய் பிள்ளையார்கோயில் பத்மாசதனம் ஜி.பவானியம்மா.

ஜி. திரிவிக்ரமன் தம்பி குளச்சல் மலையாளம் பள்ளி, மார்த்தாண்டம் உயர்நிலைப்பள்ளி, இரணியல் உயர்நிலைப்பள்ளி ஆகிய கல்விநிலையங்களில் பயின்றார்.திருவனந்தபுரத்தில் பணியாற்றும்போது மாலைநேர கல்லூரியில் பயின்று மலையாளம் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றார்.

ஜி. திரிவிக்ரமன் தம்பி ’ஊர்பெயர்களில் மொழியியல் சான்றுகள்’ என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பெல்ஜியல் சர்வதேசப் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஜி. திரிவிக்ரமன் தம்பி ஈப்பன்விளை ஆங்கில நடுநிலைப்பள்ளி, மணவாளக்குறிச்சி பாபுஜி உயர்நிலைப்பள்லி ஆகிய கல்விநிலையங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கேரளத்தில் என்.எஸ்.எஸ். உயர்நிலைப்பள்ளி மலையாளம் ஆசிரியரானார்.

ஆய்வுவாழ்க்கை

ஜி. திரிவிக்ரமன் தம்பி தமிழை ஆழ்ந்து பயின்றவர். அவருடைய ஆய்வுகள் இரு களங்களைச் சேர்ந்தவை. தமிழ் செவ்விலக்கியங்களுக்கும் கன்யாகுமரிமாவட்டத்துக்குமான தொடர்பு, கன்யாகுமரிமாவட்ட நாட்டார்பாடல்களில் வெளிப்படும் வரலாற்றுப் பண்பாட்டுச் செய்திகள். இரு களங்களிலும் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியிருக்கிறார். குமரிமாவட்டத்தில் பல தொன்மையான குடும்பங்களில் பேணப்பட்டு வந்து பின்னர் அழியும் தருவாயிலிருந்த பழைய ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து பதிப்பித்த்வர் ஜி. திரிவிக்ரமன் தம்பி. அப்பணியில் ஆறுமுகப்பெருமாள் நாடாருடன் இணைந்து பணியாற்றினார். அ.கா. பெருமாள் போன்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.