under review

மாலை இலக்கிய நூல்கள்-கிறிஸ்தவம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
Line 86: Line 86:
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQekZly பிரபந்த தீபிகை, முத்து வேங்கட சுப்பையர், தமிழ் இணைய மின்னூலகம்]  
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQekZly பிரபந்த தீபிகை, முத்து வேங்கட சுப்பையர், தமிழ் இணைய மின்னூலகம்]  
* தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை, மு. அருணாசலம், தி. பார்க்கர் வெளியீடு.
* தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை, மு. அருணாசலம், தி. பார்க்கர் வெளியீடு.
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 08:34, 6 November 2023

’மாலை’ என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. மலர்களைத் தொடுத்து அமையும் மாலையைபோல, ஒரு பொருளை முன்னிட்டு, அப்பொருளைப் பற்றிய பல்வேறு அம்சங்களைக் குறித்து, ஒரே வகைப் பாவகையைக் கொண்டும், பல்வேறு வகைப் பாக்களையும், பாவினங்களையும் கொண்டும் பாடப்படுவது மாலை. மாலை இலக்கிய நூல்களில் கிறிஸ்தவ சமயம் சார்ந்தும் பல மாலை நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.

மாலை இலக்கிய நூல்கள் - கிறிஸ்தவ சமயம்

இயேசு கிறிஸ்துவின் பெருமை, கிறிஸ்தவ சமயத்தின் சிறப்பு, விவிலியக் கொள்கைகள் போன்றவற்றை விளக்கும் வகையிலும், மாதாவின் சிறப்பை விளக்கியும், கிறிஸ்தவ சமய அடியார்களின் பெருமையைச் சிறப்பித்தும், பல கிறிஸ்தவ மாலை இலக்கியங்கள் தமிழில் இயற்றப்பட்டன.

மாலை இலக்கிய நூல்கள் - கிறிஸ்தவம்

கிறிஸ்தவ சமயம் சார்ந்து பல மாலை நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் சில..

வரிசை எண் நூல் பெயர் ஆசிரியர் பெயர்
1 ஆரோக்கியமாதா அற்புத மாலை பொன்னுசாமிப் பிள்ளை
2 இயேசு நான்மணிமாலை பவுல் கிருஷ்ணன்
3 இயேசு திருவிரட்டைமணிமாலை பவுல் கிருஷ்ணன்
4 இயேசு திருவிரட்டைமணிமாலை வேதநாயக சாஸ்திரியார்
5 பெண்மதிமாலை வேதநாயகம் அடிகள்
6 மருகுநாதர் இரட்டைமணிமாலை வேதநாயகம் அடிகள்
7 வேதனைப் பாமாலை மார்டீன்
8 அடைக்கல மாலை வீரமாமுனிவர்
9 நற்குருணைத் தியான மாலை கால்டுவேல் ஐயர்
10 மரியம்மை மாலை தாமஸ்
11 புனிதவளனார் அட்டக மாலை ஜோசப்
12 ஏசுமணிமாலை கோ. முத்துசாமிப் பிள்ளை
13 கடவுள் மாலை சமாதானம் தானியெல் பிள்ளை
14 பரமதேவகி பல்சந்தமாலை சமாதானம் தானியெல் பிள்ளை
15 பேரின்ப மாலை சத்தியநாதப் பிள்ளை
16 அப்பரமாநந்தர் மாலை வேதநாயக சுவாமிகள்
17 செ. சவராயலு நாயகர் மாலை திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

உசாத்துணை


✅Finalised Page