கு.ப. ராஜகோபாலன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
கு.ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) மணிக்கொடி படைப்பாளிகளில் சுருதி சுத்தமான சிறுகதைகளை எழுதிய தமிழ் எழுத்தாளர். கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், ஓரங்க நாடகங்கள் எழுதியுள்ளார். மிகுந்த கவனத்துடன் மொழியைக் கையாண்ட படைப்பாளி. சொற்களின் தேர்வு, சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றில் அவருடைய அழகியலுணர்வும் கவனமும் தெரியும். சிறுகதையின் வடிவத்திலும் மிகுந்த நுட்பம் கொண்டிருந்தார்.  
கு.ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) மணிக்கொடி படைப்பாளிகளில் சுருதி சுத்தமான சிறுகதைகளை எழுதிய தமிழ் எழுத்தாளர். “சிறுகதை ஆசான்” என்று அழைக்கப்படுகிறார். நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், ஓரங்க நாடகங்கள் எழுதியுள்ளார். மிகுந்த கவனத்துடன் மொழியைக் கையாண்ட படைப்பாளி. சொற்களின் தேர்வு, சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றில் அவருடைய அழகியலுணர்வும் கவனமும் தெரியும்.  

== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
கு.ப. ராஜகோபாலன்  
கு.ப.ரா என்று அறியப்பட்ட கு.ப. ராஜகோபாலன் பட்டாபிராமையர், ஜானகி அம்மாள் தம்பதிக்கு மகனாக கும்பகோணத்தில்  ஜனவரி 1902ல் பிறந்தார். கு. ப. ரா. வின் தங்கை சேது அம்மாளும் அறியப்பட்ட ஒரு எழுத்தாளர். கு.ப.ரா.வுக்கு 6 வயதானபோது அவர்களது குடும்பம் திருச்சிக்குக் குடிபெயர்ந்தது. அங்குள்ள திருச்சி கொண்டையம்பேட்டைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், தேசியக் கல்லூரியில் இடைநிலை (இண்டர்மீடியட்) கல்வியும் பெற்றார். அப்போது, தந்தையார் இறந்துவிட்டார். தந்தையாரின் மறைவுக்குப் பிறகு குடும்பம் மீண்டும் கும்பகோணத்துக்கே குடிபெயர்ந்தது.
 
கும்பகோணம் அரசினர் கல்லூரியில் வடமொழியை சிறப்புப் பாடமாகக் கொண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். இந்தக் காலகட்டத்தில் அவர் ஆங்கிலத்தில் கீட்ஸ், ஷெல்லி, ஷேக்ஸ்பியர் முதலான பெரும் கவிதைகளையும், கவிஞர்கள்களின் வடமொழியில் வால்மீகி, காளிதாசர், பவபூதி முதலியவர்களின் படைப்புகளையும், வங்காளத்தில் தாகூர், பங்கிம் சந்திரர் முதலானோரின் நூல்களையும் கற்றார். இக்கல்வியே பிற்காலத்தில் அவர் தமது ஒவ்வொரு படைப்புகளிலும் தனி முத்திரையைப் பதிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். மகாகவி ரவீந்திரநாத் தாகூர், கு.ப.ரா. படித்த கல்லூரிக்கு வருகை புரிந்தபோது அவருடைய கவிதைகள் அவருக்கு அறிமுகமானது. வங்க மொழியின் மேல் பற்று கொண்டு அதைப் பயின்றார்.
 
தனது 24ஆம் வயதில் அம்மணி அம்மாளை மணந்தார். மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணக்கராக 7 ஆண்டுகள் பணியாற்றினார். தன் 32ம் வயதில் கண்புரை நோயின் காரணமாக கண் பார்வை குன்றியதால் அப்பணியில் இருந்து விலகினார்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==

Revision as of 19:20, 22 January 2022

கு.ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) மணிக்கொடி படைப்பாளிகளில் சுருதி சுத்தமான சிறுகதைகளை எழுதிய தமிழ் எழுத்தாளர். “சிறுகதை ஆசான்” என்று அழைக்கப்படுகிறார். நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், ஓரங்க நாடகங்கள் எழுதியுள்ளார். மிகுந்த கவனத்துடன் மொழியைக் கையாண்ட படைப்பாளி. சொற்களின் தேர்வு, சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றில் அவருடைய அழகியலுணர்வும் கவனமும் தெரியும்.

தனி வாழ்க்கை

கு.ப.ரா என்று அறியப்பட்ட கு.ப. ராஜகோபாலன் பட்டாபிராமையர், ஜானகி அம்மாள் தம்பதிக்கு மகனாக கும்பகோணத்தில் ஜனவரி 1902ல் பிறந்தார். கு. ப. ரா. வின் தங்கை சேது அம்மாளும் அறியப்பட்ட ஒரு எழுத்தாளர். கு.ப.ரா.வுக்கு 6 வயதானபோது அவர்களது குடும்பம் திருச்சிக்குக் குடிபெயர்ந்தது. அங்குள்ள திருச்சி கொண்டையம்பேட்டைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், தேசியக் கல்லூரியில் இடைநிலை (இண்டர்மீடியட்) கல்வியும் பெற்றார். அப்போது, தந்தையார் இறந்துவிட்டார். தந்தையாரின் மறைவுக்குப் பிறகு குடும்பம் மீண்டும் கும்பகோணத்துக்கே குடிபெயர்ந்தது.

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் வடமொழியை சிறப்புப் பாடமாகக் கொண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். இந்தக் காலகட்டத்தில் அவர் ஆங்கிலத்தில் கீட்ஸ், ஷெல்லி, ஷேக்ஸ்பியர் முதலான பெரும் கவிதைகளையும், கவிஞர்கள்களின் வடமொழியில் வால்மீகி, காளிதாசர், பவபூதி முதலியவர்களின் படைப்புகளையும், வங்காளத்தில் தாகூர், பங்கிம் சந்திரர் முதலானோரின் நூல்களையும் கற்றார். இக்கல்வியே பிற்காலத்தில் அவர் தமது ஒவ்வொரு படைப்புகளிலும் தனி முத்திரையைப் பதிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். மகாகவி ரவீந்திரநாத் தாகூர், கு.ப.ரா. படித்த கல்லூரிக்கு வருகை புரிந்தபோது அவருடைய கவிதைகள் அவருக்கு அறிமுகமானது. வங்க மொழியின் மேல் பற்று கொண்டு அதைப் பயின்றார்.

தனது 24ஆம் வயதில் அம்மணி அம்மாளை மணந்தார். மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணக்கராக 7 ஆண்டுகள் பணியாற்றினார். தன் 32ம் வயதில் கண்புரை நோயின் காரணமாக கண் பார்வை குன்றியதால் அப்பணியில் இருந்து விலகினார்.

இலக்கிய வாழ்க்கை

(1902-1914)

இலக்கிய இடம்

ஒருவகையில் புதுமைப்பித்தனுக்கு நேர் எதிரான போக்குகள் கொண்டவர். பல முக்கியமான விவாதங்கள் கு.ப.ராவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் இடையேதான் நடைபெற்றுள்ளன. கு.ப.ரா. மிகுந்த கவனத்துடன் மொழியைக் கையாண்ட படைப்பாளி. சொற்களின் தேர்வு, சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றில் அவருடைய அழகியலுணர்வும் கவனமும் தெரியும். சிறுகதையின் வடிவத்திலும் மிகுந்த நுட்பம் கொண்டிருந்தார். மணிக்கொடி படைப்பாளிகளில் சுருதி சுத்தமான சிறுகதைகளை கு.ப.ரா.வே எழுதியுள்ளார் என்று க.நா. சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன் போன்ற திறனாய்வாளர்கள் சொல்கின்றனர்.

மௌனமே கலையின் வலிமை என்று நம்பியவர் கு.ப.ரா. ஏறத்தாழ அவருடைய எல்லாக் கதைகளுமே மிதத் தன்மையையும் சுருக்கத்தையும் தங்கள் ஆதார இயல்புகளாகக் கொண்டவை. மனித உறவுகளின் நுட்பமான தருணங்களை நோக்கியே கு.ப.ரா.வின் பார்வை விரிந்தது. இயல்பாகவே ஆண்பெண் உறவு பற்றி அவர் அதிகம் எழுதினார். ஃபிராய்டிய உளவியலாய்வின் தாக்கம் அவரிடம் அதிகம் இருந்தது.

கு.ப.ரா.வும் சிட்டியும் சேர்ந்து பாரதியாரைப் பற்றி எழுதிய ‘கண்ணன் என் கவி’, தமிழ்த் திறனாய்வு வரலாற்றில் முக்கியமான ஒரு தொடக்கமாகும்.

படைப்புகள்

சிறுகதைகள்

மொழிபெயர்ப்புகள்

கட்டுரைகள்

நாடகங்கள்

இறுதிக்காலம்

உசாத்துணைகள்