ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with " = ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை = <nowiki>https://ta.wikipedia.org/s/bgt</nowiki> கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigationJump to search {| class="wikitable" ! colspan="2" |ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை |- | colspan="2" | |- !பிறப்பு |ஏப்ரல் 18,...")
 
No edit summary
Line 1: Line 1:

= ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை =
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (18 ஏப்ரல் 1858 - 2 நவம்பர் 1917) இலங்கையைசேர்ந்த தமிழறிஞர். இலக்கியவரலாற்றாசிரியர், சிற்றிலக்கிய ஆசிரியர். முதல் கலைக்களஞ்சியம் எனப்படும் அபிதான கோசம் நூலை எழுதியவர். 
<nowiki>https://ta.wikipedia.org/s/bgt</nowiki>

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
== பிறப்பு கல்வி ==
Jump to navigationJump to search
யாழ்ப்பாணத்து குடாநாட்டில் மானிப்பாய் எனும் ஊரில் ஆறுமுகம் பிள்ளை சீதேவிப் பிள்ளை இணையருக்கு மூத்த புதல்வராக 18 ஏப்ரல் 1858 ல் முத்துத்தம்பிப் பிள்ளை பிறந்தார். அவரது ஆரம்பக்கல்வி பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் ஆசிரியரின் வீட்டிலேயே ஆரம்பமானது. இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோரியல் கல்லூரியாக மாறியது.பின்னர் பேர்சிவல் பாதிரியாரால் நிறுவப்பட்ட, தற்போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என வழங்கும் வெஸ்லியன் மத்திய பாடசாலையில் இணைந்தார். அப்பாடசாலையின் தலைமையாசிரியராயிருந்த முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை அவர்களிடம் ஆங்கிலத்தை கற்றார்.இலக்கணக் கொட்டர் எனப் புகழ் பெற்ற குடந்தை வெண்பா முதலிய பாடல்கள் இயற்றிய சுன்னாகம் முருகேசப் பண்டிதரிடம் தமிழ் கற்றார்
{| class="wikitable"
! colspan="2" |ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை
|-
| colspan="2" |
|-
!பிறப்பு
|ஏப்ரல் 18, 1858 - நவம்பர் 2, 1917,
மானிப்பாய், யாழ்ப்பாணம்
|-
!இறப்பு
|நவம்பர் 2, 1917 (அகவை 59)
யாழ்ப்பாணம்
|-
!தேசியம்
|இலங்கைத் தமிழர்
|-
!அறியப்படுவது
|தமிழின் முதற் கலைக்களஞ்சியத்தை எழுதியவர்
|-
!சமயம்
|இந்து
|-
!பெற்றோர்
|ஆறுமுகம்
சீதேவி
|-
!வாழ்க்கைத்
துணை
|தங்கம்மா கந்தப்பர்
|}
'''ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை''' (ஏப்ரல் 18, 1858 - நவம்பர் 2, 1917, மானிப்பாய், யாழ்ப்பாணம்) ஓர் ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர். தமிழின் முதற் கலைக்களஞ்சியமான அபிதான கோசத்தை எழுதியவர்.

== பொருளடக்கம் ==
== தனிவாழ்க்கை ==
1876ல் தமது பதினெட்டாவது வயதில் நாவலப்பிட்டி சென்று இலங்கை கம்பெனித்தோட்டத்து (Ceylon Company Estates) அதிகாரிக்கு முன்ஷியாக (ஆசிரியராக) தொழில் புரிந்தார் .1880ம் வருடம் இந்தியாவில் திருத்துறைப் பூண்டி அழகியநாதன்  செட்டியாரின் இல்லத்தில் தனியாசிரியராக அமர்ந்து அவருடைய பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தார். பின்னர் நாகப்பட்டினம் சென்று ஆண்டர்சன் என்னும் நிறுவனத்தில் (Anderson & Co.) தலைமை எழுதுவினைஞராகவும் கணக்காளராகவும் பணியாற்றினார்.

* 1வரலாறு
பின்னர் காரைக்காலின் புரையாறு என்னும் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த தவசிமுத்து நாடார் என்பவர் நடத்திய சத்தியாபிமானி என்னும் வாரப் பத்திரிகைக்கு ஆசிரியராக பொறுப்பேற்றார். அவ்விதழின் ஆசிரியர் பதவியில் இருந்து விலகியபோது நாடார் சமூக மக்கள் அளித்த தொகையைக்கொண்டு  சென்னையில்  ஜூபிலி அச்சகம் (Jubilee Press) என்னும் நிறுவனத்தை 1885 ஆம் ஆண்டு நிறுவினார்.  
** 1.1இளமைப் பருவம்
** 1.2இலக்கியப்பணி
* 2ஆக்கங்கள்
** 2.1இயற்றிய நூல்கள்
** 2.2வெளியிட்ட இதழ்கள்

== வரலாறு[தொகு] ==
1893ம் வருடம் யாழ்ப்பாணம் திரும்பி  வண்ணார்பண்ணையிலே ஆறுமுக நாவலர் வாழ்ந்த இல்லத்தை விலைக்கு வாங்கி, அவ்வில்லத்திற்கு “நாவலர் கோட்டம்” என அதனருகிலேயே ஒரு புத்தகசாலையையும்  நாவலர் அச்சகம் என ஓர் அச்சகத்தையும் நிறுவினார். நாவலர் கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை என அழைக்கப்பட்டார்.Ward & Davy என்ற பெயரில் பலசரக்கு மருந்துகள் விற்கும் ஒரு கடையும் நடத்தினார். மூன்று ஆண்டுகள் ‘வைத்திய விசாரணி’ என்னும்  மாத இதழை அதில் இருந்து வெளியிட்டார்

=== இளமைப் பருவம்[தொகு] ===
தமது 25-ஆவது வயதில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த கந்தப்பர் என்பவரின் மூத்த மகளான தங்கம்மாவைத் திருமணம் செய்தார்.
முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் தந்தை ஆறுமுகம். தாய் சீதேவி. தமது 25-ஆவது வயதில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த கந்தப்பர் என்பவரின் மூத்த மகளான தங்கம்மாவைத் திருமணஞ் செய்தார்.

பிள்ளையவர்களின் ஆரம்பக்கல்வி பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் அவரின் வீட்டிலேயே ஆரம்பமானது. இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோறியல் கல்லூரியாக மாறியது. ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உவெஸ்லியன் மத்திய வித்தியாசாலையில் படித்தார். ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகியவற்றை நன்கு கற்ற பிள்ளையவர்கள், இலக்கணக் கொட்டர் எனப் புகழ் பெற்ற, குடந்தை வெண்பா முதலிய பாடல்கள் இயற்றிய சுன்னாகம் முருகேசப் பண்டிதரிடம் தமிழைச் சிறப்பாகக் கற்றார்.
== இதழியல் ==
* சத்தியாபிமானி (1884) வார இதழ் (தமிழ் நாடு)
* வைத்திய விசாரணி (1897)மாத இதழ் (ஈழம்)

தமது பதினெட்டாவது வயதில் நாவலப்பிட்டி சென்று இலங்கை கம்பெனித்தோட்டத்து (Ceylon Company Estates) அதிகாரிக்கு முன்ஷியாக (ஆசிரியராக) தொழில் புரிந்தார். இரு ஆண்டுகளின் பின் (1880இல்) தமிழகம் சென்று திருத்துறைப்பூண்டியில் அழகியநாதன் செட்டியாரின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். சில மாதங்களின் பின் நாகப்பட்டினத்திலுள்ள Anderson & Co என்ற கப்பற்றொழில் நிறுவனத்தில் இவர் இரண்டரை ஆண்டுகள் தலைமை எழுதுவினைஞராகத் தொழிலாற்றினார்.
== இலக்கியப்பணி ==
1898-ல் ஆறுமுகநாவலரின் மருமகனும், அவரின் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு பற்றியவருமான த.கைலாசபிள்ளை அவர்களால் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. இதில் ஈடுபட்டு ஒத்துழைத்தார்.  மதுரை [[நான்காம் தமிழ்ச்சங்கம்]]  என்னும் அமைப்பு [[பாண்டித்துரைத் தேவர்]] முன்னெடுப்பின் உருவானதும் அச்சங்கம் நடத்திய தேர்வுகளில் தேர்வராகப் பணியாற்றினார். அவர்களின் [[செந்தமிழ் (இதழ்)|செந்தமிழ்]] இதழில் எழுதினார்.

=== இலக்கியப்பணி[தொகு] ===
இலக்கணநூல்கள், இலக்கியவரலாற்று நூல்கள் ஆகியவற்றை எழுதிய ஆ.முத்துத்தம்பிப் பிள்ளையின் முதன்மைநூல் அபிதான கோசம் என்னும் கலைக்களஞ்சிய- அகராதி. தமிழ் மொழியில் முதன்முதலாக உருவான கலைக்களஞ்சியம் என அது கருதப்படுகிறது. 16 ஆண்டு உழைப்பில் அதை எழுதி முடித்தார்
அதன் பின்னர் தமிழார்வத்தால் பிள்ளையவர்கள் உந்தப்பட்டு 1884-ல் காரைக்கால் சென்றார். அங்கே திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்த தவசிமுத்துநாடார் என்னும் செல்வந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி சத்தியாபிமானி என்ற வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியேற்றார்.

1885-ல் சென்னை சென்ற முத்துத்தம்பி அந்தர்சன் தெரு என்ற இடத்தில் யுபிலி அச்சுக்கூடம் என்ற பெயரில் ஓர் அச்சியந்திரசாலையை நிறுவினார். சி. வை. தாமோதரம்பிள்ளையின் தொல்காப்பியம் சொல்லதிகாரப்பதிப்பும், உ. வே. சாமிநாதையரின் சிலப்பதிகாரப் பதிப்பும் இதன் மூலமே வெளிவந்தன.
=== நூல்கள் ===

1893-ல் யாழ்ப்பாணம் திரும்பிய முத்துத்தம்பிப்பிள்ளை, வண்ணார்பண்ணையில் தவத்திரு ஆறுமுக நாவலர் குடியிருந்த வீட்டை வாங்கி அதற்கு 'நாவலர் கோட்டம்' எனப்பெயரிட்டு, அங்கிருந்து பல பணிகள் புரிந்தார். நாவலர் வழியில் பணியாற்றிய பிள்ளையவர்கள், நாவலர் அச்சுக்கூடம் என்ற ஒரு அச்சியந்திரசாலையையும் நிறுவினார்.
* இலங்கைச் சரித்திர சூசனம்
 
ஒரு புத்தகசாலையும், Ward & Davy என்ற பெயரில் பலசரக்கு மருந்துகள் விற்கும் ஒரு கடையும் அவரால் நிறுவப்பட்டன. 1898-இல் தமிழ் வைத்திய விசாரணி என்னும் சஞ்சிகை இவரால் பிரசுரிக்கப்பட்டது.
 
1898-இல் ஆறுமுகநாவலரின் மருமகனும், அவரின் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு பற்றியவருமான த.கைலாசபிள்ளை அவர்களால் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. இதில் ஈடுபட்டு ஒத்துழைத்த பிள்ளையவர்களுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்துடனும் தொடர்பு ஏற்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய '''செந்தமிழ்''' மாத இதழில் பல ஆய்வுக் கட்டுரைகள் (1902-1917) எழுதி வந்தார்.
 
முத்துத் தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய பல நூல்களில் இலங்கைச் சரித்திரச் சூசனம், அபிதான கோசம், ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி, யாழ்ப்பாணச் சரித்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்கன. அபிதானகோசம் 1902-இல் யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (1910) வெளிவருமுன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
 
== ஆக்கங்கள்[தொகு] ==
 
=== இயற்றிய நூல்கள்[தொகு] ===
இலங்கைச் சரித்திர சூசனம்

* ''இலங்கைச் சரித்திர சூசனம்'' (1883)
* ''இலங்கைச் சரித்திர சூசனம்'' (1883)
Line 100: Line 54:
* ''தமிழ்க்கொப்பி சட்டவெழுத்து'' 1-4
* ''தமிழ்க்கொப்பி சட்டவெழுத்து'' 1-4
* ''செந்தமிழ் அகராதி'' (வெளியிடப்படவில்லை)
* ''செந்தமிழ் அகராதி'' (வெளியிடப்படவில்லை)
=== வெளியிட்ட இதழ்கள்[தொகு] ===
* சத்தியாபிமானி (1884) வார இதழ் (தமிழ் நாடு)
* வைத்திய விசாரணி (1897) திங்கள் இதழ் (ஈழம்)

Revision as of 10:24, 28 February 2022

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (18 ஏப்ரல் 1858 - 2 நவம்பர் 1917) இலங்கையைசேர்ந்த தமிழறிஞர். இலக்கியவரலாற்றாசிரியர், சிற்றிலக்கிய ஆசிரியர். முதல் கலைக்களஞ்சியம் எனப்படும் அபிதான கோசம் நூலை எழுதியவர்.

பிறப்பு கல்வி

யாழ்ப்பாணத்து குடாநாட்டில் மானிப்பாய் எனும் ஊரில் ஆறுமுகம் பிள்ளை சீதேவிப் பிள்ளை இணையருக்கு மூத்த புதல்வராக 18 ஏப்ரல் 1858 ல் முத்துத்தம்பிப் பிள்ளை பிறந்தார். அவரது ஆரம்பக்கல்வி பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் ஆசிரியரின் வீட்டிலேயே ஆரம்பமானது. இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோரியல் கல்லூரியாக மாறியது.பின்னர் பேர்சிவல் பாதிரியாரால் நிறுவப்பட்ட, தற்போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என வழங்கும் வெஸ்லியன் மத்திய பாடசாலையில் இணைந்தார். அப்பாடசாலையின் தலைமையாசிரியராயிருந்த முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை அவர்களிடம் ஆங்கிலத்தை கற்றார்.இலக்கணக் கொட்டர் எனப் புகழ் பெற்ற குடந்தை வெண்பா முதலிய பாடல்கள் இயற்றிய சுன்னாகம் முருகேசப் பண்டிதரிடம் தமிழ் கற்றார்

தனிவாழ்க்கை

1876ல் தமது பதினெட்டாவது வயதில் நாவலப்பிட்டி சென்று இலங்கை கம்பெனித்தோட்டத்து (Ceylon Company Estates) அதிகாரிக்கு முன்ஷியாக (ஆசிரியராக) தொழில் புரிந்தார் .1880ம் வருடம் இந்தியாவில் திருத்துறைப் பூண்டி அழகியநாதன் செட்டியாரின் இல்லத்தில் தனியாசிரியராக அமர்ந்து அவருடைய பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தார். பின்னர் நாகப்பட்டினம் சென்று ஆண்டர்சன் என்னும் நிறுவனத்தில் (Anderson & Co.) தலைமை எழுதுவினைஞராகவும் கணக்காளராகவும் பணியாற்றினார்.

பின்னர் காரைக்காலின் புரையாறு என்னும் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த தவசிமுத்து நாடார் என்பவர் நடத்திய சத்தியாபிமானி என்னும் வாரப் பத்திரிகைக்கு ஆசிரியராக பொறுப்பேற்றார். அவ்விதழின் ஆசிரியர் பதவியில் இருந்து விலகியபோது நாடார் சமூக மக்கள் அளித்த தொகையைக்கொண்டு சென்னையில் ஜூபிலி அச்சகம் (Jubilee Press) என்னும் நிறுவனத்தை 1885 ஆம் ஆண்டு நிறுவினார்.

1893ம் வருடம் யாழ்ப்பாணம் திரும்பி வண்ணார்பண்ணையிலே ஆறுமுக நாவலர் வாழ்ந்த இல்லத்தை விலைக்கு வாங்கி, அவ்வில்லத்திற்கு “நாவலர் கோட்டம்” என அதனருகிலேயே ஒரு புத்தகசாலையையும் நாவலர் அச்சகம் என ஓர் அச்சகத்தையும் நிறுவினார். நாவலர் கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை என அழைக்கப்பட்டார்.Ward & Davy என்ற பெயரில் பலசரக்கு மருந்துகள் விற்கும் ஒரு கடையும் நடத்தினார். மூன்று ஆண்டுகள் ‘வைத்திய விசாரணி’ என்னும் மாத இதழை அதில் இருந்து வெளியிட்டார்

தமது 25-ஆவது வயதில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த கந்தப்பர் என்பவரின் மூத்த மகளான தங்கம்மாவைத் திருமணம் செய்தார்.

இதழியல்

  • சத்தியாபிமானி (1884) வார இதழ் (தமிழ் நாடு)
  • வைத்திய விசாரணி (1897)மாத இதழ் (ஈழம்)

இலக்கியப்பணி

1898-ல் ஆறுமுகநாவலரின் மருமகனும், அவரின் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு பற்றியவருமான த.கைலாசபிள்ளை அவர்களால் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. இதில் ஈடுபட்டு ஒத்துழைத்தார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் என்னும் அமைப்பு பாண்டித்துரைத் தேவர் முன்னெடுப்பின் உருவானதும் அச்சங்கம் நடத்திய தேர்வுகளில் தேர்வராகப் பணியாற்றினார். அவர்களின் செந்தமிழ் இதழில் எழுதினார்.

இலக்கணநூல்கள், இலக்கியவரலாற்று நூல்கள் ஆகியவற்றை எழுதிய ஆ.முத்துத்தம்பிப் பிள்ளையின் முதன்மைநூல் அபிதான கோசம் என்னும் கலைக்களஞ்சிய- அகராதி. தமிழ் மொழியில் முதன்முதலாக உருவான கலைக்களஞ்சியம் என அது கருதப்படுகிறது. 16 ஆண்டு உழைப்பில் அதை எழுதி முடித்தார்

நூல்கள்

  • இலங்கைச் சரித்திர சூசனம்
  • இலங்கைச் சரித்திர சூசனம் (1883)
  • காளிதாச சரித்திரம் (1884)
  • பிரபோத சந்திரோதய வசனம் (1889)
  • விவேகானந்த சுவாமிகள் சொற்பொழிவுகளின் சாரம் (1897)
  • அபிதானகோசம் (1902)
  • பாரதச் சுருக்கம் (1903)
  • நன்னூல் இலகுபோதம்-எழுத்ததிகாரம் (1904)
  • நன்னூல் இலகுபோதம்-சொல்லதிகாரம் (1905)
  • ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி (1907)
  • Civilian Tamil Grammar (1912)
  • நன்னூல் உதாரண விளக்கம் (1912)
  • யாழ்ப்பாணச் சரித்திரம் (1912)
  • இலங்கைப் பூமிசாத்திரம் (1914)
  • சைவ பாலபோதம் (1916)
  • தென்மொழி வரலாறு (1920)
  • ஈழமண்டலப் புலவர் சரித்திரம்
  • காளமேகப் புலவர் சரித்திரம்
  • அற்புதயோகி சரித்திரம்
  • சந்திரகாசன் கதை
  • ஸ்ரீமதி அன்னி பெசன்ட் சமய வரலாறு
  • திருவாசகம் (பதிப்பு)
  • நிகண்டு 1-5 தொகுதி (பதிப்பு)
  • புதிய இலகுபோத பிள்ளைப்பாடம் (பாடநூல்)
  • புதிய இலகுபோத பாலபாடம் 1-8 ஆம் வகுப்பு (பாடநூல்)
  • புதிய இலகுபோத இலக்கணம் 4-5 ஆம் வகுப்பு (பாடநூல்)
  • தமிழ்க்கொப்பி சட்டவெழுத்து 1-4
  • செந்தமிழ் அகராதி (வெளியிடப்படவில்லை)