under review

பா. கண்மணி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
Line 14: Line 14:
* [https://neeli.co.in/170/ ரிவால்வார் ரீட்டா, ஃகன் ஃபைட் காஞ்சனா (அ) விடுதலையின் பாடல் – சாம்ராஜ்: நீலி மின்னிதழ்]
* [https://neeli.co.in/170/ ரிவால்வார் ரீட்டா, ஃகன் ஃபைட் காஞ்சனா (அ) விடுதலையின் பாடல் – சாம்ராஜ்: நீலி மின்னிதழ்]
* [https://www.amazon.in/Idabam-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-B-Kanmani/dp/938733371X இடபம் நாவல் வாங்க]
* [https://www.amazon.in/Idabam-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-B-Kanmani/dp/938733371X இடபம் நாவல் வாங்க]
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:நாவலாசிரியர்கள்]]

Latest revision as of 12:38, 8 October 2023

பா. கண்மணி

பா. கண்மணி (பிறப்பு: மே 30, 1967) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவலாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

பா. கண்மணி கோ. பாலகிருஷ்ணன், விமலா இணையருக்கு மே 30, 1967-ல் சென்னையில் பிறந்தார். கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.காம் பயின்றார். செப்டம்பர் 14, 1988-ல் க. உலகநாதனை மணந்தார். மகள்கள் ராஷ்மி, யாமினி. தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.

இடபம் நாவல்

இலக்கிய வாழ்க்கை

பா. கண்மணியின் முதல் புத்தகம் இடபம் நாவல் ஜனவரி 2020-ல் எதிர் பதிப்பகம் மூலம் வெளிவந்தது. ஆதர்ச எழுத்தாளர்களாக ஆதவன், தி.ஜானகிராமனைக் குறிப்பிடுகிறார். இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். இடபம் நாவல் கன்னடத்தில் 2020-ல் க. நல்லதம்பியால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. கூலி(gooli) என்ற பெயரில் தேஸிபுஸ்தக பதிப்பாளரால் வெளியிடப்பட்டது.

விருதுகள்

  • கனடா இலக்கியத் தோட்டத்தின் புனைவு விருது 2021-ல் இடபம் நாவலுக்காக வழங்கப்பட்டது.

நூல் பட்டியல்

நாவல்
  • இடபம்

இணைப்புகள்


✅Finalised Page