under review

சிவ தாண்டவங்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text:  )
(category and template text moved to bottom of text)
 
Line 8: Line 8:


== சிவனின் பல்வேறு தாண்டவங்கள் ==
== சிவனின் பல்வேறு தாண்டவங்கள் ==
[[Category:Tamil Content]]
 
சிவபெருமான் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையான தாண்டவங்களை ஆடியிருக்கிறார். அவையாவன,
சிவபெருமான் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையான தாண்டவங்களை ஆடியிருக்கிறார். அவையாவன,


Line 103: Line 103:
* கலைக்களஞ்சியம், ஐந்தாம் தொகுதி, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை
* கலைக்களஞ்சியம், ஐந்தாம் தொகுதி, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 04:11, 25 September 2023

சிவ தாண்டவங்கள்

நடனக்கலைக்கு நாயகனாகத் திகழ்பவர் சிவபெருமான். அதனாலேயே ‘நடேசன்’. ‘ஆடல் வல்லான்’, ‘கூத்தபிரான்’ என்றெல்லாம் அவர் அழைக்கப்படுகிறார். சிவபெருமான் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையான நடனங்களை ஆடினார். அவை ‘சிவ தாண்டவங்கள்’ என்று அழைக்கப்பட்டன.

தாண்டவம் - பெயர் விளக்கம்

“தாண்டவம் என்பது 'தட்' என்று நிலத்தைத் தட்டுவது, அடிப்பது என்ற வினைச் சொல்லிலிருந்து வந்தது” எனக் கலைக்களஞ்சியம் கூறுகிறது. பாதங்களால் பூமியைத் தட்டுவதால் விளையும் ஜதியே சிறந்த அங்கமாக ஆதலால், தட்டுதலையுடையது தாண்டவம் ஆனது. சிவபெருமானின் அடியவரான தண்டுமுனிவர் எனும் நந்திதேவரால் பரவியதால் 'தாண்டவம்' என்று அழைக்கப்பட்டது என்ற கருத்தும் நிலவுகிறது. தண்டு முனிவர், நாட்டிய சாஸ்திரத்தை எழுதிய பரத முனிவருக்கு இதனை உபதேசித்தார். 32 அங்ககாரங்களும், 108 கர்ணங்களும் ஒருங்கிணைந்ததே தாண்டவம்.

அங்ககாரங்கள் என்றால் உடல் உறுப்புகளுடைய அசைவுகள் என்பது பொருள். நாட்டியத்தின் போது செயல்படும் கால், கைகளின் நிலையே கரணம். கரணம் என்பதற்குச் ‘செய்யப்படுவது’, ‘செயல்’ எனப் பொருள் கூறுகிறது கலைக்களஞ்சியம். பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம்.

சிவனின் பல்வேறு தாண்டவங்கள்

சிவபெருமான் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையான தாண்டவங்களை ஆடியிருக்கிறார். அவையாவன,

  • பஞ்ச தாண்டவங்கள்
  • சப்த தாண்டவங்கள்
  • சப்த விடங்க தாண்டவங்கள்
  • நவ தாண்டவங்கள்
  • பன்னிரு தாண்டவங்கள்
  • 108 தாண்டவங்கள்
பஞ்ச தாண்டவங்கள்

பஞ்ச தாண்டவங்கள் ஐந்து வகைப்படும். அவை,

  • ஆனந்த தாண்டவம்
  • அஜபா தாண்டவம்
  • ஞானசுந்தர தாண்டவம்
  • ஊர்த்தவ தாண்டவம்
  • ப்ரம்ம தாண்டவம்
சப்த தாண்டவங்கள்

சப்தம் என்றால் ஏழு என்பது பொருள். ஸ, ரி, க, ம, ப, த, நி என்னும் இசையின் ஏழு விதச் சுரங்களைக் குறிக்கும் வகையில் ஏழு வித தாண்டவங்களைச் சிவபெருமான் ஆடினார். அவை,

  • ஆனந்த தாண்டவம்
  • சந்தியா தாண்டவம்
  • உமா தாண்டவம்
  • ஊர்த்தவ தாண்டவம்
  • கஜ சம்ஹார தாண்டவம்
  • கெளரி தாண்டவம்
  • காளிகா தாண்டவம்
சப்த விடங்க தாண்டவங்கள்

சப்த விடங்கத் தலங்களில் இறைவனாகிய சிவபெருமான் ஏழுவிதமான நடனங்களை ஆடினார். அவை,

  • உன்மத்த தாண்டவம்
  • அஜபா தாண்டவம்
  • ப்ரம்மர தாண்டவம்
  • குக்குட தாண்டவம்
  • பர்வதரங்க தாண்டவம்
  • கமல தாண்டவம்
  • ஹம்ச தாண்டவம்
நவ தாண்டவங்கள்

சிவபெருமானின் ஒன்பது விதமான நடனங்கள் நவ தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை,

  • ஆனந்த தாண்டவம்
  • சந்தியா தாண்டவம்
  • திரிபுரதாண்டவம்
  • ஊர்த்தவ தாண்டவம்
  • புஜங்க தாண்டவம்
  • முனி தாண்டவம்
  • பூத தாண்டவம்
  • சுத்த தாண்டவம்
  • சிருங்காரத் தாண்டவம்
பன்னிரு தாண்டவங்கள்

இறைவனாகிய சிவபெருமான் பன்னிரு விதமான நடனங்களை ஆடினார். அவை,

  • ஆனந்த தாண்டவம்
  • சந்தியா தாண்டவம்
  • சிருங்கார தாண்டவம்
  • திரிபுர தாண்டவம்
  • ஊர்த்தவ தாண்டவம்
  • முனித் தாண்டவம்
  • சம்ஹார தாண்டவம்
  • உக்ர தாண்டவம்
  • பூத தாண்டவம்
  • பிரளய தாண்டவம்
  • புஜங்க தாண்டவம்
  • சுத்த தாண்டவம்
108 தாண்டவங்கள்

சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் 108 சிவ தாண்டவங்கள் சிறப்பானதாகக் கருதப்படுகின்றன. அவை, அவரால் மாலை வேளைகளில் ஆடப்பட்டன என்றும், அவை கரம், சிரம், பதம், நிலை போன்ற ஆறு உறுப்புக்களையுடையவை என்றும் பரதசாஸ்திரம் கூறுகிறது.

சிவபெருமானின் பிற தாண்டவங்கள்

  • குஞ்சித பாதகரண தாண்டவம்
  • ஸ்வஸ்திக தாண்டவம்
  • அர்த்த மத்தல்லி கர்ண தாண்டவம்
  • அர்த்த ரேச்சித தாண்டவம்
  • அலாதக தாண்டவம்
  • கடிசம தாண்டவம்
  • சதுர தாண்டவம்
  • சுந்தர தாண்டவம்
  • லதாவிருச்சிக தாண்டவம்
  • மயூர தாண்டவம்

உசாத்துணை


✅Finalised Page