ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(Changed incorrect text: ) |
||
Line 17: | Line 17: | ||
<poem> | <poem> | ||
பன்னு தமிழ்ப்பதினாறாயிர நற்பனுவல் | பன்னு தமிழ்ப்பதினாறாயிர நற்பனுவல் | ||
மன்னு புவியவர்க்கு | மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னிய (62) | ||
</poem> | </poem> | ||
==பாடல் நடை== | ==பாடல் நடை== | ||
Line 23: | Line 23: | ||
====== சீர்காழியின் பன்னிரு பெயர்கள் ====== | ====== சீர்காழியின் பன்னிரு பெயர்கள் ====== | ||
<poem> | <poem> | ||
பிரமனூர் வேணுபுரம் | பிரமனூர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை | ||
அரன்மன்னு தண்காழி அம்பொற் - சிரபுரம் | அரன்மன்னு தண்காழி அம்பொற் - சிரபுரம் | ||
பூந்தராய்க் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல் | பூந்தராய்க் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல் | ||
வாய்ந்தநல் தோணி | வாய்ந்தநல் தோணி புரம்மறையோர் - ஏய்ந்த | ||
புகலி கழுமலம் | புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப் | ||
பகர்கின்ற பண்புற்ற | பகர்கின்ற பண்புற்ற தாகித் - திகழ்கின்ற | ||
</poem> | </poem> | ||
======ஏழு பருவப் பெண்களும் சம்பந்தரின் உலாவைக் கண்டு காதலுறுதல்====== | ======ஏழு பருவப் பெண்களும் சம்பந்தரின் உலாவைக் கண்டு காதலுறுதல்====== | ||
<poem> | <poem> | ||
பேரிளம் பெண் ஈறாகப் | பேரிளம் பெண் ஈறாகப் பேதை முதலாக | ||
வாரிளங் | வாரிளங் கொங்கை மடநல்லார் - சீர்விளங்கப் | ||
பேணும் சிலம்பும் | பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும் | ||
பூணும் புலம்பப் | பூணும் புலம்பப் புறப்பட்டுச் - சேண்மறுகில். (120) | ||
காண்டகைய வென்றிக் | காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல் | ||
ஈண்டு குடையின் எழில் | ஈண்டு குடையின் எழில் நிழற்கீழ்க் -காண்டலுமே | ||
கைதொழுவார் நின்று | கைதொழுவார் நின்று கலைசரிவார் மால்கொண்டு | ||
மெய்தளர்வார் வெள்வளைகள் | மெய்தளர்வார் வெள்வளைகள் போய்வீழ்வார் | ||
</poem> | </poem> | ||
==உசாத்துணை == | ==உசாத்துணை == |
Revision as of 10:11, 22 September 2023
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை பதினோராம் திருமுறையில் இடம் பெரும் பிரபந்தம். திருஞான சம்பந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட உலா என்னும் சிற்றிலக்கியம்.
ஆசிரியர்
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை நம்பியாண்டார் நம்பியால் இயற்றப்பட்டது. நம்பியாண்டார் நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர். அவர் பாடிய பத்து பிரபந்தங்கள் பதினொன்றாம் திருமுறையில் இடம்பெறுகின்றன. அவற்றுள் ஆறு பிரபந்தங்கள் திருஞான சம்பந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டவை.
நூல் அமைப்பு
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை 143 கலிவெண்பாக்களால் ஆனது. திருஞான சம்பந்தர் வீதியில் உலாவந்த பாங்கை இந்நூல் பாடுகிறது. மற்ற பின்னிலை உலா இலக்கியங்களைப் போல ஏழு பருவப் பெண்களையும் தனித்தனியாக வர்ணித்து அவர்கள் தலைவனைக் கண்டு காதல் கொள்வதைச் சொல்லாமல் ஏழு பருவப் பெண்களும் ஒன்றாக திருஞான சம்பந்தரின் உலாவைக் கண்டு காதல் கொண்டதாகப் பாடப்பட்டுள்ளது. இக்காரணத்தால் இந்நூல் உலா என்று அல்லாது 'உலாமாலை' எனப் பெயர் பெற்றது.
143 கண்ணிகளை உடையது இந்நூல்.
- கண்ணிகள் 1 - 58 - காழி(சீர்காழி) ச் சிறப்பு,
- கண்ணிகள் 59 - 89 ஞானசம்பந்தரின் சிறப்பு
- கண்ணிகள் 90 - 117 ஞானசம்பந்தரின் அழகிய உலா எழுச்சி
- கண்ணிகள் 118 - 143 பேதை முதல் பேரிளம் பெண் வரை ஏழு பருவத்து மகளிரும் காழி வேந்தரைக் (ஞான சம்பந்தர்) கண்டு காதல் கொண்டு அவரது நலம் வேண்டி நின்றது
56-58 கண்ணிகளில் சீர்காழிக்குரிய பன்னிரு பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. நம்பியாண்டார் நம்பி 16000 பதிகங்களை இயற்றினார் என்று இந்நூல் குறிப்பிடுகிறது.
பன்னு தமிழ்ப்பதினாறாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னிய (62)
பாடல் நடை
சீர்காழியின் பன்னிரு பெயர்கள்
பிரமனூர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை
அரன்மன்னு தண்காழி அம்பொற் - சிரபுரம்
பூந்தராய்க் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல்
வாய்ந்தநல் தோணி புரம்மறையோர் - ஏய்ந்த
புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப்
பகர்கின்ற பண்புற்ற தாகித் - திகழ்கின்ற
ஏழு பருவப் பெண்களும் சம்பந்தரின் உலாவைக் கண்டு காதலுறுதல்
பேரிளம் பெண் ஈறாகப் பேதை முதலாக
வாரிளங் கொங்கை மடநல்லார் - சீர்விளங்கப்
பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும்
பூணும் புலம்பப் புறப்பட்டுச் - சேண்மறுகில். (120)
காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல்
ஈண்டு குடையின் எழில் நிழற்கீழ்க் -காண்டலுமே
கைதொழுவார் நின்று கலைசரிவார் மால்கொண்டு
மெய்தளர்வார் வெள்வளைகள் போய்வீழ்வார்
உசாத்துணை
✅Finalised Page