under review

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
No edit summary
 
Line 30: Line 30:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [http://pvkk.org/ பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்]  
* [http://pvkk.org/ பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்]  
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 19:20, 27 August 2023

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், மார்ச் 1, 2016 அன்று அப்போதைய முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. பழந்தமிழரின் சிறப்புகளை நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு அரங்குகளைக் கொண்டது இக்கூடம்.

காட்சிப் பொருண்மைகள்

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தின் அரங்குகள் பழந்தமிழரின் வாழ்வியல் சிறப்புகள், பண்பாட்டு விழுமியங்கள், அறிவு நுட்பங்கள், கலைக் கூறுகள், தொழில்நுட்பத் திறன்கள், அரசியல் மேலாண்மை போன்றவை பற்றி இளைய தலைமுறையினரும், வெளிநாட்டினரும் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கூடங்களில் ஓவியங்கள், நிழற்படங்கள், மரச்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், தோல் கருவிகள், சுதை வடிவங்கள், புடைப்புச் சிற்பங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

அரங்குகள்

  • தொல்காப்பியர் அரங்கு
  • திருவள்ளுவர் அரங்கு
  • கபிலர் அரங்கு
  • ஔவையார் அரங்கு
  • இளங்கோவடிகள் அரங்கு
  • கம்பர் அரங்கு
  • தமிழ்த்தாய் ஊடக அரங்கு

- போன்ற அரங்குகள் இக்காட்சிக் கூடத்தில் இடம் பெற்றுள்ளன.

தொல்காப்பியர் அரங்கு

தொல்காப்பியர் அரங்கில் தமிழரின் கலைநுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே சிற்பத்தின் இருபுறங்களிலும் மாதவி மற்றும் மணிமேகலையின் தோற்றங்கள், அன்னம், காளை, மரத்தூண்கள், கல் தூண்கள், கல் சங்கிலி, கல்லாலான வசந்த மண்டபம், யானை-காளை இணைந்த வடிவம், உலோகத்தாலான தமிழ்த்தாய், கபிலர், ஔவையார், தொல்காப்பியர் சிலைகள், மரத்தாலான நடராஜர் சிற்பம் போன்றவற்றுடன், பழந்தமிழர் வாழ்வியலைக் காட்டும் பல்வேறு ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.

திருவள்ளுவர் அரங்கு

திருவள்ளுவர் அரங்கில் பழந்தமிழரின் உலோகவியல் நுட்பம், மருத்துவ நுட்பம், நெசவுத் தொழில்நுட்பம், போரியல் நுட்பம், நீர் மேலாண்மை, வேளாண் மேலாண்மை, மண்பாண்டத் தொழில்நுட்பம், பண்டைக்கால கல்விமுறை ஆகியவற்றைக் காட்டும் ஓவியங்கள், மாதிரி வடிவங்கள், நிழற்படங்கள், கற்சிற்பங்கள், மரச்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், பல்வேறு போர்க்கருவிகள் போன்றவை இடம்பெற்றள்ளன.

கபிலர் அரங்கு

கபிலர் அரங்கில், தமிழர் குடும்ப அமைப்பு முறை, பல்வேறு வகையான இல்லப் புழங்குபொருட்கள், ஐந்திணை வாழ்வியல் காட்சிகள், சுடுமண் சிற்பங்கள், இசைக் கருவிகள், தமிழர் அளவைகள், கல் சிற்பங்கள், இலக்கியப் பறவை வடிவங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஔவையார் அரங்கு

ஔவையார் அரங்கில், பண்டை அரசர்களின் அறம்-வீரம்-நீதிவழுவாமை-போர்முறை-கொடை போன்ற உயர் பண்புகளும், கோட்டை, அரண்மனை, கோயில்கள், பண்டைய நகரமைப்பு, கல்லணை போன்ற கட்டுமான நுட்பங்களும், மகளிரின் வீரம், வஞ்சினம் மொழிதல், வடக்கிருத்தல் போன்ற சிறப்புகளும் கலைநயத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இளங்கோவடிகள் அரங்கு

இளங்கோவடிகள் அரங்கில், பண்டைத் தமிழரின் வெளிநாட்டு வணிகம், வணிக வீதி அமைப்பு, கப்பல் கட்டுமான நுட்பம் போன்றவற்றின் ஓவியங்களும் கலங்கரை விளக்கம், நெசவுக் கருவிகள், நாவாய் போன்ற மாதிரி வடிவங்களும் உலோகக் கருவிகள், வேளாண்மை நுட்பம், நீர் மேலாண்மை போன்றவற்றின் நிழற்படங்களும் அமைந்துள்ளன.

கம்பர் அரங்கு

கம்பர் அரங்கில் பல்வேறு வகையான இசைக்கருவிகள், தமிழகப் பழங்குடிகளின் அரிதான புழங்குபொருட்கள், பல்வேறு நிகழ்வுகளின் நிழற்படங்கள், பல்வேறுவகை நாட்டுப்புறக் கலைசார் பொருட்கள், தெருக்கூத்துக் கலைப் பொருட்கள், தமிழினத்தின் தொன்மை, அறிவு நுட்பம் போன்றவற்றை உணர்த்தும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்த்தாய் ஊடக அரங்கு

இக்காட்சிக் கூடத்தில் சுமார் 2,300 சதுர அடியில், 56 இருக்கைகள் கொண்ட, நவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய திரையரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் காட்சிக்கூடத்தைப் பார்வையிடுவதற்கு முன்பாக, இத்திரையரங்கில் பழந்தமிழர் வாழ்வியல், பழந்தமிழர் மருத்துவம், தமிழர் நீர்மேலாண்மை, ஆட்சித்திறன், பழந்தமிழர் போரியல் போன்ற குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

உசாத்துணை


✅Finalised Page