under review

கொங்கணர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 31: Line 31:




{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 11:25, 11 August 2023

கொங்கணர் தமிழ்ப்புலவர், வைத்தியர். வைத்திய நூல்களையும், ஞான நூலையும் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கொங்கணர் கொங்கு மண்டலம் கோயம்புத்தூரில் பிறந்தார். வைத்தியர், புலவர். பொதிய மலையைச் சேர்ந்த முனிவர்களிடம் நால்வகைக் கலைகளையும் பாடம் கேட்டார். சைமன் காசிச்செட்டி கொங்கணார் அகத்தியர் காலத்தவர் அல்லது திருவள்ளுவர் காலத்தவர் என்று கூறினார். கொங்கு நாட்டிலுள்ள ஊதியூர் மலையில் கொங்கணர் வாழ்ந்தார் என்று கருதப்படுகிறது.

தொன்மம்

  • ஒரு மரத்தின் அடியில் கொங்கணார் அமர்ந்த போது கொக்கை எச்சமிட்டது. அதை விழித்துப் பார்த்து காக்கையை எரித்தார். வள்ளுவர் மனைவி வாசுகி உணவிடத் தாமதமானபோது அவளையும் விழித்துப்பார்த்தார். வாசுகி, “கொக்கெனவே நினைத்தாயோ கொங்கணவா” என்று கூறியதாக தண்டலையார் சதகத்தில் உள்ளது.
  • திருமழிசையாழ்வார் குருபரம்பரைக் கதைகளில் கொங்கணச்சித்தர் என்ற ரசவாதி ரசகுளிகை எடுக்க முயன்ற கதை வருகின்றது.

இலக்கிய வாழ்க்கை

கொங்கணர் ஞானநூல் ஒன்றை எழுதினர். இது 'கொங்கணர் ஞானம்' என அழைக்கப்பட்டது. 'கடைக்காண்டம்', 'குணவாகடம்' ஆகிய வைத்திய நூல்களை எழுதினார்.

விவாதம்

கொங்கணச்சித்தர், கொங்கணதேவர், கொங்கணநாதர், கொங்கண நாயக்கர், கொங்கண நாயனார் ஆகிய அனைவரும் ஒருவரா, இருவரா அல்லது பலரா என்பதை அறிய இயலவில்லை என அறிஞர்கள் கருதினர்.

பாடல் நடை

  • ஞானநூல்

கடவுளோ னொருவனுண் டேவத மொன்றே
காரணசற் குருதீட்சை தானு மொன்றே
அடைவுடனே யவனருளும் பதவி யொன்றே
யம்புவியின் மனுப்பிறவி யான தொன்றே
நடைவழியும் பலமனுவோர்க் கொன்றே யல்லா
னால்வேத மறுசமய நடக்கை வேறாத்
திடமுடைய தேவர்பல ருண்டென் போர்க்
டீநரகுக் காளாவர் திண்ணந் தானே

நூல் பட்டியல்

  • ஞானநூல்
  • கடைக்காண்டம்
  • குணவாகடம்

உசாத்துணை



✅Finalised Page