தேசிகப் பிரபந்தம்: Difference between revisions
| Line 21: | Line 21: | ||
====== பரமதபங்கம் ====== | ====== பரமதபங்கம் ====== | ||
தேசிகர் பிற ஞான மார்க்கங்களைச் (பௌத்தம், ஜைனம், சார்வாகம், காணபத்யம் போன்ற) | தேசிகர் பிற ஞான மார்க்கங்களைச் (பௌத்தம், ஜைனம், சார்வாகம், காணபத்யம் போன்ற) சேர்ந்தவர்களுடன் வாதம் செய்து வைணவமே உயர்ந்தது என நிலைநாட்டிய 'பரமதபங்கம்' என்னும் பிரபந்தத்தின் சுருக்கம். | ||
====== மெய்விரதமான்மியம் ====== | ====== மெய்விரதமான்மியம் ====== | ||
காஞ்சிபுரத்தில் பேரருளாளன் அவதரித்த கதை(அத்திகிரி மஹாத்மியம்) கூறப்படுகிறது | காஞ்சிபுரத்தில் பேரருளாளன் அவதரித்த கதை(அத்திகிரி மஹாத்மியம்) கூறப்படுகிறது. | ||
== | ====== அருத்தபஞ்சகம் (அர்த்தபஞ்சகம்) ====== | ||
முக்தி பெற வேண்டுபவன் உணரவேண்டிய ஐந்து : பரமாத்மாவின் ஸவ்ரூபம், ஜீவாதமாவாகிய தன்னுடைய ஸ்வரூபம், ஜீவாத்மாவை அடையும் வழியில் உள்ள இடையூறுகள், மோட்சத்திற்கான உபாயங்கள், பகவத் அனுபவம், | |||
====== அடைக்கலப்பத்து ====== | |||
பேரருராளன் திருவடிகளைச் சரணடைதல்,உக்திநிஷை, ஆசார்யநிஷ்டை, பாகவதநிஷ்டை. விபீஷணன் முதல் பலர் சரணாகதியடைந்த விதம் ஆகியன 10 பாடல்களில் பாடப்பட்டன. | |||
====== ஶ்ரீவைணவதினசரி ====== | |||
வைணவன் தினசரி செய்ய வேண்டியவை அபிகமனம், உபாதானம், இஜ்யை(திருவாராதனம்), ஸ்வாத்யாயம், யோகம் ஒவ்வொன்றிற்கும் இரண்டாக 10 பாசுரங்கள் உள்ளன. | |||
====== திருச்சின்னமாலை ====== | |||
திருச்சின்னம் பேரருராளன் சன்னிதியில் வாசிக்கப்படும் ஓர் இசைக்கருவி. திருமந்திரத்தின் சாரார்த்தம்(6), த்வயத்தின் விசேஷம்(2), சரம ஸ்லோகத்தின் மகிமை(1), பேரருராளனின் பெருமை(1) - இவை 10 பாசுரங்களில் கூறப்படுகின்றன. | |||
====== பன்னிருநாமம் ====== | |||
கேசவன் முதல் தாமோதரன் வரை திருமாலின் 12 நாமங்களைச் சொல்லி (கேசவன் ,நாராயணன் , மாதவன் , கோவிந்தன் ,விஷ்ணு, மதுசூதனன்,திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன் ,ருஷீகேசன் , பத்மநாபன்,தாமோதரன் )வைணவர் உடலின் பன்னிரு இடங்களில் திருமண்காப்பு(நாமம்) அணிவர். அந்த நாமங்களில் உள்ள திருமாலின் மேனி நிறம், தரித்திருக்கும் ஆயுதங்கள், வீற்றிருக்கும் திசை, மனித உடலில் புண்ட்ர ரூபமாய் அவை இருக்கும் பாகங்கள்-இவை விளக்கப்பட்டுள்ளன. வைணவர்கள் நாமம் தரிக்கும்போது ஓதவேண்டிய பாசுரங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. | |||
====== திருமந்திரச்சுருக்கு ====== | |||
திருமந்திரத்தை(எட்டெழுத்து) பதம் பதமாகப் பிரித்து பொருள் கூறப்பட்டுள்ளது. அகாரம், அதன்மேல் ஏறி அழிந்துகிடக்கும் நான்காம் வேற்றுமை உருபு, உகாரம், மகாரம், நம, நார என்னும் பதம், அயன் என்னும் பதம், நான்காம் வேற்றுமை உருபு ஆகியவற்ரின் பொருள் கூறப்படுகிறது. | |||
====== துவயச்சுருக்கு(த்வயச்சுருக்கு) ====== | |||
த்வய மந்திரத்தின் விளக்கம். அதன் முதல் பகுதி உபாயத் | |||
Revision as of 20:08, 5 August 2023
தேசிகப் பிரபந்தம் வேதாந்த தேசிகர் எழுதிய பிரபந்த நூல்களின் தொகுப்பு. தேசிகர் இயற்றிய அனைத்து தமிழ்ப் பாசுரங்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்
தேசிகப் பிரபந்தத்திலுள்ள பாடல்களை இயற்றியவர் வேதாந்த தேசிகர். வைணவ ஆசார்யர். 'சுவாமி தேசிகன்', 'தூப்புல் நிகமாந்த தேசிகன்', 'தூப்புல் பிள்ளை', ‘உபய வேதாந்தாசாரியர்’, ‘சர்வ தந்திர சுதந்திரர்’ மற்றும் ‘வேதாந்த தேசிகன்’ என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டார். தமிழ், சமஸ்கிருதம், மணிப்பிரவாளம் என மூன்று மொழிகளிலும் 120-க்கு மேற்பட்ட நூல்களை எழுதினார்.
நூல் அமைப்பு
தேசிகப் பிரபந்தம் 17 பகுதிகளாகத் தொகுக்கப்பட்டது. இப்பகுதிகள் ' 'ரஹஸ்யங்கள்' எனப்பட்டன.
அமிருதரஞ்சனி
அமுதம் போல இனிமையுடையது என்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம். இதில் 39 பாடல்கள்(பாசுரங்கள்) உள்ளன. சேதனம்(சித்தம் உள்ளவை), அசேதனம்(சித்தம் இல்லாதவை), பரம்பொருள் என மூன்று தத்துவங்களும் வைணவத்தின் மூன்று ரஹஸ்யங்களான த்வயம், சரம ஸ்லோகம், திருமந்திரம் ஆகியவற்றின் பொருள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
அதிகாரசங்கிரகம்
தேசிகர் இயற்றிய தேசிகஸூக்தியின் 32 அதிகாரங்களின் சுருக்கன் அந்தாதித் தொடையாக அமைந்தது. ஆழ்வார்கள், எட்டு ஆசார்யர்கள், ராமானுஜர், ஆளவந்தார், நாதமுனிகள் இவர்களின் சிறப்பும் கூறப்படுகின்றன.
அமிருதாசுவாதினி
ரஹஸ்யத்ரயம், ராமாயணத்தின் சரணாகதிகள்(காக சரணாகதி, விபீஷண சரணாகதி), வராஹ சரமஸ்லோகத்தின் பொருள், அமலனாதிபிரான் பாசுரங்களின் சாரம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.
பரமபதசோபானம்
தத்துவங்களை அறிதல், சம்சாரத்தில் வெறுப்பு, உலக இன்பங்களில் ஆசையற்று இருத்தல், பாவத்திற்கு அஞ்சுதல், மோட்சம் பெறும் வழிகளைப் பின்பற்றல், உயில் உடலைவிட்டு வெளியேறல், அர்ச்சிராதி (உச்சந்தலை வழியே உயிர் வெளியேறல்), வைகுண்டம் செல்லல், அங்கு நாராயணனைக் கண்டு ஆனந்தம் கொள்ளல்- இவை கூறப்பட்டுள்ளன.
பரமதபங்கம்
தேசிகர் பிற ஞான மார்க்கங்களைச் (பௌத்தம், ஜைனம், சார்வாகம், காணபத்யம் போன்ற) சேர்ந்தவர்களுடன் வாதம் செய்து வைணவமே உயர்ந்தது என நிலைநாட்டிய 'பரமதபங்கம்' என்னும் பிரபந்தத்தின் சுருக்கம்.
மெய்விரதமான்மியம்
காஞ்சிபுரத்தில் பேரருளாளன் அவதரித்த கதை(அத்திகிரி மஹாத்மியம்) கூறப்படுகிறது.
அருத்தபஞ்சகம் (அர்த்தபஞ்சகம்)
முக்தி பெற வேண்டுபவன் உணரவேண்டிய ஐந்து : பரமாத்மாவின் ஸவ்ரூபம், ஜீவாதமாவாகிய தன்னுடைய ஸ்வரூபம், ஜீவாத்மாவை அடையும் வழியில் உள்ள இடையூறுகள், மோட்சத்திற்கான உபாயங்கள், பகவத் அனுபவம்,
அடைக்கலப்பத்து
பேரருராளன் திருவடிகளைச் சரணடைதல்,உக்திநிஷை, ஆசார்யநிஷ்டை, பாகவதநிஷ்டை. விபீஷணன் முதல் பலர் சரணாகதியடைந்த விதம் ஆகியன 10 பாடல்களில் பாடப்பட்டன.
ஶ்ரீவைணவதினசரி
வைணவன் தினசரி செய்ய வேண்டியவை அபிகமனம், உபாதானம், இஜ்யை(திருவாராதனம்), ஸ்வாத்யாயம், யோகம் ஒவ்வொன்றிற்கும் இரண்டாக 10 பாசுரங்கள் உள்ளன.
திருச்சின்னமாலை
திருச்சின்னம் பேரருராளன் சன்னிதியில் வாசிக்கப்படும் ஓர் இசைக்கருவி. திருமந்திரத்தின் சாரார்த்தம்(6), த்வயத்தின் விசேஷம்(2), சரம ஸ்லோகத்தின் மகிமை(1), பேரருராளனின் பெருமை(1) - இவை 10 பாசுரங்களில் கூறப்படுகின்றன.
பன்னிருநாமம்
கேசவன் முதல் தாமோதரன் வரை திருமாலின் 12 நாமங்களைச் சொல்லி (கேசவன் ,நாராயணன் , மாதவன் , கோவிந்தன் ,விஷ்ணு, மதுசூதனன்,திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன் ,ருஷீகேசன் , பத்மநாபன்,தாமோதரன் )வைணவர் உடலின் பன்னிரு இடங்களில் திருமண்காப்பு(நாமம்) அணிவர். அந்த நாமங்களில் உள்ள திருமாலின் மேனி நிறம், தரித்திருக்கும் ஆயுதங்கள், வீற்றிருக்கும் திசை, மனித உடலில் புண்ட்ர ரூபமாய் அவை இருக்கும் பாகங்கள்-இவை விளக்கப்பட்டுள்ளன. வைணவர்கள் நாமம் தரிக்கும்போது ஓதவேண்டிய பாசுரங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
திருமந்திரச்சுருக்கு
திருமந்திரத்தை(எட்டெழுத்து) பதம் பதமாகப் பிரித்து பொருள் கூறப்பட்டுள்ளது. அகாரம், அதன்மேல் ஏறி அழிந்துகிடக்கும் நான்காம் வேற்றுமை உருபு, உகாரம், மகாரம், நம, நார என்னும் பதம், அயன் என்னும் பதம், நான்காம் வேற்றுமை உருபு ஆகியவற்ரின் பொருள் கூறப்படுகிறது.
துவயச்சுருக்கு(த்வயச்சுருக்கு)
த்வய மந்திரத்தின் விளக்கம். அதன் முதல் பகுதி உபாயத்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.