under review

உலாமடல்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected error in line feed character)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Ulamadal|Title of target article=Ulamadal}}
{{Read English|Name of target article=Ulamadal|Title of target article=Ulamadal}}
''உலாமடல்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  மடல் பழந்தமிழ் [[அகப்பொருள்]] இலக்கியங்களில் காணப்படும் [[மடலூர்தல்|மடலூர்தலைக்]] குறிக்கிறது. தான் விரும்பும் ஒருத்தியை அடைய முடியாத ஒருவன் அப்பெண்ணை அடைவதற்காக ஊராரின் ஆதரவை வேண்டிப் பனை மடலால் குதிரை வடிவம் செய்து அதன் மீது ஏறி ஊரில் உலா வருவது மடலூர்தல். பெண்ணொருத்தியைக் கனவில் கண்டு கனவிலேயே அவளுடன் கூடிய ஒருவன், கனவு முடிந்த நிலையில் அவளை அடைவதற்கு மடலூர்வேன் எனக் கூறுவதாகப் பாடுவது உலாமடல் ஆகும் <ref><poem>கனவின் ஒருத்தியைக் கண்டு புணர்ந்தோன்

நனவின் அவள்பொருட் டாக நானே
நனவின் அவள்பொருட் டாக நானே

Revision as of 20:10, 12 July 2023

To read the article in English: Ulamadal. ‎

உலாமடல் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மடல் பழந்தமிழ் அகப்பொருள் இலக்கியங்களில் காணப்படும் மடலூர்தலைக் குறிக்கிறது. தான் விரும்பும் ஒருத்தியை அடைய முடியாத ஒருவன் அப்பெண்ணை அடைவதற்காக ஊராரின் ஆதரவை வேண்டிப் பனை மடலால் குதிரை வடிவம் செய்து அதன் மீது ஏறி ஊரில் உலா வருவது மடலூர்தல். பெண்ணொருத்தியைக் கனவில் கண்டு கனவிலேயே அவளுடன் கூடிய ஒருவன், கனவு முடிந்த நிலையில் அவளை அடைவதற்கு மடலூர்வேன் எனக் கூறுவதாகப் பாடுவது உலாமடல் ஆகும் [1][2]. இது கலிவெண்பாவில் அமையும்.

அடிக்குறிப்புகள்

  1. கனவின் ஒருத்தியைக் கண்டு புணர்ந்தோன்
    நனவின் அவள்பொருட் டாக நானே
    ஊர்வேன் மடல்என்று உரைப்பது உலாமடல்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 857

  2. கனவில் ஒருத்தியைக் கண்டு கலவி
    இன்பம் நுகர்ந்தோன் விழித்த பின்அவள்
    பொருட்டுமடல் ஊர்வேன் என்பது கலிவெண்
    பாவான் முடிப்பது உலாமடல் ஆகும்

    - முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 125

உசாத்துணை

இதர இணைப்புகள்

✅Finalised Page