under review

ழ- சிற்றிதழ்: Difference between revisions

From Tamil Wiki
(Category Category:சிற்றிதழ்கள் சேர்க்கப்பட்டது)
(Corrected text format issues)
Line 1: Line 1:
[[File:ழ.jpg|thumb|ழ]]
[[File:ழ.jpg|thumb|ழ]]
ழ (1978-1988) கவிஞர் [[ஆத்மாநாம்]] ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய கவிதைக்கான சிற்றிதழ்.

== வரலாறு ==
== வரலாறு ==
'ழ’ மே 1978-ல் முதல் பிரசுரம் பெற்றது.  [[ஞானக்கூத்தன்]] ஆர். ராஜகோபால் என்று ஒரு நண்பர்குழு அதன் பின்னணியில் இருந்தது.  ஜனவரி 1983-ல் அதன் 24-ஆம் இதழ் வந்த பின் அது தேக்கமுற்றது. பிறகு 1987-ல் 'ழ’ மீண்டும் வெளிவந்தது.  கவிஞர் ஞானக்கூத்தன் அதன் ஆசிரியரானார். கவிதைகளையும், கவிதை சம்பந்தமான கட்டுரைகளையும் ழ வெளியிட்டு வந்தது. 1988-ல் சில இதழ்கள் வந்தன. 1988-ல் நின்றுவிட்டது

== உள்ளடக்கம், இயல்பு ==
== உள்ளடக்கம், இயல்பு ==
ழ முதன்மையாக நவீனக் கவிதைக்கான சிற்றிதழ். எழுத்து இதழின் கவிதைப்போக்கில் இருந்து விலகிய சென்னைசார்ந்த ஓர் இலக்கிய குழு [[ந.முத்துசாமி|ந. முத்துசாமி]], [[சா.கந்தசாமி|சா. கந்தசாமி]], [[ஞானக்கூத்தன்]] ஆகியோர் முனைப்பில் [[கசடதபற_(இதழ்)|கசடதபற]] என்னும் சிற்றிதழை தொடங்கியது. அவர்கள் இலட்சியவாதம், கற்பனாவாதம் ஆகியவற்றுக்கு எதிரான கவிதைகளின் மரபொன்றை உருவாக்கினர். நவீனத்துவக் கவிதைகள் என வரையறை செய்யத்தக்கவை அவை. அவர்களில் ஒருவரான ஞானக்கூத்தனுக்கு நெருக்கமானவரான [[ஆத்மாநாம்]] அவர்களிடமிருந்து சற்று விலகி நெகிழ்வும், உணர்வுப்பாங்கும், இசைத்தன்மையும் கொண்ட கவிதைகளை எழுதினார். தன் கவிதைப்பார்வையை முன்வைக்கும் பொருட்டு ஆத்மாநாம் உருவாக்கிய ழ இதழில் கசடதபற குழுவினரும் பிறரும் கவிதைகளையும் மொழியாக்கங்களையும் வெளியிட்டனர்.

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
ழ தமிழில் தமிழ் நவீனக்கவிதைச்சூழலில் நவீனத்துவ அழகியலும் இருத்தலியல் பார்வையும் கொண்ட படைப்புக்களை முதன்மையாக முன்வைத்த இதழ்.  

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தமிழில் சிறு பத்திரிகைகள் ஆசிரியர் வல்லிக்கண்ணன்

* [https://www.ideakart.com/products/18-1981-tamil-edition-1281647 Buy ழ சிற்றிதழ் -ஜூலை 18,1981 (Tamil Edition) Online at Low Prices in India | ழ சிற்றிதழ் - 18: ஜூலை 1981 (Tamil Edition) Reviews, Ratings | IdeaKart.com India]

* [https://aekaanthan.wordpress.com/2020/10/20/%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92/ ழ கவிதைகள் அனைத்தும் ஒரே நூலாக]

{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிதழ்கள்]]
[[Category:சிற்றிதழ்கள்]]

Revision as of 14:50, 3 July 2023

ழ (1978-1988) கவிஞர் ஆத்மாநாம் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய கவிதைக்கான சிற்றிதழ்.

வரலாறு

'ழ’ மே 1978-ல் முதல் பிரசுரம் பெற்றது. ஞானக்கூத்தன் ஆர். ராஜகோபால் என்று ஒரு நண்பர்குழு அதன் பின்னணியில் இருந்தது. ஜனவரி 1983-ல் அதன் 24-ஆம் இதழ் வந்த பின் அது தேக்கமுற்றது. பிறகு 1987-ல் 'ழ’ மீண்டும் வெளிவந்தது. கவிஞர் ஞானக்கூத்தன் அதன் ஆசிரியரானார். கவிதைகளையும், கவிதை சம்பந்தமான கட்டுரைகளையும் ழ வெளியிட்டு வந்தது. 1988-ல் சில இதழ்கள் வந்தன. 1988-ல் நின்றுவிட்டது

உள்ளடக்கம், இயல்பு

ழ முதன்மையாக நவீனக் கவிதைக்கான சிற்றிதழ். எழுத்து இதழின் கவிதைப்போக்கில் இருந்து விலகிய சென்னைசார்ந்த ஓர் இலக்கிய குழு ந. முத்துசாமி, சா. கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியோர் முனைப்பில் கசடதபற என்னும் சிற்றிதழை தொடங்கியது. அவர்கள் இலட்சியவாதம், கற்பனாவாதம் ஆகியவற்றுக்கு எதிரான கவிதைகளின் மரபொன்றை உருவாக்கினர். நவீனத்துவக் கவிதைகள் என வரையறை செய்யத்தக்கவை அவை. அவர்களில் ஒருவரான ஞானக்கூத்தனுக்கு நெருக்கமானவரான ஆத்மாநாம் அவர்களிடமிருந்து சற்று விலகி நெகிழ்வும், உணர்வுப்பாங்கும், இசைத்தன்மையும் கொண்ட கவிதைகளை எழுதினார். தன் கவிதைப்பார்வையை முன்வைக்கும் பொருட்டு ஆத்மாநாம் உருவாக்கிய ழ இதழில் கசடதபற குழுவினரும் பிறரும் கவிதைகளையும் மொழியாக்கங்களையும் வெளியிட்டனர்.

இலக்கிய இடம்

ழ தமிழில் தமிழ் நவீனக்கவிதைச்சூழலில் நவீனத்துவ அழகியலும் இருத்தலியல் பார்வையும் கொண்ட படைப்புக்களை முதன்மையாக முன்வைத்த இதழ்.

உசாத்துணை

✅Finalised Page