under review

திருக்கயிலாய பரம்பரை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected text format issues)
Tag: Reverted
Line 6: Line 6:
====== புறச்சந்தான மரபு ======
====== புறச்சந்தான மரபு ======
புறச்சந்தான மரபில் முதலில் தோன்றியவர் [[மெய்கண்டார்]].இவர் நடுநாட்டில் உள்ள பாடல்பெற்ற தலமாகிய திருப்பெண்ணாகடம் எனும் தலத்தில் அச்சுதக்களப்பாளர் எனும் பெரியாருக்கு தோன்றியவர். இவரது இளமைப்பெயர் திருவெண்காட்டுநம்பி. குழந்தைப் பருவத்தில் சிறுதேர்உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் வான்வழி வந்த பரஞ்சோதியார் உண்மைப்பொருளை இவருக்கு அருளினார்.அன்றுமுதல் திருவெண்காட்டுநம்பி "மெய்கண்டார்" ஆனார்.

அச்சுதக்களப்பாளரின் குலகுரு சகலாகமபண்டிதர் தமக்கு மெய்ப்பொருள் உணர்த்த வேண்டினார். மெய்கண்டாரும் அவரது விருப்பத்திற்கேற்ப மெய்ப்பொருளை உணர்த்தினார். இவரே [[அருணந்தி சிவாச்சாரியார்]] ஆவார். மெய்கண்டார் [[சிவஞானபோதம்]] என்ற நூலை இயற்றினார். அந்நூற்பொருளை எளிமைப்படுத்தி அருணந்தியார் [[சிவஞான சித்தியார்]] என்ற நூலை இயற்றினார். இவரின் மாணவர் [[மறைஞான சம்பந்தர்]]. மறைஞான சம்பந்தரின் மாணவர் [[உமாபதி சிவாச்சாரியார்]]. இவர் மெய்கண்ட சாத்திரங்களுள் எட்டு நூல்களை ( சித்தாந்த அட்டகம் ) இயற்றியவர்

உமாபதி சிவாச்சாரியாரின் வழிவந்த அருள்நமச்சிவாயரின் மாணாக்கரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமசிவாயமூர்த்திகள் எனப்படும் பஞ்சாக்கர தேசிகர். இவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாக விளங்கியவர் ஆதிசிவப்பிரகாசர். இவரே தமிழகத்தில் வீரசைவ ஆதீனத்தைச் சைவசிந்தாந்தமரபில் தோற்றுவித்தவர். தமிழகத்தில் பல சைவ மடங்கள் திருக்கயிலாய பரம்பரையைச் சேர்ந்தவை.  

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 14:44, 3 July 2023

திருக்கயிலாய பரம்பரை: (பொ.யு. 13 -ஆம் நூற்றாண்டுமுதல்) திருக்கைலாய பரம்பரை. தமிழகத்தில் சைவசித்தாந்த மரபின் தத்துவத்தை புறச்சமய பாதிப்பின்றி முன்னெடுக்கும்பொருட்டு உருவான ஒரு ஆசிரிய மாணவ மரபு. தமிழகத்தின் முதன்மையான தத்துவ சிந்தனைப்பள்ளிகளில் ஒன்று.

வரலாறு, தொன்மம்

தமிழகத்தில் பொ.யு. 8-ஆம் நூற்றாண்டு முதல் வேதாந்தம் சைவசித்தாந்தத்தின் மீது தீவிரமான பாதிப்பை உருவாக்கத் தொடங்கியது., இது ஏகான்மவாத சைவம் எனப்படுகிறது. சைவ சித்தாந்த உண்மைகளைத் திருமுறை வழியில் விளக்குவதற்கும், சைவசித்தாந்த தத்துவக்கருத்துக்களை தனித்தன்மையுடன் நிலைநிறுத்துவதற்கும் மெய்கண்டார் சிவஞானபோதம் என்னும் நூலை உருவாக்கினார். அவரிடமிருந்து உருவான ஆசிரியர்- மாணவர் மரபு திருக்கயிலாய பரம்பரை என பெயர் பெற்றது. இது சந்தான மரபு (மைந்தர் மரபு), மெய்கண்ட சந்தானம் என்று கூறப்படுகிறது. ஆசிரியர் மாணவர் இருவரும் தந்தையும் மைந்தனுமாக அமைவது என்பது இதன் பொருள்

அகச்சந்தானமரபு

கயிலைநாதரான சிவபெருமானே இம்மரபுக்கு முதல்வர். கயிலைநாதர் சைவசித்தாந்தச் செம்பொருளைத் தனது மாணவராகிய நந்தி தேவருக்கும் சொன்னார்.நந்தி அதை தன் மாணவர்களான சனகர், சனத்குமார ஆகியோருக்குச் சொன்னார். சனற்குமாரர் தமது முதல் மாணவராக விளங்கிய சத்திய ஞானதரிசினிகளுக்குச் சைவசித்தாந்த பொருளை கூறினார். அவர் அச்செம்பொருளின் நுட்பத்தைப் பரஞ்சோதி முனிவருக்கு அருளினார். இம்மரபுதான் திருக்கயிலாய அகச்சந்தான மரபு என அழைக்கப்படுகிறது. பரஞ்சோதி மரபில் இருந்து உருவானது புறச்சந்தான மரபு. இது புறவுலகில் வாழ்ந்து மறைந்த சைவஞானிகளால் ஆனது.

புறச்சந்தான மரபு

புறச்சந்தான மரபில் முதலில் தோன்றியவர் மெய்கண்டார்.இவர் நடுநாட்டில் உள்ள பாடல்பெற்ற தலமாகிய திருப்பெண்ணாகடம் எனும் தலத்தில் அச்சுதக்களப்பாளர் எனும் பெரியாருக்கு தோன்றியவர். இவரது இளமைப்பெயர் திருவெண்காட்டுநம்பி. குழந்தைப் பருவத்தில் சிறுதேர்உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் வான்வழி வந்த பரஞ்சோதியார் உண்மைப்பொருளை இவருக்கு அருளினார்.அன்றுமுதல் திருவெண்காட்டுநம்பி "மெய்கண்டார்" ஆனார். அச்சுதக்களப்பாளரின் குலகுரு சகலாகமபண்டிதர் தமக்கு மெய்ப்பொருள் உணர்த்த வேண்டினார். மெய்கண்டாரும் அவரது விருப்பத்திற்கேற்ப மெய்ப்பொருளை உணர்த்தினார். இவரே அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றினார். அந்நூற்பொருளை எளிமைப்படுத்தி அருணந்தியார் சிவஞான சித்தியார் என்ற நூலை இயற்றினார். இவரின் மாணவர் மறைஞான சம்பந்தர். மறைஞான சம்பந்தரின் மாணவர் உமாபதி சிவாச்சாரியார். இவர் மெய்கண்ட சாத்திரங்களுள் எட்டு நூல்களை ( சித்தாந்த அட்டகம் ) இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியாரின் வழிவந்த அருள்நமச்சிவாயரின் மாணாக்கரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமசிவாயமூர்த்திகள் எனப்படும் பஞ்சாக்கர தேசிகர். இவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாக விளங்கியவர் ஆதிசிவப்பிரகாசர். இவரே தமிழகத்தில் வீரசைவ ஆதீனத்தைச் சைவசிந்தாந்தமரபில் தோற்றுவித்தவர். தமிழகத்தில் பல சைவ மடங்கள் திருக்கயிலாய பரம்பரையைச் சேர்ந்தவை.

உசாத்துணை

✅Finalised Page