வேணு வேட்ராயன்: Difference between revisions
(Finalized) |
|||
Line 3: | Line 3: | ||
== பிறப்பு, தனிவாழ்க்கை == | == பிறப்பு, தனிவாழ்க்கை == | ||
வேணு வேட்ராயன் கிருஷ்ணகிரி மாவட்டம், மிட்டாலி புதூர் என்ற கிராமத்தில் வேட்ராயன் - ரஞ்சிதம் தம்பதியருக்கு அக்டோபர் 30, 1978-ல் பிறந்தார். D.K. சாமி மெட்ரிகுலேஷன் பள்ளி, கிருஷ்ணகிரி மற்றும் ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சேலத்திலும் பள்ளி கல்வி கற்றார். மெட்ராஸ் மருத்துவ கல்லூரில் | வேணு வேட்ராயன் கிருஷ்ணகிரி மாவட்டம், மிட்டாலி புதூர் என்ற கிராமத்தில் வேட்ராயன் - ரஞ்சிதம் தம்பதியருக்கு அக்டோபர் 30, 1978-ல் பிறந்தார். D.K. சாமி மெட்ரிகுலேஷன் பள்ளி, கிருஷ்ணகிரி மற்றும் ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சேலத்திலும் பள்ளி கல்வி கற்றார். மெட்ராஸ் மருத்துவ கல்லூரில் 2000-ஆம் ஆண்டு மருத்துவத்தில் பட்டம் பெற்றார். | ||
சிறிதுகாலம் கப்பலில் மருத்துவராக பணியாற்றிய பின் தற்போது சென்னையில் மருத்துவராக உள்ளார். | சிறிதுகாலம் கப்பலில் மருத்துவராக பணியாற்றிய பின் தற்போது சென்னையில் மருத்துவராக உள்ளார். | ||
Line 10: | Line 10: | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
வேணு வேட்ராயன் சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வமுடையவர். கல்லூரி கலை விழாக்களில் மேடை அலங்கார ஓவியங்கள் வரைந்துள்ளார்.விஷ்ணுபுரம்-ஊட்டி காவிய முகாம் வழியாக இலக்கிய அறிமுகம் அடைந்ததாகக் குறிப்பிடுகிறார். தனது கவிதைகளின் ஆதர்சங்களாக பிரமிள், தேவதேவனை குறிப்பிடுகிறார். | வேணு வேட்ராயன் சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வமுடையவர். கல்லூரி கலை விழாக்களில் மேடை அலங்கார ஓவியங்கள் வரைந்துள்ளார். விஷ்ணுபுரம்-ஊட்டி காவிய முகாம் வழியாக இலக்கிய அறிமுகம் அடைந்ததாகக் குறிப்பிடுகிறார். தனது கவிதைகளின் ஆதர்சங்களாக பிரமிள், தேவதேவனை குறிப்பிடுகிறார். | ||
2014-ல் இருந்து எழுதிய கவிதைகள் 2019-ல் 'அலகில் அலகு' என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. | |||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
வேணு வேட்ராயன் ஆரம்பம் முதலே அறிவார்த்தமாக எழுதப்படும் கவிதைகள், எண்ணி உருவாக்கப்படும் படிமங்கள் போன்றவற்றின் மீது விலக்கம் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார். | வேணு வேட்ராயன் ஆரம்பம் முதலே அறிவார்த்தமாக எழுதப்படும் கவிதைகள், எண்ணி உருவாக்கப்படும் படிமங்கள் போன்றவற்றின் மீது விலக்கம் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார். | ||
[[File:விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது.jpg|alt=விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது|thumb|346x346px|விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது]] | [[File:விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது.jpg|alt=விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது|thumb|346x346px|விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது]] | ||
“வேணு வேட்ராயனின் கவிதைகள் முற்றிலும் உலகியல் மறுப்பு கொண்டவை. அடிப்படை விழைவுகளுக்கு அப்பால் செல்ல முயல்பவை. பிரபஞ்சத்துடனான ஒத்திசைவை கற்பனை செய்பவை. தனிமனிதனைக் கடந்த தத்துவத் தேடல்களைக் கொண்டவை. அதனாலேயே இங்கே பொதுவாக கவிதைகளை வாசித்து - பேசும் வட்டத்திற்கு வெளியே நிலைகொள்பவை.” என்று எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார். | “வேணு வேட்ராயனின் கவிதைகள் முற்றிலும் உலகியல் மறுப்பு கொண்டவை. அடிப்படை விழைவுகளுக்கு அப்பால் செல்ல முயல்பவை. பிரபஞ்சத்துடனான ஒத்திசைவை கற்பனை செய்பவை. தனிமனிதனைக் கடந்த தத்துவத் தேடல்களைக் கொண்டவை. அதனாலேயே இங்கே பொதுவாக கவிதைகளை வாசித்து - பேசும் வட்டத்திற்கு வெளியே நிலைகொள்பவை.” என்று எழுத்தாளர் [[ஜெயமோகன்]] மதிப்பிடுகிறார். | ||
== விருது == | == விருது == |
Revision as of 06:42, 10 June 2023
வேணு வேட்ராயன் (பிறப்பு: அக்டோபர் 30, 1978) தமிழ்க்கவிஞர்.
பிறப்பு, தனிவாழ்க்கை
வேணு வேட்ராயன் கிருஷ்ணகிரி மாவட்டம், மிட்டாலி புதூர் என்ற கிராமத்தில் வேட்ராயன் - ரஞ்சிதம் தம்பதியருக்கு அக்டோபர் 30, 1978-ல் பிறந்தார். D.K. சாமி மெட்ரிகுலேஷன் பள்ளி, கிருஷ்ணகிரி மற்றும் ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சேலத்திலும் பள்ளி கல்வி கற்றார். மெட்ராஸ் மருத்துவ கல்லூரில் 2000-ஆம் ஆண்டு மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.
சிறிதுகாலம் கப்பலில் மருத்துவராக பணியாற்றிய பின் தற்போது சென்னையில் மருத்துவராக உள்ளார்.
சென்னையில் சகோதரியின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
வேணு வேட்ராயன் சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வமுடையவர். கல்லூரி கலை விழாக்களில் மேடை அலங்கார ஓவியங்கள் வரைந்துள்ளார். விஷ்ணுபுரம்-ஊட்டி காவிய முகாம் வழியாக இலக்கிய அறிமுகம் அடைந்ததாகக் குறிப்பிடுகிறார். தனது கவிதைகளின் ஆதர்சங்களாக பிரமிள், தேவதேவனை குறிப்பிடுகிறார்.
2014-ல் இருந்து எழுதிய கவிதைகள் 2019-ல் 'அலகில் அலகு' என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது.
இலக்கிய இடம்
வேணு வேட்ராயன் ஆரம்பம் முதலே அறிவார்த்தமாக எழுதப்படும் கவிதைகள், எண்ணி உருவாக்கப்படும் படிமங்கள் போன்றவற்றின் மீது விலக்கம் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார்.
“வேணு வேட்ராயனின் கவிதைகள் முற்றிலும் உலகியல் மறுப்பு கொண்டவை. அடிப்படை விழைவுகளுக்கு அப்பால் செல்ல முயல்பவை. பிரபஞ்சத்துடனான ஒத்திசைவை கற்பனை செய்பவை. தனிமனிதனைக் கடந்த தத்துவத் தேடல்களைக் கொண்டவை. அதனாலேயே இங்கே பொதுவாக கவிதைகளை வாசித்து - பேசும் வட்டத்திற்கு வெளியே நிலைகொள்பவை.” என்று எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.
விருது
2020-ஆம் ஆண்டில் இளம்கவிஞர்களுக்கு வழங்கப்படும் விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விருதளிக்கப்பட்டது.
நூல்கள்
- அலகில் அலகு - கவிதை தொகுப்பு - விருட்சம் வெளியீடு 2019
உசாத்துணை
✅Finalised Page