தமிழச்சி தங்கபாண்டியன்: Difference between revisions
No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
[[File:தமிழச்சி தங்கபாண்டியன்.png|thumb|280x280px|தமிழச்சி தங்கபாண்டியன்]] | [[File:தமிழச்சி தங்கபாண்டியன்.png|thumb|280x280px|தமிழச்சி தங்கபாண்டியன்]] | ||
[[File:தமிழச்சி தங்கபாண்டியன்4.jpg|thumb|240x240px|தமிழச்சி தங்கபாண்டியன்]] | |||
தமிழச்சி தங்கபாண்டியன் (த. சுமதி) (பிறப்பு: ஜூலை 25, 1962) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், நாடகக் கலைஞர், அரசியல்வாதி. | தமிழச்சி தங்கபாண்டியன் (த. சுமதி) (பிறப்பு: ஜூலை 25, 1962) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், நாடகக் கலைஞர், அரசியல்வாதி. | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
Line 5: | Line 6: | ||
[[File:தமிழச்சி தங்கபாண்டியன்2.jpg|thumb|365x365px|தமிழச்சி தங்கபாண்டியன்]] | [[File:தமிழச்சி தங்கபாண்டியன்2.jpg|thumb|365x365px|தமிழச்சி தங்கபாண்டியன்]] | ||
தமிழச்சி தங்கபாண்டியன் மல்லாங்கிணற்றில் தொடக்கக் கல்வியும், விருதுநகரில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் பயின்றார். மதுரை மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரியில் புதுமுக வகுப்பு பயின்றார். மதுரை தியாகராயர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றார். ‘ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களின் ஆங்கில படைப்பிலக்கிய வெளிப்பாடுகள்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஆஸ்திரேலிய இந்திய கவுன்சில் எனும் அமைப்பின் விருதான AIC Fellow 2002 பெற்று, ஆஸ்திரேலிய மோனாஸ் (Monash) பல்கலைக்கழகத்தில் தன் கள ஆய்வை முடித்தார். | தமிழச்சி தங்கபாண்டியன் மல்லாங்கிணற்றில் தொடக்கக் கல்வியும், விருதுநகரில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் பயின்றார். மதுரை மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரியில் புதுமுக வகுப்பு பயின்றார். மதுரை தியாகராயர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றார். ‘ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களின் ஆங்கில படைப்பிலக்கிய வெளிப்பாடுகள்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஆஸ்திரேலிய இந்திய கவுன்சில் எனும் அமைப்பின் விருதான AIC Fellow 2002 பெற்று, ஆஸ்திரேலிய மோனாஸ் (Monash) பல்கலைக்கழகத்தில் தன் கள ஆய்வை முடித்தார். | ||
[[File:தமிழச்சி தங்கபாண்டியன்6.jpg|thumb|325x325px|தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்தினருடன்]] | |||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
காவல்துறை அதிகாரி சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டார். இருமகள்கள். சென்னை ராணிமேரிக் கல்லூரியில், ஆங்கிலப் பேராசிரியையாக பன்னிரெண்டு ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். | காவல்துறை அதிகாரி சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டார். இருமகள்கள். சென்னை ராணிமேரிக் கல்லூரியில், ஆங்கிலப் பேராசிரியையாக பன்னிரெண்டு ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். | ||
== அரசியல் == | == அரசியல் == | ||
[[File:தமிழச்சி தங்கபாண்டியன்1.png|thumb|தமிழச்சி தங்கபாண்டியன் (பாராளுமன்றத்தில்)]] | [[File:தமிழச்சி தங்கபாண்டியன்1.png|thumb|தமிழச்சி தங்கபாண்டியன் (பாராளுமன்றத்தில்)|249x249px]] | ||
தமிழச்சி தங்கபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மகளிரணியில் உள்ளார். 2019இல் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். மே 2019 முதல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உள்ளார். | தமிழச்சி தங்கபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மகளிரணியில் உள்ளார். 2019இல் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். மே 2019 முதல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உள்ளார். | ||
Revision as of 13:59, 13 April 2023
தமிழச்சி தங்கபாண்டியன் (த. சுமதி) (பிறப்பு: ஜூலை 25, 1962) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், நாடகக் கலைஞர், அரசியல்வாதி.
பிறப்பு, கல்வி
தமிழச்சி தங்கபாண்டியனின் இயற்பெயர் சுமதி. விருதுநகர், மல்லாங்கிணற்றில் தங்கப்பாண்டியன், ராஜாமணி அம்மாள் இணையருக்கு ஜூலை 25, 1962-ல் பிறந்தார். தந்தை தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர். இவரின் தம்பி தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் முதல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு.
தமிழச்சி தங்கபாண்டியன் மல்லாங்கிணற்றில் தொடக்கக் கல்வியும், விருதுநகரில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் பயின்றார். மதுரை மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரியில் புதுமுக வகுப்பு பயின்றார். மதுரை தியாகராயர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றார். ‘ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களின் ஆங்கில படைப்பிலக்கிய வெளிப்பாடுகள்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஆஸ்திரேலிய இந்திய கவுன்சில் எனும் அமைப்பின் விருதான AIC Fellow 2002 பெற்று, ஆஸ்திரேலிய மோனாஸ் (Monash) பல்கலைக்கழகத்தில் தன் கள ஆய்வை முடித்தார்.
தனிவாழ்க்கை
காவல்துறை அதிகாரி சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டார். இருமகள்கள். சென்னை ராணிமேரிக் கல்லூரியில், ஆங்கிலப் பேராசிரியையாக பன்னிரெண்டு ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.
அரசியல்
தமிழச்சி தங்கபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மகளிரணியில் உள்ளார். 2019இல் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். மே 2019 முதல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உள்ளார்.
நாடக வாழ்க்கை
பரதநாட்டியம் முறையாகப் பயின்றவர். ’அரங்கம்’ எனப்படும் மேடை நாடகத் தளத்தில் ஈடுபட்டார். பிரசன்னா ராமஸ்வாமியின் பாரதியார் கவிதைகள் குறித்த நாடகத்தில் கலாஷேத்ராவிலும், சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் நடித்தார். அவரது இயக்கத்தில் சேரன், சுகுமாறன் ஆகியோரது கவிதைகள் குறித்த நிகழ்த்துக்கலை நிகழ்விலும் பங்கேற்றார்.
சென்னை, சேலத்தில் அ.மங்கையின் இயக்கத்தில், இன்குலாப்பின் ’குறிஞ்சிப் பாட்டு’ நாடகத்தில் நடித்தார்.'வெளி' ரங்கராஜனின் நாடகவெளி சார்பாக சென்னை அலையன்ஸ் ப்ராங்கை அரங்கில் கு.ப. ராஜகோபாலன்-ன் அகலிகை நாடகத்தில் அகலிகையாக நடித்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்பட்ட கு. அழகிரிசாமியின் வஞ்சமகள் நாடகத்தில் சூர்ப்பனகையாக நடித்தார். ’இன்னொரு ஏதோ’ நவீன நாடகத்தை சிறீசுவுடன் அரங்கேற்றினார். ’தியேட்டர் லேப்’ நாடகக் குழுவினருடன் இணைந்து சென்னை அலையன்ஸ் ப்ராங்கை அரங்கில் ’மகாத்மா காந்தியின் கடைசி ஐந்து விநாடிகள்’ மொழிபெயர்ப்பு நாடகத்தில்(தமிழில்: ஜி.கிருஷ்ணமூர்த்தி) சி.ஜெயராவின் இயக்கத்தில் நடித்தார்.
அமைப்புச் செயல்பாடுகள்
’களம் புதிது’ என்ற இலக்கிய குழுவை விருத்தாசலம், திருமுதுகுன்றத்தை மையமாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் படைப்பு தந்தை தங்கபாண்டியனின் இறப்பு பற்றிய கையறுநிலை கவிதை குங்குமம் இதழிலில் வெளியானது. முதல் கவிதைத் தொகுப்பு ’எஞ்சோட்டுப் பெண்’ மித்ர பதிப்பகம் வெளியீடாக 2004இல் வெளியானது. இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை த. சுமதி என்ற பெயரில் எழுதினார்.
தமிழச்சி தங்கபாண்டியனின் சிறுகதைகள் ஆனந்த விகடன், அவள் விகடனில் வெளிவந்தன. பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்த இவரது நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு 'பேச்சரவம் கேட்டிலையோ' 2009-ல் வெளியானது. தமிழச்சி தங்கபாண்டியன் தன்னுடைய படைப்புகளைப் பற்றி பிறர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'காலமும் கவிதையும் - தமிழச்சியின் படைப்புலகம்’ என்னும் தலைப்பில் நூலாக 2010-ல் வெளியிட்டார். தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பிறர் எழுதிய கடிதங்களைத் தொகுத்து ’காற்று கொணர்ந்த கடிதங்கள்’ தொகுப்பை 2010-ல் வெளியிட்டார்.
புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களது சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்திலும், பன்னாட்டு தேசிய கருத்தரங்கங்களிலும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தார்.
இலக்கிய இடம்
”தமிழச்சியின் கவிதைகள் நிலத்தைப் பிடிமானமாகக் கொண்டவை. தொண்ணூறுகளுக்குப் பிறகான தமிழ்க் கவிதைக்குத் தனி முகம் உண்டு. இவைகளுக்கு அப்பாற்பட்டு அறிவியல் தீண்டாத தங்கள் நினைவுலகின் அற்புதங்களைக் கவிதையாக்கும் போக்கையும் சிலர் உருவாக்கினர். அவர்களில் ஒருவர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்.” என மண்குதிரை மதிப்பிடுகிறார்.
படைப்பு பற்றிய ஆய்வுகள்
இளமுனைவர் பட்ட ஆய்வுகள்
- தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண் - ஓர் ஆய்வு: அழகப்பா பல்கலைக்கழகம் (2006)
- தமிழச்சி கவிதைகளில் உள்ளடக்கமும் உருவமும் - அழகப்பா பல்கலைக்கழகம் (2006)
- தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண் கவிதைகளில் பன்முகத்தன்மை - பச்சையப்பன் கல்லூரி (2010)
- தமிழச்சி தங்கப்பாண்டியன் கவிதைகளில் பன்முகப் பார்வை - மதுரைக் கல்லூரி (தன்னாட்சி - 2012)
- பன்முகப்பார்வையில் தமிழச்சியின் வனப்பேச்சி - பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி - 2013),
- தமிழச்சியின் மண்வாசத்தில் மருத்துவக் குறிப்புகளும் மக்கள் உறவுகளும் - பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி - 2014)
முனைவர் பட்ட ஆய்வேடு
- ‘தமிழச்சியின் படைப்புகளில் பெண்ணியச் சிந்தனைகள்’ தலைப்பில் இவரது படைப்புகள் குறித்து கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் (2014) முனைவர் பட்ட ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- தமிழச்சியின் கவிதைகள் நோக்கும் போக்கும் என்னும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (2015) முனைவர் பட்டத்திற்காக ஆய்வேடு அளிக்கப்பட்டுள்ளது.
விருதுகள்
- 2009: தமிழ்நாடு அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது.
- 2008: வனப்பேச்சி கவிதைத் தொகுப்பிற்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஏலாதி இலக்கிய விருது.
- 2013: கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை சிறந்த கவிஞர் விருது.
- 2017: கம்பன் கழகம் சென்னை, நீதியரசர் மு.மு.இஸ்மாயில் நினைவுப் பரிசு.
- 2018: SPARRC - IISM,”PRIDE OF INDIA” விருதினை தெலுங்கானா, ஆந்திரப்பிரேதசம் ஆளுநர் மூலமாக வழங்கியது.
பாடத்திட்டத்தில்
- எஞ்சோட்டுப் பெண் நூலின் சில கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, நந்தனம் அரசு கலைக்கல்லூரி, லயோலா கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி மற்றும் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் தமிழ் பட்டப் படிப்பிற்கான பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டது.
- ’எஞ்சோட்டுப் பெண்’ முழுக் கவிதைத் தொகுப்பு, பெரியார் பல்கலைக் கழகம்(சேலம்), முதுகலை தமிழ் இலக்கியப் பிரிவு(2017 - 2020) பாடத்திட்டத்திலும் இணைக்கப்பட்டது.
- ’வனப்பேச்சி’ முழுக் கவிதைத் தொகுப்பும், நிர்மலா மகளிர் கல்லூரி(தன்னாட்சி) பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டது.
நூல்கள்
கவிதைகள் தொகுப்புகள்
- எஞ்சோட்டுப் பெண் (2004)
- வனப்பேச்சி (2007)
- மஞ்சணத்தி (2009)
- அருகன் (2011)
- அவளுக்கு வெயில் என்று பெயர் (2015)
கட்டுரை தொகுப்புகள்
- பாம்படம் (2010)
- சொல் தொடும் தூரம் (2010)
- மயிலறகு மனசு (2012)
- மண்வாசம் (2013)
- நவீனத்துவவாதி கம்பன் (2010)
- உறவுகள் - எஸ்.பொ. (2004)
- பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை (2015)
- சொட்டாங்கல் (2018)
ஆராய்ச்சி தொகுப்புகள்
- நிழல் வெளி (2018)
- சிறுகதை நூல்
- முட்டு வீடு (2019)
ஆங்கில நூல்கள்
- Island to Island (The Voice of Sri Lankan Australian Playwright-Ernest Thalayasingham Macintyre) (2013)
- Internal Colloquies, translated by C.T.Indra of selected poems from Vanapechi by Dr.Thamizhachi Thangapandian (2019)
விமர்சன நூல்கள்
- காலமும் கவிதையும் - தமிழச்சியின் படைப்புலகம் (2010)
- காற்று கொணர்ந்த கடிதங்கள் (2010)
நேர்காணல் தொகுப்பு
- பேச்சரவம் கேட்டிலையோ (2009)
இணைப்புகள்
- தமிழச்சி தங்கபாண்டியன்: வலைதளம்
- தமிழச்சி தங்கபாண்டியனின் 'மஞ்சணத்தி' - ஒரு பார்வை: கீற்று.காம்
- பாதையற்ற நிலம் 21: நினைவின் கவிதைகள்: மண்குதிரை
- மானுட ஈரம் கசியும் தமிழச்சியின் 'எஞ்சோட்டுப் பெண்': முனைவர் சு. செல்வகுமாரன்
✅Finalised Page