being created

நெ.து. சுந்தரவடிவேலு: Difference between revisions

From Tamil Wiki
Line 14: Line 14:

== கல்விப்பணிகள் ==
== கல்விப்பணிகள் ==
1938-ஆம் ஆண்டில் இளம் துணைக் கல்வி ஆய்வாளர் பதவியில் சேர்ந்தார். வறுமையாலும் சாதியப் பாகுபாட்டாலும் பள்ளிக்கூடம் வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதில் வெற்றி கண்டார். பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பாது வீட்டிலேயே வேலைக்கு வைத்துக்கொண்ட பெற்றோரிடம் பேசி கல்வியின் அவசியத்தை உணர்த்தினார்.1939ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த "மெட்றாஸ் ஸ்டேட்'டில் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் மாவட்டக் கல்வி அலுவலராகச் சேர்ந்தார் நெ.து.சு.
1953-ல்  அப்போதைய முதலமைச்சர் காமராஜரால்  பொதுக்கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
1969-ல் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரானார். அன்றைய முதல்வர் மு. கருணாநிதியின் அனுமதியுடன் புகுமுக வகுப்பில் இலவசக் கல்வியைக் கொண்டுவந்தார். உயர் கல்விக்கும் ஆராய்ச்சிப் படிப்புக்கும் அதிக இடங்களை ஒதுக்கினார்.
சென்னையிலேயே ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்துவதால் தொலைதூரங்களிலிருந்து வருவதில் மாணவர்களுக்கு உள்ள சிரமங்களை உணர்ந்து அந்தந்தக் கல்லூரிகளிலேயே பட்டங்களை வழங்கிக் கொள்ளலாம் என்று விதியை மாற்றினார்.
பல்கலைக்கழகங்களில் பூட்டிவைக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சிறந்தனவற்றை நூல்களாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
புகுமுக வகுப்பிலும் பட்டப்படிப்பிலும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டுவந்தார்.

Revision as of 22:16, 16 March 2023

நெ.து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு; அக்டோபர் 12, 1912 - ஏப்ரல் 12, 1993) கல்வியாளர், எழுத்தாளர், பேச்சாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருமுறை பதவி வகித்தார். தமிழ்நாடு அரசின் கல்வித்துறை ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் பணியாற்றினார். தமிழகத்தின் கல்விப் புரட்சியில் அவரது பணி குறிப்பிடத்தக்கது.

பிறப்பு, கல்வி

நெ.து. சுந்தரவடிவேலு காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள நெய்யாடுபாக்கத்தில் அக்டோபர் 12, 1912 அன்று துரைசாமி-சாரதாம்பாள் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இளைய சகோதரர்கள் நால்வர். நெய்யாடுபாக்கத்தில் திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பெற்றார். காஞ்சிபுரம் தேவல்ல இராமசாமி ஐயர் நடுநிலைப் பள்ளியிலும், யு.எஃப்.சி.எம் உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக்கல்வியை முடித்தார். 1932-ல் மாநிலக் கல்லூரியில் பொருளாதாரத்தில் சிறப்பு (Honors) இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரிக் காலத்தில் ஓ.வி. அழகேசன், சி. சுப்பிரமணியம் ஆகியோருடன் நடிபில் இருந்தார். நண்பரா

தனிவாழ்க்கை

டிசம்பர் 1934-ல் உதவிப் பஞ்சாயத்து அலுவலர் என்ற அரசுப் பணியில் சேர்ந்தார்

நெ.து.சு.வின் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்த குத்தூசி குருசாமியின் உறவினர் காந்தம்மாளை சீர்திருத்த திருமணம் செய்து கொண்டார். காந்தம்மள் முதுகலைப்பட்டம் ஆசிரியர் கல்வியிலும் இளங்கலைப்பட்டமும் பெற்றவர். ஆசிரியர், தலைமை ஆசிரியர், சென்னை மாநகராட்சிக் கல்வி அலுவலர் ஆகிய பதவிகளை காந்தம்மாள் வகித்தார். இரு முறை சட்ட மேலவை உறுப்பினராக இருந்துள்ளார். மகன் திருவள்ளுவன்.

கல்விப்பணிகள்

1938-ஆம் ஆண்டில் இளம் துணைக் கல்வி ஆய்வாளர் பதவியில் சேர்ந்தார். வறுமையாலும் சாதியப் பாகுபாட்டாலும் பள்ளிக்கூடம் வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதில் வெற்றி கண்டார். பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பாது வீட்டிலேயே வேலைக்கு வைத்துக்கொண்ட பெற்றோரிடம் பேசி கல்வியின் அவசியத்தை உணர்த்தினார்.1939ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த "மெட்றாஸ் ஸ்டேட்'டில் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் மாவட்டக் கல்வி அலுவலராகச் சேர்ந்தார் நெ.து.சு.

1953-ல் அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் பொதுக்கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

1969-ல் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரானார். அன்றைய முதல்வர் மு. கருணாநிதியின் அனுமதியுடன் புகுமுக வகுப்பில் இலவசக் கல்வியைக் கொண்டுவந்தார். உயர் கல்விக்கும் ஆராய்ச்சிப் படிப்புக்கும் அதிக இடங்களை ஒதுக்கினார்.

சென்னையிலேயே ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்துவதால் தொலைதூரங்களிலிருந்து வருவதில் மாணவர்களுக்கு உள்ள சிரமங்களை உணர்ந்து அந்தந்தக் கல்லூரிகளிலேயே பட்டங்களை வழங்கிக் கொள்ளலாம் என்று விதியை மாற்றினார்.

பல்கலைக்கழகங்களில் பூட்டிவைக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சிறந்தனவற்றை நூல்களாகப் பதிப்பித்து வெளியிட்டார்.

புகுமுக வகுப்பிலும் பட்டப்படிப்பிலும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டுவந்தார்.

இலக்கியப் பணிகள்

மறைவு

விருதுகள், பரிசுகள்

நூல்கள்

உசாத்துணை

http://rssairam.blogspot.com/2012/10/blog-post_8916.html

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.