being created

வி. சிவசாமி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "வி. சிவசாமி == பிறப்பு, கல்வி == == தனிவாழ்க்கை == == வாழ்க்கைக் குறிப்பு == == இலக்கிய வாழ்க்கை == == விருதுகள் == == மறைவு == == நூல்கள் == * திராவிடர் - ஆதிவரலாறும் பண்பாடும் (1973) * தென்னாசியக் கலை மரபி...")
 
No edit summary
Line 1: Line 1:
வி. சிவசாமி
வி. சிவசாமி (செப்டம்பர் 16, 1933 - நவம்பர் 8, 2014) ஈழத்து தமிழ் எழுத்தாளர், பேராசிரியர்.
 
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
வி. சிவசாமி இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் புங்குடுதீவில் இறுப்பிட்டி என்னும் ஊரில் விநாயகமூர்த்திக்கு மகனாக செப்டம்பர் 16, 1933-ல் பிறந்தார். தந்தை நாட்டு வைத்தியத்திலும், ஜோதிடக் கலையிலும் ஈடுபட்டவர். தனது ஆரம்பக் கல்வியை புங்குடுதீவில் கற்றார். யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்று 1955 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமக்கிருதம், தமிழ், வரலாறு ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். சமஸ்கிருதம், வரலாறு, தமிழ், இந்துப் பண்பாடு, தொல்லியல், நுண்கலைகள் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டார். 1961-ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் பாளி, இந்திய வரலாறு ஆகியவற்றுடன், சமக்கிருதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார்.
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
வி. சிவசாமி 1958 முதல் 1974 வரை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1962 முதல் 1965 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974-ல் ஆரம்பிக்கப்பட்ட போது, வி. சிவசாமி அதன் ஆரம்பகால விரிவுரையாளராப் பணியில் சேர்ந்தார். சமக்கிருதத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசாமி, வரலாறு, இந்து நாகரிகம் ஆகிய பாடங்களையும் கற்பித்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
 
== தொல்லிய ==
வி. சிவசாமி யாழ்ப்பாணத் தொல்லியல் கழகத்தின் நிறுவன செயலாளராக 1971 முதல் பணியாற்றினார். அத்துடன் பூர்வகலா என்ற இதழையும் வெளியிடார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முதலாவது தொல்லியல் ஆய்விதழ் இது. ப. புஷ்பரத்தினம் இவரது மாணவராவார்.
== விருதுகள் ==
== விருதுகள் ==
== மறைவு ==
== மறைவு ==
வி. சிவசாமி நவம்பர் 8, 2014-ல் காலமானார்.
== நூல்கள் ==
== நூல்கள் ==
* திராவிடர் - ஆதிவரலாறும் பண்பாடும் (1973)

Revision as of 15:43, 2 March 2023

வி. சிவசாமி (செப்டம்பர் 16, 1933 - நவம்பர் 8, 2014) ஈழத்து தமிழ் எழுத்தாளர், பேராசிரியர்.

பிறப்பு, கல்வி

வி. சிவசாமி இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் புங்குடுதீவில் இறுப்பிட்டி என்னும் ஊரில் விநாயகமூர்த்திக்கு மகனாக செப்டம்பர் 16, 1933-ல் பிறந்தார். தந்தை நாட்டு வைத்தியத்திலும், ஜோதிடக் கலையிலும் ஈடுபட்டவர். தனது ஆரம்பக் கல்வியை புங்குடுதீவில் கற்றார். யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்று 1955 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமக்கிருதம், தமிழ், வரலாறு ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். சமஸ்கிருதம், வரலாறு, தமிழ், இந்துப் பண்பாடு, தொல்லியல், நுண்கலைகள் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டார். 1961-ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் பாளி, இந்திய வரலாறு ஆகியவற்றுடன், சமக்கிருதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

வி. சிவசாமி 1958 முதல் 1974 வரை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1962 முதல் 1965 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974-ல் ஆரம்பிக்கப்பட்ட போது, வி. சிவசாமி அதன் ஆரம்பகால விரிவுரையாளராப் பணியில் சேர்ந்தார். சமக்கிருதத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசாமி, வரலாறு, இந்து நாகரிகம் ஆகிய பாடங்களையும் கற்பித்தார்.

தொல்லிய

வி. சிவசாமி யாழ்ப்பாணத் தொல்லியல் கழகத்தின் நிறுவன செயலாளராக 1971 முதல் பணியாற்றினார். அத்துடன் பூர்வகலா என்ற இதழையும் வெளியிடார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முதலாவது தொல்லியல் ஆய்விதழ் இது. ப. புஷ்பரத்தினம் இவரது மாணவராவார்.

விருதுகள்

மறைவு

வி. சிவசாமி நவம்பர் 8, 2014-ல் காலமானார்.

நூல்கள்

  • திராவிடர் - ஆதிவரலாறும் பண்பாடும் (1973)
  • தென்னாசியக் கலை மரபில் நாட்டிய சாஸ்திர மரபு (1992)
  • தென்னாசிய சாஸ்திரிய நடனங்கள் - ஒரு வரலாற்று நோக்கு (1998)
  • தமிழும் தமிழரும் (1998)
  • இந்துப் பண்பாடு அன்றும் இன்றும் (2005)
  • தொல்பொருளியல்-ஓர் அறிமுகம் (1972)
  • ஞானப்பிரகாசரும் வரலாற்றாராய்ச்சியும் (1974)
  • யாழ்ப்பாணக் காசுகள் (1974)
  • ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும் (1976)
  • கலாமஞ்சரி [1983]
  • பரதக்கலை (1988)
  • சமஸ்கிருதம்- தமிழ் சிற்றகராதி (1987)
  • தீவகம் - ஒரு வரலாற்று நோக்கு (1990)
ஆங்கிலம்
  • One Hundred years of Epigraphical Studies in Sri Lanka (1975, Revised 1988)
  • Some Aspects of South Asian Epigraphy (1985)
  • Some Facets of Hinduism (1988)
  • Tha Sanskrit Tradition of the Sri Lanka Tamils (1992)

உசாத்துணை

இணைப்புகள்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.