being created

க. கணபதிப்பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "க. கணபதிப்பிள்ளை == தனிவாழ்க்கை == == வாழ்க்கைக் குறிப்பு == == இலக்கிய வாழ்க்கை == == விருதுகள் == == மறைவு == க. கணபதிப்பிள்ளை மே 12, 1968இல் காலமானார். == நூல்பட்டியல் == இலங்கை வாழ் தமிழர் வரலாறு ஈழ...")
 
No edit summary
Line 1: Line 1:
க. கணபதிப்பிள்ளை
க. கணபதிப்பிள்ளை (ஜூலை 2, 1903 - மே 21, 1968) ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர், லல்வெட்டாய்வாளர்.
== பிறப்பு, கல்வி ==
க. கணபதிப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறை, புலோலி கிழக்கில் கந்தசாமிப்பிள்ளைக்கு ஜூலை 2, 1903இல் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை வேலாயுதம் மகாவித்தியாலயம், ஹார்ட்லி கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். பருத்தித்துறை ஆரிய திராவிட மகா பண்டிதர் பிரம்மசிறி முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடம் தமிழும், இசையும் கற்றார். கணபதிப்பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்றார்.

தமிழ் மொழியிலும் உயர் கல்வி பெறும் நோக்கோடு சுவாமி விபுலானந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட போது கணபதிப்பிள்ளையை சிதம்பரத்துக்கு அழைத்துச் சென்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொன்னோதுவார் மூர்த்திகள், சர்க்கரை இராமசாமிப் புலவர், கந்தசாமியார் ஆகியோரிடம் தமிழிலக்கண, இலக்கியங்களை இரண்டு ஆண்டுகள் கற்று வித்துவான் தேர்வு எழுதினார்.
1930இல் லண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைத் தேர்வில் சங்கத மொழியைச் சிறப்புப் பாடமாகவும், பாளியைத் துணைப் பாடமாகவும் கற்றார். இலங்கை அரசின் கீழைத்தேய மொழி ஆய்வுப் பரிசு பெற்றார். இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேயக் கலைக்கல்லூரியில் பேராசிரியர் ரேணரிடம் மொழியியல் ஆய்வில் ஈடுபட்டார். ஏழாம் எட்டாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சாசனங்களின் மொழி இலக்கணத்தை விளக்கி முனைவர் பட்டம் பெற்றார்.
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
க. கணபதிப்பிள்ளை மட்டக்களப்பைச் சேர்ந்த மனோன்மணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கந்தசாமிப்பிள்ளை, ஒப்பிலாமணிப்பிள்ளை என இரு மகன்கள், சௌந்தராம்பிகை, மங்களாம்பிகை, பாலாம்பிகை, அருள்மொழிநங்கை, வள்ளி என ஐந்து மகள்கள்
== ஆசிரியப்பணி ==
1936இல் இலங்கைப் பல்க்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1947இல் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1965இல் ஓய்வு பெற்றார். இவரது முயற்சியால் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புக் கலைத் தேர்வு ஏற்படுத்தப்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைத் தேர்வையும் தொடங்கி வைத்தார்.
== அமைப்புப்பணி ==
க. கணபதிப்பிள்ளை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 29 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் இளங்கதிர் என்ற இதழைத் தொடக்கி அதனைத் தொடர்ந்து நடத்த உதவி செய்தார். தனிநாயகம் அடிகளின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தொடக்க விழா 1964 சனவரி 7 ஆம் நாள் புது தில்லியில் நடந்தபோது இலங்கையின் சார்பில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை கலந்துகொண்டார்.
== நாடக வாழ்க்கை ==
தமிழ்ச்சங்கத்துக்கென பல நாடகங்களை எழுதி அரங்காற்றுகை செய்தார். உடையார் மிடுக்கு, முருகன் திருகுதாளம், கண்ணன் கூத்து, நாட்டவன் நகர வாழ்க்கை ஆகியவை நானாடகம் என்ற தலைப்பில் 1940இல் அச்சில் வெளிவந்தன. பொருளோ பொருள், தவறான எண்ணம் ஆகிய நாடகங்கள் இருநாடகம் என்ற பெயரில் 1952இல் நூலாக வெளிவந்தது. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழைக் கையாண்டு பல நாடகங்களை எழுதினார். சங்கிலி என்ற வரலாற்று நாடக நூல் 1956இல் பாடநூல் புத்தகமாக வெளிவந்தது.
== கல்வெட்டியல் ஆய்வு ==
இலங்கையின் பண்டைய பல தமிழ்க் கல்வெட்டுகளை ஆராய்ந்து, திருத்தி வெளியிட்டார். மகனை, மொரகாவலை, பாண்டுவஸ்னுவர போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் குறித்து University of Ceylon Review 1960, 1962 இதழில் கட்டுரைகள் எழுதினார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
== விருதுகள் ==
பூஞ்சோலை(1953), வாழ்க்கையின் விநோதங்கள்(1954) ஆகிய நாவல்களை எழுதினார். க. கணபதிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை "கலையருவி கணபதிப்பிள்ளை" என்ற பெயரில் த. சண்முகசுந்தரம் என்பவர் எழுதி 1974இல் வெளியிட்டார்.
== நினைவு ==
க. கணபதிப்பிள்ளையின் நினைவாக கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் சிறந்த புனைவு நூலுக்கான பரிசை வழங்கி வருகிறது.
== மறைவு ==
== மறைவு ==
க. கணபதிப்பிள்ளை மே 12, 1968இல் காலமானார்.

Line 43: Line 58:
* Words in Jaffna dialect of Tamil - University of Ceylon Review, Vol XXIII, Vol I No 2. Peradeniya (1965)

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ‘தமிழின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்’ பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை: கீற்று
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
 
* க. கணபதிப்பிள்ளை: நூலகம்

{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:09, 12 February 2023

க. கணபதிப்பிள்ளை (ஜூலை 2, 1903 - மே 21, 1968) ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர், லல்வெட்டாய்வாளர்.

பிறப்பு, கல்வி

க. கணபதிப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறை, புலோலி கிழக்கில் கந்தசாமிப்பிள்ளைக்கு ஜூலை 2, 1903இல் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை வேலாயுதம் மகாவித்தியாலயம், ஹார்ட்லி கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். பருத்தித்துறை ஆரிய திராவிட மகா பண்டிதர் பிரம்மசிறி முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடம் தமிழும், இசையும் கற்றார். கணபதிப்பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்றார்.

தமிழ் மொழியிலும் உயர் கல்வி பெறும் நோக்கோடு சுவாமி விபுலானந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட போது கணபதிப்பிள்ளையை சிதம்பரத்துக்கு அழைத்துச் சென்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொன்னோதுவார் மூர்த்திகள், சர்க்கரை இராமசாமிப் புலவர், கந்தசாமியார் ஆகியோரிடம் தமிழிலக்கண, இலக்கியங்களை இரண்டு ஆண்டுகள் கற்று வித்துவான் தேர்வு எழுதினார்.

1930இல் லண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைத் தேர்வில் சங்கத மொழியைச் சிறப்புப் பாடமாகவும், பாளியைத் துணைப் பாடமாகவும் கற்றார். இலங்கை அரசின் கீழைத்தேய மொழி ஆய்வுப் பரிசு பெற்றார். இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேயக் கலைக்கல்லூரியில் பேராசிரியர் ரேணரிடம் மொழியியல் ஆய்வில் ஈடுபட்டார். ஏழாம் எட்டாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சாசனங்களின் மொழி இலக்கணத்தை விளக்கி முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

க. கணபதிப்பிள்ளை மட்டக்களப்பைச் சேர்ந்த மனோன்மணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கந்தசாமிப்பிள்ளை, ஒப்பிலாமணிப்பிள்ளை என இரு மகன்கள், சௌந்தராம்பிகை, மங்களாம்பிகை, பாலாம்பிகை, அருள்மொழிநங்கை, வள்ளி என ஐந்து மகள்கள்

ஆசிரியப்பணி

1936இல் இலங்கைப் பல்க்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1947இல் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1965இல் ஓய்வு பெற்றார். இவரது முயற்சியால் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புக் கலைத் தேர்வு ஏற்படுத்தப்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைத் தேர்வையும் தொடங்கி வைத்தார்.

அமைப்புப்பணி

க. கணபதிப்பிள்ளை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 29 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் இளங்கதிர் என்ற இதழைத் தொடக்கி அதனைத் தொடர்ந்து நடத்த உதவி செய்தார். தனிநாயகம் அடிகளின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தொடக்க விழா 1964 சனவரி 7 ஆம் நாள் புது தில்லியில் நடந்தபோது இலங்கையின் சார்பில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை கலந்துகொண்டார்.

நாடக வாழ்க்கை

தமிழ்ச்சங்கத்துக்கென பல நாடகங்களை எழுதி அரங்காற்றுகை செய்தார். உடையார் மிடுக்கு, முருகன் திருகுதாளம், கண்ணன் கூத்து, நாட்டவன் நகர வாழ்க்கை ஆகியவை நானாடகம் என்ற தலைப்பில் 1940இல் அச்சில் வெளிவந்தன. பொருளோ பொருள், தவறான எண்ணம் ஆகிய நாடகங்கள் இருநாடகம் என்ற பெயரில் 1952இல் நூலாக வெளிவந்தது. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழைக் கையாண்டு பல நாடகங்களை எழுதினார். சங்கிலி என்ற வரலாற்று நாடக நூல் 1956இல் பாடநூல் புத்தகமாக வெளிவந்தது.

கல்வெட்டியல் ஆய்வு

இலங்கையின் பண்டைய பல தமிழ்க் கல்வெட்டுகளை ஆராய்ந்து, திருத்தி வெளியிட்டார். மகனை, மொரகாவலை, பாண்டுவஸ்னுவர போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் குறித்து University of Ceylon Review 1960, 1962 இதழில் கட்டுரைகள் எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

பூஞ்சோலை(1953), வாழ்க்கையின் விநோதங்கள்(1954) ஆகிய நாவல்களை எழுதினார். க. கணபதிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை "கலையருவி கணபதிப்பிள்ளை" என்ற பெயரில் த. சண்முகசுந்தரம் என்பவர் எழுதி 1974இல் வெளியிட்டார்.

நினைவு

க. கணபதிப்பிள்ளையின் நினைவாக கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் சிறந்த புனைவு நூலுக்கான பரிசை வழங்கி வருகிறது.

மறைவு

க. கணபதிப்பிள்ளை மே 12, 1968இல் காலமானார்.

நூல்பட்டியல்

இலங்கை வாழ் தமிழர் வரலாறு ஈழத்து வாழ்வும் வளமும் கற்பின் கொழுந்து முருகவழிபாடும் கதிர்காமம் பாதயாத்திரையும் கணபதிப்பிள்ளை நாடகத்திரட்டு பேராசிரியர் கணபதிப்பிள்ளை நாடகத்திரட்டு

கவிதை
  • காதலி ஆற்றுப்படை
  • தூவுதும் மலரே
நாவல்
  • பூஞ்சோலை
  • வாழ்க்கையின் விநோதங்கள்
  • நீரர மகளிர்
நாடகங்கள்
  • சங்கிலி (நாடகம்)
  • நானாடகம் (1940)
  • இருநாடகம் (1952)
  • மாணிக்கமாலை
  • உடையார் மிடுக்கு
  • நாட்டவன் நகர வாழ்க்கை
  • முருகன் திருகுதாளம்
  • கண்ணன் கூத்து
  • பொருளோ பொருள்
  • தவறான எண்ணம்
  • சுந்தரம் எங்கே
  • துரோகிகள்
ஆங்கிலம்
  • Creativity or Life's Postures
  • This Baffling Existence
  • Vipulananda A Literary Biography
  • A Study of the Language of the Tamil Inscriptions of the 7th and the 8th Centuries A.D
ஆய்வுக் கட்டுரைகள்
  • Jaffna dialect of Tamil - a phonological study in Indian Linguistics - Turner Jubilee Volume, Pune, India (1958)
  • Words in Jaffna dialect of Tamil - University of Ceylon Review, Vol XXIII, Vol I No 2. Peradeniya (1965)

உசாத்துணை

  • ‘தமிழின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்’ பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை: கீற்று

இணைப்புகள்

  • க. கணபதிப்பிள்ளை: நூலகம்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.