கண்மணி குணசேகரன்: Difference between revisions
(Moved categories to bottom of article) |
(Removed non-breaking space character) |
||
Line 4: | Line 4: | ||
கண்மணி குணசேகரன் (மே 19, 1971) தமிழ் எழுத்தாளர். நடுநாடு எனப்படும் விழுப்புரம், கடலூர் பகுதியை சேர்ந்த அடித்தளமக்களின் கதைகளையும், போராட்டங்களையும் சொல்லும் எழுத்தாளர். கவிஞராக படைப்புலகில் அறிமுகமாகி சிறுகதைகள், நாவல் என தன் படைப்புக்களத்தை விரிவாக்கியவர். | கண்மணி குணசேகரன் (மே 19, 1971) தமிழ் எழுத்தாளர். நடுநாடு எனப்படும் விழுப்புரம், கடலூர் பகுதியை சேர்ந்த அடித்தளமக்களின் கதைகளையும், போராட்டங்களையும் சொல்லும் எழுத்தாளர். கவிஞராக படைப்புலகில் அறிமுகமாகி சிறுகதைகள், நாவல் என தன் படைப்புக்களத்தை விரிவாக்கியவர். | ||
== பிறப்பு, இளமை == | == பிறப்பு, இளமை == | ||
கண்மணி குணசேகரன் கடலூர் மாவட்டதிலுள்ள | கண்மணி குணசேகரன் கடலூர் மாவட்டதிலுள்ள மணக்கொல்லைஎன்ற கிராமத்தில் மே 19, 1971 அன்று ஒரு விவசாயக்குடும்பத்தில் அய்யாத்துரை, சின்னம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பை ஐந்தாம் வகுப்பு வரை இருளக்குறிச்சியிலும், பத்தாம் வகுப்புவரை உளுந்தூர்பேட்டை ஆலடி அரசுப்பள்ளியிலும் முடித்தார். பின்னர் உளுந்தூர்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்படிப்பை முடித்தார். | ||
==தனி வாழ்க்கை == | ==தனி வாழ்க்கை == | ||
பெரியார் போக்குவரத்துக்கழகம் செஞ்சிக்கிளையில் தொழிற்பழகுனராய் வேலை செய்தார். 1999-லிருந்து தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் | பெரியார் போக்குவரத்துக்கழகம் செஞ்சிக்கிளையில் தொழிற்பழகுனராய் வேலை செய்தார். 1999-லிருந்து தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் விருத்தாச்சலம் கிளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். ஒய்வு நேரத்தில் தன் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கண்மணி குணசேகரனின் மனைவியின் பெயர் காசிமணி. மூன்று மகன்கள் - தமிழ்மதி, அறிவுமதி, இளமதி. | ||
==இலக்கிய பங்களிப்பு== | ==இலக்கிய பங்களிப்பு== | ||
1991-ல் காதல் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த கண்மணி குணசேகரன் பின் பேராசிரியர் த. [[பழமலய்]] படைப்புக்களின் பாதிப்பில் கதைகளை எழுதத்தொடங்கினார். 1994-ல் வெளியான ' | 1991-ல் காதல் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த கண்மணி குணசேகரன் பின் பேராசிரியர் த. [[பழமலய்]] படைப்புக்களின் பாதிப்பில் கதைகளை எழுதத்தொடங்கினார். 1994-ல் வெளியான 'தலைமுறைக்கோபம்’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு பரவலான பாராட்டுக்களை பெற்றது. தமிழில் அழிந்து வரும் வட்டார வழக்குகளில் புழங்கும் பழமையான சொற்களை விளக்கும், நடுநாட்டுச் சொல்லகராதி’ என்னும் நூல் தமிழக அரசின் விருது பெற்றது. 'அஞ்சலை' நாவல் பெண்களையும் அவர்களை சுரண்டிப் பிழைப்பவர்களையும் நுட்பமான கதாபாத்திரங்கள் மூலம் சித்தரித்தது. போக்குவரத்துத் துறையை களமாகக் கொண்ட 'நெடுஞ்சாலை' நாவல், அரசு வளர்ச்சித் திட்டங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களை காட்டும் 'வந்தாரங்குடி' நாவல் ஆகியவையும் இதே போன்ற நுட்பமான இயல்புச் சித்திரிப்பாலேயே பரவலான வாசிப்பை அடைந்தன. | ||
கடலூர் வட்டார தொன்மங்களையும், தெய்வங்களையும் தன் கதைகளின் படிமங்கள் ஆக்குகிறார். இவரது அஞ்சலை நாவல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. | கடலூர் வட்டார தொன்மங்களையும், தெய்வங்களையும் தன் கதைகளின் படிமங்கள் ஆக்குகிறார். இவரது அஞ்சலை நாவல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. |
Revision as of 14:49, 31 December 2022
To read the article in English: Kanmani Gunasekaran.
கண்மணி குணசேகரன் (மே 19, 1971) தமிழ் எழுத்தாளர். நடுநாடு எனப்படும் விழுப்புரம், கடலூர் பகுதியை சேர்ந்த அடித்தளமக்களின் கதைகளையும், போராட்டங்களையும் சொல்லும் எழுத்தாளர். கவிஞராக படைப்புலகில் அறிமுகமாகி சிறுகதைகள், நாவல் என தன் படைப்புக்களத்தை விரிவாக்கியவர்.
பிறப்பு, இளமை
கண்மணி குணசேகரன் கடலூர் மாவட்டதிலுள்ள மணக்கொல்லைஎன்ற கிராமத்தில் மே 19, 1971 அன்று ஒரு விவசாயக்குடும்பத்தில் அய்யாத்துரை, சின்னம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பை ஐந்தாம் வகுப்பு வரை இருளக்குறிச்சியிலும், பத்தாம் வகுப்புவரை உளுந்தூர்பேட்டை ஆலடி அரசுப்பள்ளியிலும் முடித்தார். பின்னர் உளுந்தூர்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்படிப்பை முடித்தார்.
தனி வாழ்க்கை
பெரியார் போக்குவரத்துக்கழகம் செஞ்சிக்கிளையில் தொழிற்பழகுனராய் வேலை செய்தார். 1999-லிருந்து தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் விருத்தாச்சலம் கிளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். ஒய்வு நேரத்தில் தன் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கண்மணி குணசேகரனின் மனைவியின் பெயர் காசிமணி. மூன்று மகன்கள் - தமிழ்மதி, அறிவுமதி, இளமதி.
இலக்கிய பங்களிப்பு
1991-ல் காதல் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த கண்மணி குணசேகரன் பின் பேராசிரியர் த. பழமலய் படைப்புக்களின் பாதிப்பில் கதைகளை எழுதத்தொடங்கினார். 1994-ல் வெளியான 'தலைமுறைக்கோபம்’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு பரவலான பாராட்டுக்களை பெற்றது. தமிழில் அழிந்து வரும் வட்டார வழக்குகளில் புழங்கும் பழமையான சொற்களை விளக்கும், நடுநாட்டுச் சொல்லகராதி’ என்னும் நூல் தமிழக அரசின் விருது பெற்றது. 'அஞ்சலை' நாவல் பெண்களையும் அவர்களை சுரண்டிப் பிழைப்பவர்களையும் நுட்பமான கதாபாத்திரங்கள் மூலம் சித்தரித்தது. போக்குவரத்துத் துறையை களமாகக் கொண்ட 'நெடுஞ்சாலை' நாவல், அரசு வளர்ச்சித் திட்டங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களை காட்டும் 'வந்தாரங்குடி' நாவல் ஆகியவையும் இதே போன்ற நுட்பமான இயல்புச் சித்திரிப்பாலேயே பரவலான வாசிப்பை அடைந்தன.
கடலூர் வட்டார தொன்மங்களையும், தெய்வங்களையும் தன் கதைகளின் படிமங்கள் ஆக்குகிறார். இவரது அஞ்சலை நாவல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.
விருதுகள்
- சுந்தரராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருது (2007)
- 'நடுநாட்டுச் சொல்லகராதி' தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான விருதை பெற்றுள்ளது.
விவாதங்கள்
கண்மணி குணசேகரன் வன்னியர் சாதிச் சங்கத்திலும் அச்சாதியின் அரசியலமைப்பான பாட்டாளி மக்கள் கட்சியிலும் நேரடியாக ஈடுபடுபவர். நவீன இலக்கியவாதி இவ்வாறு நேரடியாகச் சாதி அடையாள அரசியலில் ஈடுபடலாமா என்னும் விவாதம் தொடர்ந்து பல முறை நடந்தது. 2021-லும் அவ்விவாதம் எழுந்தது.
இலக்கிய இடம்
இவரது நாவல்கள் இயல்புவாதப் படைப்புகளாக கண்முன் நிகழும் வாழ்க்கை அனுபவத்தை முன்வைக்கின்றன. இவை எளிய மக்களின் துயரங்களை மட்டுமல்லாமல் என்றும் இருக்கும் மானுட உணர்ச்சிகளை சொல்கின்றன. வாழ்க்கையை அங்கு வாழும் பகுதி மக்களின் மொழியில் எழுதிக்கொண்டிருக்கிறார். துறை சார்ந்த அனுபவங்களை படைப்புகளாக்குவதன் மூலம் அறியப்படாத பக்கங்களை நுட்பமாகவும், வாழ்வனுபவமாகவும் இவரால் உணர்த்தமுடிகிறது. பெண் கதாபாத்திரங்களின் அந்தரங்கச்சிக்கல்களை துல்லியமாக எழுதியிருக்கிறார்.
படைப்புகள்
கவிதைகள்
- தலைமுறைக்கோபம் (1994)
- காற்றின் பாடல் கவிதைகள் (2001)
- கண்மணி குணசேகரனின் கவிதைகள்
- மூன்றாம் நாள் பெண் (2020)
- உத்திமாக்குளம் (2021)
- காலிறங்கி பெய்யுமொரு கனமழை
- மிளிர்கொன்றை
- காலடியில் குவியும் நிழல்வேளை
சிறுகதைகள்
- உயிர்த்தண்ணீர் (1997)
- ஆதண்டார் கோயில் குதிரை (2000)
- வெள்ளெருக்கு
- பூரணிபொற்கலை
- கிக்குலிஞ்சான்
- சமாதானக் கறி
- புள்ளிப் போட்டை
- வாடாமல்லி
- சிற்றகலில் தொற்றிய தீத்துளி
நாவல்கள்
- நெடுஞ்சாலை
- அஞ்சலை
- கோரை
- வந்தாரங்குடி
அகராதி
- நடுநாட்டுச் சொல்லகராதி
உசாத்துணை
- கண்மணிகுணசேகரன் இணையப்பக்கம்
- கண்மணிகுணசேகரனின் பேட்டி
- நடு நாட்டுக் கதைப் பாடல்கள் - கண்மணி குணசேகரன் | Kanmani Gunasekaran speech - YouTube
✅Finalised Page