அஞ்சில் அஞ்சியார்: Difference between revisions
(Moved categories to bottom of article) |
(Removed non-breaking space character) |
||
Line 5: | Line 5: | ||
பாடிய பாடல் | பாடிய பாடல் | ||
சங்க இலக்கிய தொகை நூல்களில் ஒன்றான [[நற்றிணை]]யில் அஞ்சில் அஞ்சியார் | சங்க இலக்கிய தொகை நூல்களில் ஒன்றான [[நற்றிணை]]யில் அஞ்சில் அஞ்சியார் பாடியதாக ஒரு பாடல் உள்ளது. (பாடல்- 90 ) | ||
===== நற்றிணை 90 ===== | ===== நற்றிணை 90 ===== | ||
<poem> | <poem> | ||
Line 13: | Line 13: | ||
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு | புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு | ||
வாடா மாலை துயல்வர ஓடிப் | வாடா மாலை துயல்வர ஓடிப் | ||
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் | பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் | ||
பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள் | பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள் | ||
அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி | அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி | ||
Line 23: | Line 23: | ||
எளிய பொருள்; | எளிய பொருள்; | ||
அந்த மூதூரில் ஆடி விழா. எல்லாரும் உடையோர் போலப் பெருங்கை (நல்லொழுக்க) உணவு அருந்துவர். துணி வெளுக்கும் புலத்தி துவைக்காத புத்தாடை அணிந்துகொள்வர். பனைநார்க் கயிற்றில் ஊஞ்சல் கட்டி ஆடுவர், மாலை போட்டுக்கொண்டு ஆடுவர். | அந்த மூதூரில் ஆடி விழா. எல்லாரும் உடையோர் போலப் பெருங்கை (நல்லொழுக்க) உணவு அருந்துவர். துணி வெளுக்கும் புலத்தி துவைக்காத புத்தாடை அணிந்துகொள்வர். பனைநார்க் கயிற்றில் ஊஞ்சல் கட்டி ஆடுவர், மாலை போட்டுக்கொண்டு ஆடுவர். தலைவி ஒருத்தி இன்று புத்தாடை புனையவில்லை. மாலை அணிந்து கொள்ளவில்லை. தோழியர் ஆட்டும் ஊஞ்சலும் ஆடவில்லை. இவள் அழுதுகொண்டே ஒதுங்கிச் செல்கிறாள். காரணம் இவளது தலைவனை நயன் இல்லாத மாக்கள் (மகளிர்) தழுவிக்கொண்டனர். இதனை வேந்தனும் கண்டு கொள்ளவில்லை. இந்த அரசனால் என்ன பயன் என்கிறாள் தோழி. | ||
(ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். ஆடிமாதக் காற்றில் மரங்கள் மிகுதியாக ஆடும். இதனால் இந்த மாதத்துக்குப் பெயர் ஆடி. ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழா ஆடிப்பதினெட்டு. இந்த நாளில் தூறி என்று சொல்லி ஊஞ்சலாடுவது இக்காலத்திலும் உண்டு) | (ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். ஆடிமாதக் காற்றில் மரங்கள் மிகுதியாக ஆடும். இதனால் இந்த மாதத்துக்குப் பெயர் ஆடி. ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழா ஆடிப்பதினெட்டு. இந்த நாளில் தூறி என்று சொல்லி ஊஞ்சலாடுவது இக்காலத்திலும் உண்டு) |
Revision as of 14:48, 31 December 2022
அஞ்சில் அஞ்சியார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்கத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் அஞ்சில் அஞ்சியார் இயற்றிய ஒருபாடல் இடம் பெற்றுள்ளது.
பெயர்க் காரணம்
ஊஞ்சலாடும் பெண்ணை இவர் 'அஞ்சில் ஓதி' என்று குறிப்பிடுகிறார். இதனால் இப்புலவர் பெயருக்கு 'அஞ்சில்' என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது எனலாம். எனினும் அஞ்சில் ஆந்தையார் என்ற பெயரிலுள்ள புலவர் இயற்றிய பாடலில் அஞ்சில் என்னும் சொல் வரவில்லை. எனவே அஞ்சில் என்னும் சொல் ஊரைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது.
பாடிய பாடல்
சங்க இலக்கிய தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் அஞ்சில் அஞ்சியார் பாடியதாக ஒரு பாடல் உள்ளது. (பாடல்- 90 )
நற்றிணை 90
ஆடியல் விழவின் அழுங்கன் மூதூர்
உடையோர் பான்மையின் பெருங்கை தூவா
வறனில் புலத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடிப்
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்
அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி
நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள்
ஊசல் ஊறுதொழிற் பூசல் கூட்டா
நயனின் மாக்களொடு குழீஇப்
பயனின்று அம்மவிவ் வேந்துடை அவையே.
எளிய பொருள்;
அந்த மூதூரில் ஆடி விழா. எல்லாரும் உடையோர் போலப் பெருங்கை (நல்லொழுக்க) உணவு அருந்துவர். துணி வெளுக்கும் புலத்தி துவைக்காத புத்தாடை அணிந்துகொள்வர். பனைநார்க் கயிற்றில் ஊஞ்சல் கட்டி ஆடுவர், மாலை போட்டுக்கொண்டு ஆடுவர். தலைவி ஒருத்தி இன்று புத்தாடை புனையவில்லை. மாலை அணிந்து கொள்ளவில்லை. தோழியர் ஆட்டும் ஊஞ்சலும் ஆடவில்லை. இவள் அழுதுகொண்டே ஒதுங்கிச் செல்கிறாள். காரணம் இவளது தலைவனை நயன் இல்லாத மாக்கள் (மகளிர்) தழுவிக்கொண்டனர். இதனை வேந்தனும் கண்டு கொள்ளவில்லை. இந்த அரசனால் என்ன பயன் என்கிறாள் தோழி.
(ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். ஆடிமாதக் காற்றில் மரங்கள் மிகுதியாக ஆடும். இதனால் இந்த மாதத்துக்குப் பெயர் ஆடி. ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழா ஆடிப்பதினெட்டு. இந்த நாளில் தூறி என்று சொல்லி ஊஞ்சலாடுவது இக்காலத்திலும் உண்டு)
உசாத்துணை
- மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.