சிற்பி (சிவசரவணபவன்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:Sirpi saravanapavan1.jpg|thumb|சிற்பி]]
[[File:Sirpi saravanapavan1.jpg|thumb|சிற்பி]]
[[File:சிற்பி .png|thumb|சிற்பி]]
[[File:சிற்பி .png|thumb|சிற்பி]]
அண்மையில் எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரை (யாழ்நங்கை) கலைச்செல்வி ஆசிரியர் அமரர் 'சிற்பி' சிவசரவணபவன் அவர்களின் நினைவு தினத்தினையொட்டி (நவம்பர் 9) முகநூற் பதிவொன்றினை வெளியிட்டிருந்தார். அதிலவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: "நல்லாசானும் சிறந்த எழுத்தாளரும் ஈழத்துச்சிறுகதைத்தொகுதியை முதன்முதலில் வெளியிட்டவரும்   கலைச்செல்வி மாத இதழின் ஆசிரியருமாக அதனை 8 வருடங்கள் தன்னந்தனியனாக நின்று வெளியிட்டவரும் (1958 - 1966 ) கலைச்செல்விமூலம் ஈழத்து இலக்கிய வரலாற்றில் புகழ் பெற்ற எழுத்தாளர்களை உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றவருமான சிற்பி சிவசரவணபவன் அவர்களது 5 ஆவது நினைவு தினம் ( 1933 - 2015 ) நாளை ஆகும் (நவம்பர் 9) தமிழகச் சிற்றிதழ்களின் செல்வாக்கு மிகப்பெரும் அளவில்  இங்கு விளங்கிய வேளை ஈழத்தில் ஓர் இலக்கிய உணர்வு பொங்கி எழ கலைச்செல்வி காலாய் அமைந்தது வரலாறு.அதை ஞானம் சஞ்சிகை தக்க முறையில் பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. நிலவும் நினைவும்  சத்திய தரிசனம் நினை வுகள் மடிவதில்லை  ஆகியவை  இவரது சிறுகதைத் தொகுப்புகளாகும் உனக்காகக் கண்ணே சிந்தனைக்கண்ணீர்  அன்பின்குரல் ஆகியவை இவரது நாவல்களாகும். உனக்காகக் கண்ணே நூலுருப்பெற்றது. வேறு பல உயரிய இலக்கியப்பணிகளையும் மேற்கொண்டு சிறப்புப் பெற்ற இவர் உயர் கௌரவங்களையும் பெற்றவர் என்பதும்தெரிந்ததே. அன்னாரை இவ்வேளை நினைவில் கொள்வோம்."
சிற்பி சிவசரவணபவன் ( 28 பெப்ரவரி 1933 - 9 நவம்பர் 2015 ) இலங்கைத் தமிழ் எழுத்தாளர், இதழாளர். இலங்கையின் தொடக்ககாலச் சிற்றிதழான கலைச்செல்வியின் ஆசிரியர்.
யாழ்நங்கை அவர்கள் 'ஈழத்து இலக்கிய வரலாற்றில் புகழ் பெற்ற எழுத்தாளர்களை உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றவருமான சிற்பி சிவசரவணபவன் அவர்களது' என்று கூறுவது உண்மையான கூற்று. அதற்கு யாழ்நங்கை அவர்களே நல்லதோர் உதாரணம். மாணவியான யாழ்நங்கை அவர்களின் ஆரம்பகாலப்படைப்புகளுக்குக் களமமைத்துக் கொடுத்தது கலைச்செல்வி. தொடர்ந்து 62இல் அவர் வீரகேசரியில் உதவியாசிரியராகப் பதவி பெற்றபோது அதனை வாழ்த்தியொரு குறிப்பினையும் கலைச்செல்வி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


நூலகம் தளத்தில் கலைச்செல்வி இதழ்கள் பலவற்றைக் காணலாம். அவற்றினூடு பயணித்தபோது இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு எவ்விதம் வளமூட்டியதோர் இதழாகக் கலைச்செல்வி விளங்கியது என்பதையும் உணர முடிந்தது. 'தனிமரங்கள் தோப்பாவதில்லை' என்பார்கள். ஆனால் தனிமரங்களும் ஏனைய மரங்களை அரவணைத்துத் தோப்பாவதுண்டு என்பதற்குப் பலரை உதாரணங்களாகக் காட்ட முடியும். மல்லிகை டொமினிக் ஜீவா, ஞானம் ஞானசேகரன்,  கலைச்செல்வி சிற்பி சிவசரவணபவன் போன்றோர் தனி மனிதர்களாக நின்று எழுத்தாளர்களை அரவணைத்து அவர்கள்தம் பங்களிப்புகளினூடு இலக்கியத்தோப்புகளை உருவாக்கியவர்கள்.
== பிறப்பு கல்வி ==
சிவசரவணபவன்  28 பெப்ரவரி 1933 ல் யாழ்ப்பாண மாவட்டம் காரைநகரில் சிவசுப்பிரமணியக் குருக்கள், சௌந்தராம்பாள் இணையருக்குப் பிறந்தார். கந்தரோடை  தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் மொழிக்கான ராஜா சேதுபதி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்


கலைச்செல்வியின் முக்கிய சாதனைகளாக நான் கருதுவது:
== தனிவாழ்க்கை ==
சிவசரவணபவன் யாழ்ப்பாணம் திருநெல்வேலி செங்குந்த இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார்.


1. இளம் எழுத்தாளர்களுக்குக் களமமைத்துக்கொடுத்து ஊக்குவித்தது.
== இதழியல் ==
சிவசரவணபவன் 1953 இல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கற்கும்போது செலையூர் மன்றம் வெளியிட்ட இளந்தமிழன் என்ற இதழின் ஆசிரியராக பணியாற்றினார்


2. எழுத்தாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளை வெளியிட்டது. வளர்ந்து வந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது.
[[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]] இதழின் ஆசிரியராக எட்டாண்டுகள் (1958 -1966) பணியாற்றினார். கலைச்செல்வி ஈழ இலக்கியத்தில் வளர்ச்சியை உருவாக்கிய இதழாகக் கருதப்படுகிறது.


3. பல்வேறு கலை, இலக்கியக்கோட்பாடுகளைக் கொண்டிருந்த எழுத்தாளர்களின் படைப்புகளையும் கலைச்செல்வியில் வெளியிட்டது. எஸ்.பொ , மு.தளையசிங்கம், சொக்கன், அ.ந.கந்தசாமி, கனக செந்திநாதன், இலங்கையர்கோன் , அ.செ.முருகானந்தன் ... என்று பலரும் கலைச்செல்வியில் எழுதினார்கள்.
== இலக்கியம் ==
சிவசரவணபவன்  திருவல்லிக்கேணி அவ்வை தமிழ்ச்சங்கத்தினர் நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றார். சிற்பி என தனக்கு புனைபெயர் சூட்டிக்கொண்டார். அவரது முதற் சிறுகதையான ''மலர்ந்த காதல்'' 1952 இல் [[சுதந்திரன்]] இதழில் வெளியானது


4. கவிதைகள், சிறுகதைகள், நாவல்களை வெளியிட்டு அவ்விலக்கிய வடிவங்களை ஊக்குவித்தது. சிறந்த கதைகளுக்குச் சன்மானம் வழங்கியது. நாவல் போட்டியொன்றை நடத்தியது. முதற் பரிசுக்கு ரூபா 1000 வழங்கி அப்போட்டியினைச் சிறப்பாக நடத்தியது. அதன் நடுவர்களிலொருவராக எழுத்தாளர் அகிலனுமிருந்தார். அகிலனின் சந்திப்பு நாவலும் தொடராகக் கலைச்செல்வியில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.  உதயணன், செம்பியன் செல்வன், சிற்பி பலரது நாவல்கள் கலைச்செல்வியில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
1955 ல் [[உதயம்]] இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் மறுமணம் என்ற சிறுகதை முதற்பரிசு பெற்றது. தமிழ்நாட்டு இதழ்களான [[கல்கி (வார இதழ்)|கல்கி]], [[மஞ்சரி (இதழ்)|மஞ்சரி]], புதுமை, [[கலைமகள்]], தீபம் ஆகியவற்றில் எழுதினார்


5. படைப்புகளுக்கு, அட்டைப்படங்களுக்கு அழகிய ஓவியங்களை வெளியிட்டதன் மூலம் ஓவியர்களை ஊக்குவித்து அவர்களுக்கும் களமமைத்துக்கொடுத்தது.
பன்னிரு ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து 1958 ல் ''ஈழத்துச் சிறுகதைகள்'' என்னும் சிறுகதைத் தொகுப்பைக் கந்தரோடைத் தமிழருவிப் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ஈழத்து எழுத்தாளர்களின்  சிறுகதைகளின் முதல் தொகுதி இது


6. கலை, இலக்கியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. கலைச்செல்வி இதழ்களைத்தேடினால் , ஆவணச்சிறப்புள்ள கலை, இலக்கியத் தகவல்களை, படைப்புகளை அவற்றில் காணமுடியும். எழுத்தாளர்கள் பலரின் இளமைக்காலத் தோற்றப்புகைப்படங்களைத் தேடுகையில் நான் முதலில் தேடும் சஞ்சிகைகளில் கலைச்செல்வியுமொன்று.
== விருதுகள் ==
 
* யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலங்கைப் பேரவை விருது 2008-2009 ( நினைவுகள் மடிவதில்லை)
* எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2011
 
== நூல்கள் ==
 
====== ''சிறுகதை'' ======
 
* ''நிலவும் நினைவும்''
* சத்திய தரிசனம்
* நினைவுகள் மடிவதில்லை
 
====== நாவல் ======
 
* ''உனக்காகக் கண்ணே''
* சிந்தனைக் கண்ணீர்
* அன்பின் குரல்

Revision as of 11:20, 7 December 2022

சிற்பி
சிற்பி

சிற்பி சிவசரவணபவன் ( 28 பெப்ரவரி 1933 - 9 நவம்பர் 2015 ) இலங்கைத் தமிழ் எழுத்தாளர், இதழாளர். இலங்கையின் தொடக்ககாலச் சிற்றிதழான கலைச்செல்வியின் ஆசிரியர்.

பிறப்பு கல்வி

சிவசரவணபவன் 28 பெப்ரவரி 1933 ல் யாழ்ப்பாண மாவட்டம் காரைநகரில் சிவசுப்பிரமணியக் குருக்கள், சௌந்தராம்பாள் இணையருக்குப் பிறந்தார். கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் மொழிக்கான ராஜா சேதுபதி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்

தனிவாழ்க்கை

சிவசரவணபவன் யாழ்ப்பாணம் திருநெல்வேலி செங்குந்த இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார்.

இதழியல்

சிவசரவணபவன் 1953 இல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கற்கும்போது செலையூர் மன்றம் வெளியிட்ட இளந்தமிழன் என்ற இதழின் ஆசிரியராக பணியாற்றினார்

கலைச்செல்வி இதழின் ஆசிரியராக எட்டாண்டுகள் (1958 -1966) பணியாற்றினார். கலைச்செல்வி ஈழ இலக்கியத்தில் வளர்ச்சியை உருவாக்கிய இதழாகக் கருதப்படுகிறது.

இலக்கியம்

சிவசரவணபவன் திருவல்லிக்கேணி அவ்வை தமிழ்ச்சங்கத்தினர் நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றார். சிற்பி என தனக்கு புனைபெயர் சூட்டிக்கொண்டார். அவரது முதற் சிறுகதையான மலர்ந்த காதல் 1952 இல் சுதந்திரன் இதழில் வெளியானது

1955 ல் உதயம் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் மறுமணம் என்ற சிறுகதை முதற்பரிசு பெற்றது. தமிழ்நாட்டு இதழ்களான கல்கி, மஞ்சரி, புதுமை, கலைமகள், தீபம் ஆகியவற்றில் எழுதினார்

பன்னிரு ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து 1958 ல் ஈழத்துச் சிறுகதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பைக் கந்தரோடைத் தமிழருவிப் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளின் முதல் தொகுதி இது

விருதுகள்

  • யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலங்கைப் பேரவை விருது 2008-2009 ( நினைவுகள் மடிவதில்லை)
  • எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2011

நூல்கள்

சிறுகதை
  • நிலவும் நினைவும்
  • சத்திய தரிசனம்
  • நினைவுகள் மடிவதில்லை
நாவல்
  • உனக்காகக் கண்ணே
  • சிந்தனைக் கண்ணீர்
  • அன்பின் குரல்