under review

ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Ootrumalai Iruthayaalaya Maruthappa Devar|Title of target article=Ootrumalai Iruthayaalaya Maruthappa Devar}}
{{Read English|Name of target article=Ootrumalai Iruthayaalaya Maruthappa Devar|Title of target article=Ootrumalai Iruthayaalaya Maruthappa Devar}}
[[File:ஊற்றுமலை ஜமீந்தார்.png|thumb|ஊற்றுமலை ஜமீன்தார்]]
[[File:ஊற்றுமலை ஜமீந்தார்.png|thumb|ஊற்றுமலை ஜமீன்தார்]]
[[File:Iruthalaya.png|thumb|இருதயாலய மருதப்பர்]]
ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) நிலக்கிழார். ஊற்றுமலை ஜமீன்தார். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவர்.
ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) நிலக்கிழார். ஊற்றுமலை ஜமீன்தார். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== முன்னோர் ==
[[File:ஊற்றுமலை ஜமீந்தார்2.jpg|thumb|ஊற்றுமலை ஜமீந்தார்]]
[[File:ஊற்றுமலை ஜமீந்தார்2.jpg|thumb|ஊற்றுமலை ஜமீந்தார்]]
[[File:ஊற்றுமலை ஜமீன்.jpg|thumb|ஊற்றுமலை ஜமீன்]]
[[File:ஊற்றுமலை ஜமீன்.jpg|thumb|ஊற்றுமலை ஜமீன்]]
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திற்கு அருகேயுள்ள வீரகேரளம்புதூரைச் சார்ந்தது ஊற்றுமலை ஜமீன். திருநெல்வேலி சீமையில் ஆட்சி செய்த மறவர் இனத்தைச் சேர்ந்த பாளையக்காரர்கள் அனைவரும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள "கிலுவை" நாட்டிலிருந்து வந்தவர்கள். மறவர் இனத்தில் கொண்டயங்கோட்டைப் பிரிவை சேர்ந்தவர்கள்தான் ஊற்றுமலை ஜமீன்தார்கள்.மதுரை மன்னர் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில், ஊற்றுமலை மிகப்பெரிதாக திகழ்ந்துள்ளது. இதன் ஆளுகைக்குள் 148 கிராமங்கள் இருந்தன. ஒரு காலகட்டத்தில் சுரண்டை ஜமீனையும் ஊத்துமலை ஜமீன்தார் ஏலம் எடுத்து தனது ஆளுகைக்கு கொண்டுவந்தார். ஊத்துமலை ஜமீன்தாருக்கு விஜயகுணராம பாண்டியன் என்ற பட்டம் உண்டு. இவர் உபய சாமரம், புலிக்கொடி, மகரக்கொடி, இந்திரனின் கொடியான வலரிக் கொடி ஆகியவற்றைப் பெற்றவ[https://nakarajan.blogspot.com/2018/02/oothumalai-jameen-oothumalai-jameen.html ர்.]
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திற்கு அருகேயுள்ள வீரகேரளம்புதூரைச் சார்ந்தது ஊற்றுமலை ஜமீன். திருநெல்வேலி சீமையில் ஆட்சி செய்த மறவர் இனத்தைச் சேர்ந்த பாளையக்காரர்கள் அனைவரும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள "கிலுவை" நாட்டிலிருந்து வந்தவர்கள். மறவர் இனத்தில் கொண்டயங்கோட்டைப் பிரிவை சேர்ந்தவர்கள்தான் ஊற்றுமலை ஜமீன்தார்கள்.

இவர்களின் குலதெய்வம் நவநீத கிருட்டிணப் பெருமாள். ஊத்துமலை ஜமீனில் புகழ்பெற்றவர் இருதயாலய மருதப்ப தேவர். (வீரகேரளம்புதூர் கோயிலின் இறைவனின் பெயர் இருதயாலயர்) இவருடைய காலத்தில் காவடிச்சிந்து பாடிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரும், வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகளும் இருந்தனர். அண்ணாமலை ரெட்டியார் அவைக்களப்புலவராக இருந்தார்.  
மதுரை மன்னர் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில், ஊற்றுமலை மிகப்பெரிதாக திகழ்ந்துள்ளது. இதன் ஆளுகைக்குள் 148 கிராமங்கள் இருந்தன. ஒரு காலகட்டத்தில் சுரண்டை ஜமீனையும் ஊத்துமலை ஜமீன்தார் ஏலம் எடுத்து தனது ஆளுகைக்கு கொண்டுவந்தார். ஊத்துமலை ஜமீன்தாருக்கு விஜயகுணராம பாண்டியன் என்ற பட்டம் உண்டு. இவர் உபய சாமரம், புலிக்கொடி, மகரக்கொடி, இந்திரனின் கொடியான வலரிக் கொடி ஆகியவற்றைப் பெற்றவ[https://nakarajan.blogspot.com/2018/02/oothumalai-jameen-oothumalai-jameen.html ர்.]
 
இவர்களின் குலதெய்வம் நவநீத கிருட்டிணப் பெருமாள்.  
 
== பிறப்பு, வாழ்க்கை ==
ஊத்துமலை ஜமீனில் புகழ்பெற்றவர் இருதயாலய மருதப்ப தேவர். (வீரகேரளம்புதூர் கோயிலின் இறைவனின் பெயர் இருதயாலயர்) இவருடைய காலத்தில் காவடிச்சிந்து பாடிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரும், வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகளும் இருந்தனர். அண்ணாமலை ரெட்டியார் அவைக்களப்புலவராக இருந்தார்.  
== இலக்கிய ஈடுபாடு ==
== இலக்கிய ஈடுபாடு ==
[[File:ஊற்றுமலை ஜமீன்3.jpg|thumb|ஊற்றுமலை ஜமீன்]]
[[File:ஊற்றுமலை ஜமீன்3.jpg|thumb|ஊற்றுமலை ஜமீன்]]
Line 20: Line 26:
* இராமசாமிக் கவிராயர்
* இராமசாமிக் கவிராயர்
* [[உ.வே.சாமிநாதையர்]]
* [[உ.வே.சாமிநாதையர்]]
== புகழ் ==
== புகழ் ==
இருதயாலய மருதப்ப தேவர் மீது பாடப்பட்ட செய்யுள்களை "ஊற்றுமலை தனிப்பாடல் திரட்டு" என்ற நூலாகத் தொகுத்தனர்.  
இருதயாலய மருதப்ப தேவர் மீது பாடப்பட்ட செய்யுள்களை "ஊற்றுமலை தனிப்பாடல் திரட்டு" என்ற நூலாகத் தொகுத்தனர்.  
Line 42: Line 47:

        பெருமிதத்தை இயம்பும் மன்னே !
        பெருமிதத்தை இயம்பும் மன்னே !

Line 60: Line 64:

           துலங்கிற் றலோ.  
           துலங்கிற் றலோ.  
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
Line 66: Line 69:
*https://nakarajan.blogspot.com/2018/02/oothumalai-jameen-oothumalai-jameen.html
*https://nakarajan.blogspot.com/2018/02/oothumalai-jameen-oothumalai-jameen.html
*https://www.tagavalaatruppadai.in/archaeology-details?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6
*https://www.tagavalaatruppadai.in/archaeology-details?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6
*[https://veerakeralampudur-nellai.blogspot.com/ வீரகேரளம் புதூர் இணையப்பக்கம்]
*[https://veerakeralampudur-nellai.blogspot.com/2013/03/blog-post_1857.html ஊற்றுமலை ஜமீன் வம்ச வரலாறு]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Revision as of 08:07, 2 December 2022

To read the article in English: Ootrumalai Iruthayaalaya Maruthappa Devar. ‎

ஊற்றுமலை ஜமீன்தார்
இருதயாலய மருதப்பர்

ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) நிலக்கிழார். ஊற்றுமலை ஜமீன்தார். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவர்.

முன்னோர்

ஊற்றுமலை ஜமீந்தார்
ஊற்றுமலை ஜமீன்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திற்கு அருகேயுள்ள வீரகேரளம்புதூரைச் சார்ந்தது ஊற்றுமலை ஜமீன். திருநெல்வேலி சீமையில் ஆட்சி செய்த மறவர் இனத்தைச் சேர்ந்த பாளையக்காரர்கள் அனைவரும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள "கிலுவை" நாட்டிலிருந்து வந்தவர்கள். மறவர் இனத்தில் கொண்டயங்கோட்டைப் பிரிவை சேர்ந்தவர்கள்தான் ஊற்றுமலை ஜமீன்தார்கள்.

மதுரை மன்னர் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில், ஊற்றுமலை மிகப்பெரிதாக திகழ்ந்துள்ளது. இதன் ஆளுகைக்குள் 148 கிராமங்கள் இருந்தன. ஒரு காலகட்டத்தில் சுரண்டை ஜமீனையும் ஊத்துமலை ஜமீன்தார் ஏலம் எடுத்து தனது ஆளுகைக்கு கொண்டுவந்தார். ஊத்துமலை ஜமீன்தாருக்கு விஜயகுணராம பாண்டியன் என்ற பட்டம் உண்டு. இவர் உபய சாமரம், புலிக்கொடி, மகரக்கொடி, இந்திரனின் கொடியான வலரிக் கொடி ஆகியவற்றைப் பெற்றவர்.

இவர்களின் குலதெய்வம் நவநீத கிருட்டிணப் பெருமாள்.

பிறப்பு, வாழ்க்கை

ஊத்துமலை ஜமீனில் புகழ்பெற்றவர் இருதயாலய மருதப்ப தேவர். (வீரகேரளம்புதூர் கோயிலின் இறைவனின் பெயர் இருதயாலயர்) இவருடைய காலத்தில் காவடிச்சிந்து பாடிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரும், வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகளும் இருந்தனர். அண்ணாமலை ரெட்டியார் அவைக்களப்புலவராக இருந்தார்.

இலக்கிய ஈடுபாடு

ஊற்றுமலை ஜமீன்

புலவர்கள் பலரை ஆதரித்து அவர்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுத்து பேணினார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் நவநீதகிருட்டிண கலம்பகம் பாடவும், அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து பாடவும் ஊக்குவித்தார். ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் உ.வே.சாமிநாதையருக்கு பொருளிதவி செய்தார். உ.வே.சாமிநாதையர் ஊற்றுமலையில் உ.வே.சாமிநாதையரின் உபசரிப்பில் தங்கியிருந்து, அவரை பாராட்டி பாடல்களும் புனைந்துள்ளார்.

ஆதரித்த புலவர்கள்

புகழ்

இருதயாலய மருதப்ப தேவர் மீது பாடப்பட்ட செய்யுள்களை "ஊற்றுமலை தனிப்பாடல் திரட்டு" என்ற நூலாகத் தொகுத்தனர்.

உ.வே.சாமிநாதையர் இவரைப் பற்றி பாடிய புகழ்பாடல்கள் இரண்டு

மண்களிக்கும் வீரையிடைக் கண்ணன்நவ நீதமிரு

            மலர்கை ஏந்திக்

கண்களிக்கும் படி நிற்கும் காட்சிஇத யாலயமா

            கனவான் ஊட்டும்  

விண்களிக்கும் சுவைமிகுசிற் றுண்டிகளா தியநிதமும்

            விரும்பி உண்டுண்

டெண்களிக்கும் சுவையதனை மறந்தொழிந்த

        பெருமிதத்தை இயம்பும் மன்னே !

தன்னிடைமுன் துயின்றிடுமா தவன்வடிவு பிறிதொன்று

           தரித்தே தன்பால்

மன்னிடுமற் றையஅனைத்தும்  மருவிஇத யாலயப்பேர்

           மருவி யாரும்

பன்னிடுமா றுறல்தெரிந்த பாற்கடலும்  அவன்போலப்

           படிவ மாறித்

துன்னிடுமற்றையதங்கி அவற்றங்கி  வீரையெனத்

           துலங்கிற் றலோ.

உசாத்துணை

✅Finalised Page