பூண்டி அரங்கநாத முதலியார்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
பூண்டி அரங்கநாத முதலியார்(1844-டிசம்பர் 10,1893) பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழறிஞர்,சமூகப் பணியாளர், உ.வே,சாமிநாதையருக்குத் தமிழ்ப்பணிகளில் உறுதுணையாய் இருந்தவர்.சென்னை நகர ஷெரீஃப், சென்னை மாகாணத்தின் தமிழ் மொழிபெயர்ப்புத் துறைத் தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர். கச்சிக் கலம்பகத்தை இயற்றியவர். | பூண்டி அரங்கநாத முதலியார்(1844-டிசம்பர் 10,1893) பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழறிஞர்,சமூகப் பணியாளர், உ.வே,சாமிநாதையருக்குத் தமிழ்ப்பணிகளில் உறுதுணையாய் இருந்தவர்.சென்னை நகர ஷெரீஃப், சென்னை மாகாணத்தின் தமிழ் மொழிபெயர்ப்புத் துறைத் தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர். கச்சிக் கலம்பகத்தை இயற்றியவர். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
அரங்கநாத முதலியார் சென்னையை அடுத்த திருவள்ளூரில் | அரங்கநாத முதலியார் சென்னையை அடுத்த திருவள்ளூரில் பூண்டி சுப்பராய முதலியாருக்கு மகனாக 1844-ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை சுப்பராய முதலியார் அன்றைய ஆங்கில ஆட்சியில் பெரிய பதவியில் இருந்தவர். தமிழிலும் சிறந்த புலமை பெற்றவர். . மிகச் சிறு வயதிலேயே அரங்கநாத முதலியாரின் தமிழ்க்கல்வி அவரது தந்தையிடமிருந்து துவங்கிவிட்டது. ஆங்கிலக்கல்வியை பள்ளியில் பெற்றார்.சென்னையைச் சேர்ந்த கதிர்வேல் உபாத்தியாயர், அஷ்டாவதானம்சபாபதி முதலியார் உள்ளிட்ட அறிஞர்களிடம் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் ஆங்கிலமும் கணிதமும் எடுத்துப்படித்தபோதே வெள்ளையர்களான ஆசிரியர்கள் அவரது ஆங்கிலப் புலமையைப் பாராட்டினர். 1870-ல் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். | ||
சென்னையைச் சேர்ந்த கதிர்வேல் உபாத்தியாயர், அஷ்டாவதானம்சபாபதி முதலியார் உள்ளிட்ட அறிஞர்களிடம் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் ஆங்கிலமும் கணிதமும் எடுத்துப்படித்தபோதே வெள்ளையர்களான ஆசிரியர்கள் அவரது ஆங்கிலப் புலமையைப் பாராட்டினர். | |||
ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். | |||
== தனி வாழ்க்கை == | == தனி வாழ்க்கை == | ||
பெல்லாரி புரொவின்ஷியல் ஸ்கூல், கும்பகோணம் கல்லூரி, மாநிலக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் | பூண்டி அரங்கநாத முதலியார் பெல்லாரி புரொவின்ஷியல் ஸ்கூல், கும்பகோணம் கல்லூரி, மாநிலக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னை இராஜதானி நிர்வாகத்தின் அதிகார பூர்வ தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | |||
தமிழில் பெரும்புலமை பெற்றிருந்த பூண்டி அரங்கநாத முதலியார் காஞ்சிபுரத்தில் கோவில் கொண்ட ஏகாம்பரநாதரைப் பற்றிய 'கச்சிக் கலம்பகம்' என்னும் சிற்றிலக்கிய நூலை இயற்றினார். [[உ.வே.சாமிநாதையர்|உ.வே. சாமிநாதையர்]] கச்சிக் கலம்பகத்திற்குப் பாயிரம் இயற்றினார். கச்சிக் கலம்பகம் சென்னை தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் உயர்நிலைப்பள்ளியில் தமிழறிஞர்கள் மற்றும் புலவர்கள் மத்தியில் அரங்கேற்றப்பட்டது. அரங்கேற்றம் ஆறு நாட்கள் நடந்தது. | |||
Revision as of 22:22, 21 November 2022
பூண்டி அரங்கநாத முதலியார்(1844-டிசம்பர் 10,1893) பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழறிஞர்,சமூகப் பணியாளர், உ.வே,சாமிநாதையருக்குத் தமிழ்ப்பணிகளில் உறுதுணையாய் இருந்தவர்.சென்னை நகர ஷெரீஃப், சென்னை மாகாணத்தின் தமிழ் மொழிபெயர்ப்புத் துறைத் தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர். கச்சிக் கலம்பகத்தை இயற்றியவர்.
பிறப்பு, கல்வி
அரங்கநாத முதலியார் சென்னையை அடுத்த திருவள்ளூரில் பூண்டி சுப்பராய முதலியாருக்கு மகனாக 1844-ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை சுப்பராய முதலியார் அன்றைய ஆங்கில ஆட்சியில் பெரிய பதவியில் இருந்தவர். தமிழிலும் சிறந்த புலமை பெற்றவர். . மிகச் சிறு வயதிலேயே அரங்கநாத முதலியாரின் தமிழ்க்கல்வி அவரது தந்தையிடமிருந்து துவங்கிவிட்டது. ஆங்கிலக்கல்வியை பள்ளியில் பெற்றார்.சென்னையைச் சேர்ந்த கதிர்வேல் உபாத்தியாயர், அஷ்டாவதானம்சபாபதி முதலியார் உள்ளிட்ட அறிஞர்களிடம் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் ஆங்கிலமும் கணிதமும் எடுத்துப்படித்தபோதே வெள்ளையர்களான ஆசிரியர்கள் அவரது ஆங்கிலப் புலமையைப் பாராட்டினர். 1870-ல் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
பூண்டி அரங்கநாத முதலியார் பெல்லாரி புரொவின்ஷியல் ஸ்கூல், கும்பகோணம் கல்லூரி, மாநிலக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னை இராஜதானி நிர்வாகத்தின் அதிகார பூர்வ தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார்.
இலக்கிய வாழ்க்கை
தமிழில் பெரும்புலமை பெற்றிருந்த பூண்டி அரங்கநாத முதலியார் காஞ்சிபுரத்தில் கோவில் கொண்ட ஏகாம்பரநாதரைப் பற்றிய 'கச்சிக் கலம்பகம்' என்னும் சிற்றிலக்கிய நூலை இயற்றினார். உ.வே. சாமிநாதையர் கச்சிக் கலம்பகத்திற்குப் பாயிரம் இயற்றினார். கச்சிக் கலம்பகம் சென்னை தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் உயர்நிலைப்பள்ளியில் தமிழறிஞர்கள் மற்றும் புலவர்கள் மத்தியில் அரங்கேற்றப்பட்டது. அரங்கேற்றம் ஆறு நாட்கள் நடந்தது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.