first review completed

பன்மணிமாலை: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Corrected section header text)
Line 17: Line 17:
==குறிப்புகள்==
==குறிப்புகள்==
<references/>
<references/>
==உசாத்துணைகள்==
== உசாத்துணை ==
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.

Revision as of 14:33, 16 December 2022

பன்மணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகையில் ஒருபோகு, அம்மானை, ஊசல் என்னும் மூன்று உறுப்புக்களும் நீங்கலாக பிற இலக்கணங்கள் அனைத்தும் அமையப் பெற்றது பல்மணிமாலை[1][2].

அம்மானை, ஊசல், ஒருபோகு, இல்லாது வெண்பா வெள்ளொத்தாழிசையும், ஆசிரியப்பா ஆசிரியத்தாழிசையும் கலிப்பா கலித்தாழிசையும், வஞ்சிப்பா வஞ்சித்தாழிசையும் அந்தாதியாகப் பாடிக் முடிவிலே வெள்ளை விருத்தம், ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், வஞ்சிவிருத்தம் இப்படி நூறு பாடப்படுவது பன்பணிமாலை[3].

இதில் புயவகுப்பு, மதங்கம், காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, என்னும் பதினாறு பொருள் கூற்று உறுப்புக்கள் அமைந்திருக்கும்

நூல்கள்

திருவாரூர்ப் பன்மணிமாலை - வைத்தியநாத தேசிகர் - சுதேசமித்திரம் ஸ்டீம் பிரஸ் (1913)

குறிப்புகள்

  1. பன்மணி மாலை பன்னிற் கலம்பகத்
    தொருபோ கம்மானை யூச லிவைநீத்
    தகவல் வெள்ளை யருங்கலித் துறையென்
    றவைசெறி நூறந் தாதியாய் வருமே

    - தொன்னூல் விளக்கம்

  2. அவற்றுள்,
    ஒருபோகு அம்மானை ஊசல் இன்றி
    வருவது பன்மணி மாலை ஆகும்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல் - பாடல் 814

  3. நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 39 ஆம் பாடல்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.