under review

அரிசில்கிழார்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(changed template text)
Line 76: Line 76:
* [http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru281.html#.YmP_atpBzIU புறநானூறு - 281. நெடுந்தகை புண்ணே! - diamondtamil.com]
* [http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru281.html#.YmP_atpBzIU புறநானூறு - 281. நெடுந்தகை புண்ணே! - diamondtamil.com]
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kurunthokai/kurunthokai_193.html தமிழ்ச்சுரங்கம்-குறுந்தொகை -193]
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kurunthokai/kurunthokai_193.html தமிழ்ச்சுரங்கம்-குறுந்தொகை -193]
Finalised
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Revision as of 12:06, 15 November 2022

To read the article in English: Arisilkizhaar. ‎


அரிசில்கிழார் சங்க காலப் புலவர். பதிற்றுப்பத்து, புறநானூறு, குறுந்தொகையில் இவர் எழுதிய பாடல்கள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் பிறந்த ஊர் சோழ நாட்டுக் குடந்தைக்கு அருகில் இருந்த அரிசில். தமிழ்நாட்டில் பாயும் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து ஓடும் ஆறு அரிசிலாறு. அதன் ஆற்றங்கரையில் அமைந்த ஊர் அரிசில். திருச்சி மாவட்டம் கொள்ளிடத்திற்கு வடக்கே உள்ள அரியில் அல்லது அரியிலூரே அரிசிலூர் என்பது தமிழறஞர்கள் சிலரின் கருத்து. குடந்தையிலுள்ள கல்வெட்டில் (A. R. 255 of 1911) அரிசிலூரைப் பற்றி உள்ளது. அரிசில் என்ற ஊர் பெயரும், கிழார் என்ற அரசர்கள் கொடுத்த சிறப்புப் பெயரும் அரிசில்கிழார் என்று ஆயிற்று.

இலக்கிய வாழ்க்கை

வேந்தன் பொருட்டுப் போரில் புகழுண்டாகப் பொருது விழுப்புண்பட்ட வீரன் தன் மனையில் இருந்தபோது அவனின் மனைவி தோழியிடம் சொல்லிய செய்தி இந்தப் பாட்டில் உள்ளது. அரசன் பேகனுக்கு அரிசில்கிழார் கூறிய அறிவுரை புறநானூற்றில் 146-ஆவது பாடலாக உள்ளது. பெருஞ்சேரலாதனின் சிறப்புகளைக் கூறும் பாடலாக பதிற்றுப்பத்தின் 71-ஆவது பாடல் உள்ளது.

இயற்றிய பாடல்கள்
  • பதிற்றுப்பத்து 79
  • பதிற்றுப்பத்து 73
  • பதிற்றுப்பத்து 74
  • பதிற்றுப்பத்து 72
  • பதிற்றுப்பத்து 230
  • பதிற்றுப்பத்து 76
  • பதிற்றுப்பத்து 71
  • பதிற்றுப்பத்து 778
  • புறநானூறு 146
  • புறநானூறு 230
  • புறநானூறு 300
  • புறநானூறு 281
  • குறுந்தொகை 193
இவரால் பாடப்பெற்ற புலவர்கள்
  • சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறை
  • குறுநில மன்னருள் வையாவிக் கோப்பெரும்பேகன்
  • அதியமான் எழினி

பாடல் நடை

மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையிற் கறங்கு நாடன்
தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின்
மணந்தனன் மன்னெடுந் தோளே
இன்று முல்லை முகைநாறும்மே.

  • புறநானூறு 281

தீங்கனி யிரவமொடு மேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.

  • புறநானூறு 146

அன்ன வாக; நின் அருங்கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம்; அடுபோர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புல
நன்னாடு பாட, என்னை நயந்து
பரிசில் நல்குவை யாயின், குரிசில் ! நீ
நல்கா மையின் நைவரச் சாஅய்,
அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை
கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன,
ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்,
தண்கமழ் கோதை புனைய,
வண்பரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே!

  • பதிற்றுப்பத்து 71

உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி,
அறிந்தனை அருளாய்ஆயின்,
யார் இவண், நெடுந் தகை! வாழுமோரே?

  • பதிற்றுப்பத்து 72

நின்முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து,
மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்
நன்று அறி உள்ளத்துச் சான்றோர் அன்ன, நின்பண்பு

உசாத்துணை


✅Finalised Page