first review completed

ஆனந்தரங்கம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 18: Line 18:
அடுத்த கவர்னர் பியரி டூமா (Pierre Benoît Dumas) காலத்தில் ஆனந்தரங்கம் பிள்ளையின் ஆதிக்கம் பெருகியது. 1724ல் மறைவது வரை குருவாப்பிள்ளை தலைமை துபாஷ் ஆக பணியாற்றினார். அவருடைய மறைவுக்கு பின்னர் அவருடைய மகன்களுக்கு அந்தப் பதவி அளிக்கப்படவில்லை. கிறிஸ்தவராக மதம் மாறிய குருவாப்பிள்ளை தன் பிள்ளைகளை ஞானஸ்நானம் கொடுக்காமல் வைத்திருந்தது பிரெஞ்சு கிறிஸ்தவச் சபையின் உயர்மட்டத்தினரின் எதிர்ப்பை ஈட்டியிருந்ததே காரணம்.   
அடுத்த கவர்னர் பியரி டூமா (Pierre Benoît Dumas) காலத்தில் ஆனந்தரங்கம் பிள்ளையின் ஆதிக்கம் பெருகியது. 1724ல் மறைவது வரை குருவாப்பிள்ளை தலைமை துபாஷ் ஆக பணியாற்றினார். அவருடைய மறைவுக்கு பின்னர் அவருடைய மகன்களுக்கு அந்தப் பதவி அளிக்கப்படவில்லை. கிறிஸ்தவராக மதம் மாறிய குருவாப்பிள்ளை தன் பிள்ளைகளை ஞானஸ்நானம் கொடுக்காமல் வைத்திருந்தது பிரெஞ்சு கிறிஸ்தவச் சபையின் உயர்மட்டத்தினரின் எதிர்ப்பை ஈட்டியிருந்ததே காரணம்.   


குருவாப் பிள்ளையின் மறைவுக்குப் பின் இரண்டு ஆண்டுக்காலம் திருவேங்கடம் பிள்ளை நடைமுறையில் துபாஷ் ஆக இருந்தார். அவருடைய மகனாகிய ஆனந்தரங்கம் பிள்ளை தனக்கு துபாஷ் பதவி கிடைக்குமென எண்ணினார். ஆனால் அப்பதைவி கனகராய முதலியார் என்னும் இன்னொரு அதிகாரிக்கு சென்றது. கனகராய முதலியார் ஆனந்தரங்கம் பிள்ளைக்கு போட்டியாளரும் எதிரியுமாக இருந்தவர். ஆகவே அனந்தரங்கம் பிள்ளை அடங்கியும் பணிந்தும் பணியாற்றினார். 1746ல் கனகராய முதலியார் உயிர் துறந்தார். ஆனந்தரங்கம் பிள்ளை தலைமை துபாஷியாக பதவிஏற்றார். ஆனந்தரங்கப்பிள்ளை பிரஞ்சிந்திய வர்த்தகக் கம்பெனியின் தலைமைத் துபாஷியாகவும், அரசின் தூதுவராகவும், அரசியல் ஆலோசகராகவும்,தலைமை வணிகராகவும், தமிழ் மக்களின் தலைவராகவும், தமிழ் மக்களின் நீதித்துறைத் தலைவராகவும், வரி வசூல் செய்யும் பொறுப்பதிகாரியாகவும், வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகியாகவும் விளங்கினார்.  
குருவாப் பிள்ளையின் மறைவுக்குப் பின் இரண்டு ஆண்டுக்காலம் திருவேங்கடம் பிள்ளை நடைமுறையில் துபாஷ் ஆக இருந்தார். அவருடைய மகனாகிய ஆனந்தரங்கம் பிள்ளை தனக்கு துபாஷ் பதவி கிடைக்குமென எண்ணினார். ஆனால் அப்பதைவி கனகராய முதலியார் என்னும் இன்னொரு அதிகாரிக்கு சென்றது. கனகராய முதலியார் ஆனந்தரங்கம் பிள்ளைக்கு போட்டியாளரும் எதிரியுமாக இருந்தவர். ஆகவே அனந்தரங்கம் பிள்ளை அடங்கியும் பணிந்தும் பணியாற்றினார். கனகராய முதலியார் ஆனந்தரங்கம் பிள்ளை பவள வணிகர்களிடமிருந்து பெற்ற கடனுக்கான வட்டியை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி கனகராய முதலியார் கவர்னரிடம் வழக்கை கொண்டுசென்றார். விசாரணையில் முதலில் அந்த வட்டியை வழங்கும்படி சொன்ன கவர்னர் டுமா பின்னர் ஆனந்தரங்கம் பிள்ளை தனக்கு கடும் இழப்பு ஏற்பட்டது என்று சொன்னதை ஏற்றுக்கொண்டார். நீண்டநாள் விசாரணைக்குப்பின் ஆனந்தரங்கம் பிள்ளைக்குச் சாதகமாக பிரெஞ்சு நிர்வாகக்குழு முடிவெடுத்தது. 1739 ல் கனகராய முதலியின் மகன் வில்வேந்திர முதலி 21 வயதில் மர்மமாக இறந்தார். அச்செய்தியை அறிந்த வில்வேந்திர முதலியின் அன்னையும் தற்கொலை செய்துகொண்டார்.   
 
1741ல் கவர்னர் டூமா துணை கவர்னரிடம் பதவியை அளித்துவிட்டு பாண்டிச்சேரியில் இருந்து கிளம்பினார். 14 ஜனவரி1742 ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றில் முக்கியமானவரான டூப்ளே (Joseph François Dupleix) பாண்டிச்சேரிக்கு வந்து கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய கவர்னருக்கு மிக அணுக்கமானவராக ஆன ஆனந்தரங்கம் பிள்ளை 1743 முதல் நடைமுறையில் தலைமை துபாஷியாகவே பணியாற்றினார். ச் செயல்ப onwards, Ananda Ranga won the confidence of the Governor of Pondicherry and rose up the ranks. when the suburban villages of Pondicherry were leased for five years to Kumara Pillai, Vira Nayakkan, Chandramadi Pillai, and Ella Pillai, Ananda Ranga Pillai was able to offer surety for the renters for a period of five years. Nevertheless, when Kesava Aiyan died, Ananda Ranga was not able to prevent Kanakaraya Mudali from nominating his brother-in-law Gavinivasa Mudali as ''dubash'' in Kesava Aiyan's place. Kanakaraya Mudali secured his objective despite the vehement protests of Ananda Ranga Pillai. On 29 June 1744, the marriage of Ananda Ranga Pillai's daughter Papal was conducted in regal splendor. Ananda Ranga further solidified his position by mediating in disputes such as those between Prakasa Mudali and Tiruvengada Pillai, etc. Not to be left behind, on 30 November 1745, Ananda Ranga's great rival Kanakaraya Mudali constructed a church at Ozhukkarai and celebrated its consecration by providing a great feast. Ananda Ranga Pillai, however, reported heavy criticism from guests for inviting people of non-Christian faiths for the feast celebrating the consecration of a church.
 
 
1746 ல் கனகராய முதலியார் உயிர் துறந்தார். ஆனந்தரங்கம் பிள்ளை தலைமை துபாஷியாக பதவி ஏற்றார். ஆனந்தரங்கப்பிள்ளை பிரஞ்சிந்திய வர்த்தகக் கம்பெனியின் தலைமைத் துபாஷியாகவும், அரசின் தூதுவராகவும், அரசியல் ஆலோசகராகவும்,தலைமை வணிகராகவும், தமிழ் மக்களின் தலைவராகவும், தமிழ் மக்களின் நீதித்துறைத் தலைவராகவும், வரி வசூல் செய்யும் பொறுப்பதிகாரியாகவும், வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகியாகவும் விளங்கினார்.


====== துபாஷி ======
====== துபாஷி ======

Revision as of 08:08, 7 February 2022

Anandarangam Pillai
ஆனந்தரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கம் பிள்ளை (மார்ச் 30, 1709 – ஜனவரி 10, 1761) தமிழக வரலாற்றின் முதன்மையான வரலாற்றுக் குறிப்பாளர். பாண்டிச்சேரி நகரத்தில் ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிக்காக மொழிபெயர்ப்பாளராக (துபாஷ்) பணி புரிந்தார். ஃப்ரெஞ்சு ஆளுனர் டூப்ளேக்கு அணுக்கமானவர். 1736 முதல் 1761 வரை அவர் எழுதி வைத்திருந்த நாட்குறிப்புகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய உண்மையான சித்தரிப்பை அளிக்கின்றன. இவை அன்றைய அரசியல் சூழ்நிலை, தினசரி வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய மிக முக்கியமான ஆவணங்கள்.

பிறப்பு, இளமை

ஆனந்தரங்கம் பிள்ளை மார்ச் 30, 1709 அன்று பெரம்பூரில் (இன்றைய சென்னை நகரம்) திருவேங்கடம் பிள்ளை எனும் யாதவர் குலத்து வணிகருக்கு மகனாக பிறந்தார். ஆனந்தரங்கம் பிள்ளைக்கு மூன்று வயது இருக்கையிலேயே தாய் இறந்துவிட்டார். பாண்டிச்சேரியில் திருவேங்கடம் பிள்ளையின் மைத்துனர் நைனியா பிள்ளை ஃப்ரெஞ்சு ஆட்சியில் பிரெஞ்சு கவர்னர் குல்லியம் டி ஹெப்ர்ட் ( Guillaume André d'Hébert) க்கு தலைமை இந்தியத் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அவரது அழைப்பின்படி திருவேங்கடம் பிள்ளை 1716-ல் பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்தார். அங்கு அரசுப் பணியில் உதவியாளராகச் சேர்ந்தார்

நைனா பிள்ளை கவர்னரின் கோபத்துக்கு ஆளாகி விசாரணை செய்யப்பட்டு சிறையில் இறந்தார். திருவேங்கடம் பிள்ளை அஞ்சி ஆங்கிலேய நிலப்பகுதிக்கு தப்பி ஓடினார். ஆனால் அடுத்த பிரெஞ்சு கவர்னர் பிரிவொஸ்ட்ர் ( De La Prévostière) திருவேங்கடம் பிள்ளையை அழைத்து பணியில் அமர்த்திக்கொண்டார். நைனா பிள்ளையின் மகன் குருவரப் பிள்ளை பிரெஞ்சு பகுதியில் இருந்து தப்பி ஆங்கிலேயப் பகுதிக்குச் சென்றார். அவர் டி ஹெபர்ட் மீது டியூக் ஆஃப் ஆர்லியன்ஸிடம் புகார் செய்தார். விசாரணைக்குப்பின்னர் டி ஹெப்ர்ட் பதவிநீக்கம் செய்யப்பட்டார். குருவாப் பிள்ளை நைனார் பிள்ளையின் பதவியை அடைந்தார். குருவரப்பிள்ளை மதம் மாறி செயிண்ட் மைக்கேல் திருச்சபையில் (Order of Saint Michael )செவாலியே ( chevalier) பட்டம் பெற்றார். 1724ல் குருவாப்பிள்ளை மறைய 1726ல் திருவேங்கடம் பிள்ளை அவருடைய இடத்தில் பதவி உயர்வு பெற்றார்.

ஆனந்தரங்கம் பிள்ளை தொடக்கத்தில் எம்பார் என்பவரிடம் கல்வி பயின்றார். பின்னர் இல்லத்திலேயே வெவ்வேறு அறிஞர்கள் வரவழைக்கப்பட்டு ஆங்கிலம் பிரெஞ்சு சம்ஸ்கிருதம் போன்ற மொழிகள் கற்பிக்கப்பட்டன. தன் தந்தையுடன் இணைந்து அலுவலகப் பணிகளை செய்ய தொடங்கினார். தங்கள் குடும்பத்தவர் நடத்திவந்த பாக்குக் கிடங்கினை பார்த்துக்கொண்டார். அடுத்த கவர்னர் பியரி கிறிஸ்டோஃப் ( Pierre Christoph Le Noi) திருவேங்கடம் பிள்ளையிடம் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். 1726ல் திருவேங்கடம்பிள்ளை மறைந்தபோது பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் பொறுப்பில் போர்ட்டோ நோவோ ( பரங்கிப்பேட்டை)வில் இருந்த துணி ஆலையின் தலைமைப்பொறுப்புக்கு நியமித்தார்

தனிவாழ்க்கை

ஆனந்தரங்கம் பிள்ளை செங்கல்பட்டு சேஷாத்ரி பிள்ளையின் மகள் மங்கதாயியை மணந்து மூன்று மகள்களுக்கும் இரண்டு மகன்களுக்கும் தந்தையானார்.அவரது மகன்கள் அண்ணாசாமி, அய்யாசாமி இருவரும் அவருக்கு முன்னாலேயே இறந்துவிட்டனர். அவரது மகள் பாப்பாளின் திருமணம் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது என்று நாட்குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

பொதுவாழ்க்கை

ஆனந்தரங்கம் பிள்ளை 1726 பரங்கிப்பேட்டையின் நீலத்துணி தொழிற்சாலையில் மிக வெற்றிகரமாகச் செயல்பட்டார். உள்ளூர் நெசவுத்தொழில் பற்றி நன்கறிந்திருந்த ஆனந்தரங்கம் பிள்ளை ஆர்க்காடு, லாலாப்பேட்டையில் நான்கு கொள்முதல் நிலையங்களை உருவாக்கி அங்கிருந்து குறைந்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து நீலச்சாயம் முக்கி துணிகளை உற்பத்தி செய்தார். ஏராளமான நெசவாளர்களை பிரெஞ்சு பகுதியில் குடியமர்த்தினார். தனக்கென நிறைய பணம் சேர்த்துக்கொண்டு கவர்னர்களுக்கும் ஏராளமாக வழங்கி நற்பெயர் ஈட்டினார்.

பதவிப்போட்டி

அடுத்த கவர்னர் பியரி டூமா (Pierre Benoît Dumas) காலத்தில் ஆனந்தரங்கம் பிள்ளையின் ஆதிக்கம் பெருகியது. 1724ல் மறைவது வரை குருவாப்பிள்ளை தலைமை துபாஷ் ஆக பணியாற்றினார். அவருடைய மறைவுக்கு பின்னர் அவருடைய மகன்களுக்கு அந்தப் பதவி அளிக்கப்படவில்லை. கிறிஸ்தவராக மதம் மாறிய குருவாப்பிள்ளை தன் பிள்ளைகளை ஞானஸ்நானம் கொடுக்காமல் வைத்திருந்தது பிரெஞ்சு கிறிஸ்தவச் சபையின் உயர்மட்டத்தினரின் எதிர்ப்பை ஈட்டியிருந்ததே காரணம்.

குருவாப் பிள்ளையின் மறைவுக்குப் பின் இரண்டு ஆண்டுக்காலம் திருவேங்கடம் பிள்ளை நடைமுறையில் துபாஷ் ஆக இருந்தார். அவருடைய மகனாகிய ஆனந்தரங்கம் பிள்ளை தனக்கு துபாஷ் பதவி கிடைக்குமென எண்ணினார். ஆனால் அப்பதைவி கனகராய முதலியார் என்னும் இன்னொரு அதிகாரிக்கு சென்றது. கனகராய முதலியார் ஆனந்தரங்கம் பிள்ளைக்கு போட்டியாளரும் எதிரியுமாக இருந்தவர். ஆகவே அனந்தரங்கம் பிள்ளை அடங்கியும் பணிந்தும் பணியாற்றினார். கனகராய முதலியார் ஆனந்தரங்கம் பிள்ளை பவள வணிகர்களிடமிருந்து பெற்ற கடனுக்கான வட்டியை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி கனகராய முதலியார் கவர்னரிடம் வழக்கை கொண்டுசென்றார். விசாரணையில் முதலில் அந்த வட்டியை வழங்கும்படி சொன்ன கவர்னர் டுமா பின்னர் ஆனந்தரங்கம் பிள்ளை தனக்கு கடும் இழப்பு ஏற்பட்டது என்று சொன்னதை ஏற்றுக்கொண்டார். நீண்டநாள் விசாரணைக்குப்பின் ஆனந்தரங்கம் பிள்ளைக்குச் சாதகமாக பிரெஞ்சு நிர்வாகக்குழு முடிவெடுத்தது. 1739 ல் கனகராய முதலியின் மகன் வில்வேந்திர முதலி 21 வயதில் மர்மமாக இறந்தார். அச்செய்தியை அறிந்த வில்வேந்திர முதலியின் அன்னையும் தற்கொலை செய்துகொண்டார்.

1741ல் கவர்னர் டூமா துணை கவர்னரிடம் பதவியை அளித்துவிட்டு பாண்டிச்சேரியில் இருந்து கிளம்பினார். 14 ஜனவரி1742 ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றில் முக்கியமானவரான டூப்ளே (Joseph François Dupleix) பாண்டிச்சேரிக்கு வந்து கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய கவர்னருக்கு மிக அணுக்கமானவராக ஆன ஆனந்தரங்கம் பிள்ளை 1743 முதல் நடைமுறையில் தலைமை துபாஷியாகவே பணியாற்றினார். ச் செயல்ப onwards, Ananda Ranga won the confidence of the Governor of Pondicherry and rose up the ranks. when the suburban villages of Pondicherry were leased for five years to Kumara Pillai, Vira Nayakkan, Chandramadi Pillai, and Ella Pillai, Ananda Ranga Pillai was able to offer surety for the renters for a period of five years. Nevertheless, when Kesava Aiyan died, Ananda Ranga was not able to prevent Kanakaraya Mudali from nominating his brother-in-law Gavinivasa Mudali as dubash in Kesava Aiyan's place. Kanakaraya Mudali secured his objective despite the vehement protests of Ananda Ranga Pillai. On 29 June 1744, the marriage of Ananda Ranga Pillai's daughter Papal was conducted in regal splendor. Ananda Ranga further solidified his position by mediating in disputes such as those between Prakasa Mudali and Tiruvengada Pillai, etc. Not to be left behind, on 30 November 1745, Ananda Ranga's great rival Kanakaraya Mudali constructed a church at Ozhukkarai and celebrated its consecration by providing a great feast. Ananda Ranga Pillai, however, reported heavy criticism from guests for inviting people of non-Christian faiths for the feast celebrating the consecration of a church.


1746 ல் கனகராய முதலியார் உயிர் துறந்தார். ஆனந்தரங்கம் பிள்ளை தலைமை துபாஷியாக பதவி ஏற்றார். ஆனந்தரங்கப்பிள்ளை பிரஞ்சிந்திய வர்த்தகக் கம்பெனியின் தலைமைத் துபாஷியாகவும், அரசின் தூதுவராகவும், அரசியல் ஆலோசகராகவும்,தலைமை வணிகராகவும், தமிழ் மக்களின் தலைவராகவும், தமிழ் மக்களின் நீதித்துறைத் தலைவராகவும், வரி வசூல் செய்யும் பொறுப்பதிகாரியாகவும், வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகியாகவும் விளங்கினார்.

துபாஷி

புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆட்சிக் காலத்தில் பிரெஞ்சு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்து அதிகாரிகளுக்குச் சொல்பவர்கள் துபாஷிகள் (த்வி பாஷி- இருமொழியாளர்) எனப்பட்டனர். பிரெஞ்சு ஆளுநருக்குத் துபாஷியாக இருந்தவர்கள் தலைமைத் துபாஷியாகவும், தமிழர்களின் தலைவராகவும் கருதப்பட்டனர். முதன்முதலாக புதுச்சேரிக்குத் துபாஷியாக வந்தவர் லசார் தெ மொத்தோ என்றழைக்கப்பட்ட பூந்தமல்லி தானப்ப முதலியார். அவருக்குப் பிறகு முத்தியப்ப முதலியார், நைனியப்பப்பிள்ளை, குருவப்பப்பிள்ளை, கனகராய முதலியார் எனப் பலரும் துபாஷியாக இருந்தனர். இவர்களுள் பெரும்பாலோர் முதலியார் இனத்தைச் சார்ந்தவர்கள். ஆகவே இது முதலியார் பதவி என அழைக்கப்பட்டது. ஆனந்தரங்கம் பிள்ளை முதலியார் அல்லாத முதல் துபாஷி.

அதிகாரத்தில்

1746-ல் துபாஷியான ஆனந்தரங்கம் பிள்ளை டூப்ளேக்கு நெருக்கமானவராக இருந்தார். அந்த நெருக்கமும் அவரது பதவியும் வணிக வெற்றியும் அவரை ஓர்அதிகார மையமாக வைத்திருந்தன.1749-ஆம் ஆண்டு முசபர்சங் என்ற இந்திய மன்னர் ஆனந்தரங்கத்துக்கு 3000 குதிரைகளை வழங்கி, அவருக்கு மன்சுபேதார் என்ற பட்டத்தையும் வழங்கினார். பின்பு செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாகவும், அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமனம் பெற்றார். ஆளுநருக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுவோர் தமிழ் மக்களின் தலைவராக அறிவிக்கப்படுவார். ஆளுநர் மாளிகைக்குள் மங்கல ஒலிகளுடன் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை இருந்தது. பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் உரிமையும் அவருக்கு இருந்தது

வீழ்ச்சி

கவர்னர் டூப்ளேயின் காலத்தில் ஆர்க்காடு நவாப் பதவிக்கு சந்தாசாஹிப், முகம்மது அலி ஆகியோருக்கு நடுவே கடும் போட்டி இருந்தது. டூப்ளே சந்தாசாஹிபையும் அன்றைய ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ராபர்ட் க்ளைவ் தலைமையில் முகம்மது அலியையும் ஆதரித்தார்கள். ஆங்கிலேயர்கள் வெற்றி அடைந்ததால் டூப்ளே ஃப்ரான்சுக்கு திரும்பினார். ஆளுநர் மாற்றத்துக்குப் பிறகு பிள்ளையின் தாக்கம் குறைந்தது. அவருடைய உடல் நலமும் குன்றியது. அதனால் 1756-ல் அவர் துபாஷ் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

தினப்படி சேதிக்குறிப்புeditedit source

தினப்படி சேதிக்குறிப்பு (ஆனந்தரங்கம்பிள்ளை) தமிழ் வரலாற்று ஆய்வின் முக்கியமான தரவுத்தொகுப்புகளில் ஒன்று. ஆனந்தரங்கம்பிள்ளை 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதினார். இது தமிழக வரலாற்றில் எழுதப்பட்ட முதல் நேரடியான முதல்காலப்பதிவு எனப்படுகிறது. தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்த லிகிதம் என்று அவற்றை குறிப்பிட்டிருந்தார். aகைப்பிரதியாக இருந்த அந்தக் குறிப்புகளை 1846-ல் பாண்டிச்சேரி மேயராக இருந்த கலுவா மொம்பிரான் கண்டெடுத்து ஃப்ரெஞ்சு மொழியில் மொழிபெயர்து அறிமுகம் செய்தார். விட்டுப்போன சில பகுதிகள் பிற்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. 1894-ல் ஜூலியன் வின்சென் முழுமையான குறிப்புகளை ஃப்ரெஞ்சு மொழியில் பதிப்பித்தார். 1896-ல் பிரடரிக் பிரைஸ் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது.

மறைவு

ஆனந்தரங்கம் பிள்ளை ஜனவரி 10, 1761 அன்று மறைந்தார்.

நூல் குறிப்புகள்

ஆனந்தரங்கம் குறித்து வெளிவந்துள்ள இலக்கியங்கள்

ஆனந்தரங்கம் இந்து மத அறிஞர்கள், தமிழ், தெலுங்குப் புலவர்கள் ஆகியோரின் புரவலர். நமசிவாயர், கஸ்தூரி ரங்கையார், தியாகராச தேசிகர் போன்ற தமிழ்ப் புலவர்களை இவர் ஆதரித்துள்ளதாகத் நாட்குறிப்புகள் சொல்கின்றன.

ஆனந்தரங்கம் பிள்ளை குறித்து இலக்கிய நூல்கள்
  • ஆனந்தரங்க கோவை
  • ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்
  • கள்வன் நொண்டிச் சிந்து
  • ஆனந்தரங்கம் பிள்ளைத் தமிழ்- அரிமதி தென்னகன்
  • ஆனந்தரங்கம் விஜயசம்பு - சீனிவாசர் (சம்ஸ்கிருதம்)
  • ஆனந்தரங்க ராட்சந்தமு - கஸ்தூரிரங்கக் கவி (தெலுங்கு)
  • மானுடம் வெல்லும் (நாவல்) -பிரபஞ்சன்
  • ,வானம் வசப்படும் ( நாவல்) பிரபஞ்சன்
ஆனந்தரங்கம் பிள்ளை பற்றிய ஆராய்ச்சி நூல்கள்
  • ஆலாலசுந்தரம், 'ஆனந்தரங்கப்பிள்ளை காலத் தமிழகம்' 1736 - 61, புதுச்சேரி.1999
  • ஆனந்தரங்கப்பிள்ளை, 'பிரத்தியேகமான ஆனந்தரங்கப்பிள்ளை தினநாட்குறிப்பு' (எட்டுத் தொகுதிகள்), புதுச்சேரி, 1998.
  • கார்ல் மார்க்ஸ், 'இந்தியாவைப் பற்றி', சென்னை, 1971,
  • கோபாலகிருஷ்ணன், ஓர்சே.மா., இரண்டாம் வீரநாயக்கர் நாட்குறிப்பு, 1778-1792, சென்னை,1992.
  • கோபாலகிருஷ்ணன், ஓர்சே.மா., ஆனந்தரெங்கப்பிள்ளை வி. நாட்குறிப்பு, 1778-1792, சென்னை, 2004.
  • சந்திரசேகரன், (பொதுப் பதிப்பாசிரியர்), 1955, ஆனந்தரங்கன் கோவை, சென்னை.
  • ஜெயசீல ஸ்டீபன், எஸ்., தமிழில் நாட்குறிப்புகள் (பதினெட்டாம் நூற்றாண்டு) செய்தி இதழ்களின் முன்னோடிகள், புதுச்சேரி, 1999,
  • ஜெயசீல ஸ்டீபன், எஸ்., (பதிப்பாசிரியர்) முத்து விஜய திருவேங்கடம்பிள்ளை நாட்குறிப்பு (1794 - 1796), புதுச்சேரி, 1999.
  • ஜெயசீல ஸ்டீபன், எஸ்., ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு (இரண்டு தொகுதிகள்), புதுச்சேரி, 2000.
  • Price, Frederick & H. Dodwell, The Private Diary of Ananda Ranga Pillai 12 vols, New Delhi,1985.
  • The Private Dairy of ANANDHA RANGA PILLAI Dubash to JOSEPH F. DUPLEIX.



உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.