being created

அமிர்தவசனி: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(Para Added)
Line 1: Line 1:
அமிர்தவசனி, தமிழில் வெளியான முதல் மகளிர் இதழ். 1865 முதல் சென்னையில் வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் தபிதா பாபு. தமிழின் முதல் பெண் இதழாசிரியர் இவரே! இது ஒரு கிறிஸ்தவ சமயம் சார்ந்த இதழாக இருந்தாலும் இந்துக்களின் வாழ்வியல் மற்றும் கொள்கைகள், வாழ்க்கை முறை சார்ந்த பல்வேறு செய்திகளை வெளியிட்டது.
அமிர்தவசனி, தமிழில் வெளியான முதல் மகளிர் இதழ். 1865 முதல் சென்னையில் வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் தபிதா பாபு. தமிழின் முதல் பெண் இதழாசிரியர் இவர்தான். இவ்விதழ் கிறிஸ்தவ சமயம் சார்ந்த இதழாக இருந்தாலும் இந்துக்களின் வாழ்வியல் மற்றும் கொள்கைகள், வாழ்க்கை முறை சார்ந்த பல்வேறு செய்திகளை வெளியிட்டது. பெண்கள் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது.
 
== பதிப்பு, வெளியீடு ==
'சுதேச கிறித்தவப் பெண்களுக்கு மதக்கொள்கையை எடுத்தோதும் ஒரு பத்திரிகை' என்ற குறிப்புடன், 1865-ல்  அமிர்தவசனி வெளிவந்தது. குழந்தை மண எதிர்ப்பு, பெண் கல்வி , பெண் ஒழுக்கம் முதலான கட்டுரைகளைத் தாங்கி வந்த இதழின் ஒரு பிரதி கூட தற்போது கிடைக்கவில்லை. அமிர்தவசனியின் சமகாலத்து இதழான ‘தத்துவபோதினி’ வெளியிட்ட மதிப்புரை, விளம்பரக் குறிப்புகள் மூலமும்,  தத்துவபோதினி மறுபிரசுரம் செய்த கட்டுரைகள் மூலமுமே அமிர்தவசனி இதழைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
 
கிறிஸ்தவ சமயத்தாரால் அச்சிடப்பட்ட இதழ் என்றாலும் இதில் பெரும்பான்மையான செய்திகள் இந்துப் பெண்களுக்காகவே எழுதப்பட்டதாய் அமைந்திருந்தன. பெண்களுக்காகப் பெண்களாலேயே எழுதப்பட்டு இவ்விதழ் வெளிவந்தது. 
 
== இதழின் நோக்கம் ==
இவ்விதழின் நோக்கமாக தத்துவபோதினியில் அளித்த விளம்பரக் குறிப்பில், “ அமிர்தவசனி என்னும் பெயருடைய சிறுபத்திரிகை யொன்றைப் பிரதி மாதம் இரண்டாவது சனி வாரந்தோறும் நாங்கள் பிரசுரஞ்செய்ய உத்தேசித்திருக்கின்றோம்.
 
இச்சென்னையம்பதிலுள்ள பற்பல பாடசாலைகளில் கல்வி பயின்றவர்களும் , தற்காலத்தில் கல்வி கற்பவர்களாகிய எம்போலிய ஹிந்து ஸ்திரீகளுக்கு நல்லறிவு, நல்லொழுக்கங்களை விர்த்தி செய்விப்பதே இப்பத்திரிகையின் கருத்தாம் .
 
சமயதருமம், ஆசாரதருமம், இலக்கிய இலக்கணங்கள், ககோள போகோளங்கள், கணிதம், ஜெந்து சுபாவம், பாக சாஸ்திரம், பலவகைப்பட்ட தையல்கள், விடுகதைகள், விநோத கதைகள், பழமொழிகள் முதலிய பல பிரயோஜனமான விஷயங்களை எங்களாலியன்ற வரையில் இப்பத்திரிகையின் கண்ணே இயற்றுவிக்க முயலுவோம். எங்கள் அபிப்ராயங்களை விளக்கத்தக்க சில உசிதமான சித்திரப் படங்களையும் இதிற் காணலாம்” என்ற குறிப்பு உள்ளது.
 
இவ்விதழின் தொடர்பு முகவரியாக, ‘ப்ரீ சர்ச்சு மிஷன் பாலிகாபாடசாலை , பூக்கடை வீதி, சென்னை’ என்ற முகவரியும்  ‘ப்ரீ சர்ச்சு மிஷன் பாலிகா பாடசாலை.  ஆசாரப்பன் வீதி, சென்னை’ என்ற முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது.
 
தனிப்பிரதியின் விலை அரை அணா. வருஷத்திற்கு அணா 5.
 
== உள்ளடக்கம் ==

பதிப்பு, வெளியீடு

Revision as of 23:10, 31 October 2022

இதழின் நோக்கம்

உள்ளடக்கம்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.