being created

கண்ணதாசன் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Image Added)
Line 1: Line 1:
[[File:Kannadasan Magazine .jpg|thumb|கண்ணதாசன் இதழ் (படம் நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்)]]
[[File:Kannadasan Magazine .jpg|thumb|கண்ணதாசன் இதழ் (படம் நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்)]]
[[File:Kannadasan Magazine 1978.jpg|thumb|கண்ணதாசன் இதழ் - 1973 (படம் நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்)]]
[[File:Kannadasan Magazine 1978.jpg|thumb|கண்ணதாசன் இதழ் - 1973 (படம் நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்)]]
[[File:Kannadasan Magazine Andu Malar.jpg|thumb|கண்ணதாசன் ஆண்டு மலர்]]
தென்றல், தென்றல் திரை, முல்லை ஆகிய இதழ்களின் வரிசையில் கவிஞர் கண்ணதாசன், தன் பெயரிலேயே ஆரம்பித்து நடத்திய இதழ் ‘கண்ணதாசன்.’ கவிஞர் கண்ணதாசனின் மனம் கவந்த இதழாக இது இருந்தது.  ஆறு வருடங்கள் வெளிவந்த இவ்விதழ், பொருளாதாரப் பிரச்சனையால் நின்றுபோனது.  

== பதிப்பு, வெளியீடு ==
== பதிப்பு, வெளியீடு ==

Revision as of 16:44, 18 October 2022

கண்ணதாசன் இதழ் (படம் நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்)
கண்ணதாசன் இதழ் - 1973 (படம் நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்)
கண்ணதாசன் ஆண்டு மலர்

தென்றல், தென்றல் திரை, முல்லை ஆகிய இதழ்களின் வரிசையில் கவிஞர் கண்ணதாசன், தன் பெயரிலேயே ஆரம்பித்து நடத்திய இதழ் ‘கண்ணதாசன்.’ கவிஞர் கண்ணதாசனின் மனம் கவந்த இதழாக இது இருந்தது.  ஆறு வருடங்கள் வெளிவந்த இவ்விதழ், பொருளாதாரப் பிரச்சனையால் நின்றுபோனது.

பதிப்பு, வெளியீடு

தென்றல், தென்றல் திரை, முல்லை எனப் பல இதழ்களைத் தொடங்கி நடத்திய அனுபவம் மிக்கவர் கவிஞர் கண்ணதாசன். அவர் தனது தனிப்பட்ட கருத்துக்களை, சிந்தனைகளை வெளியிடுவதற்காக, ‘கண்ணதாசன்’ என்னும் தன் பெயரிலேயே இதழ் ஒன்றை ஆரம்பித்தார். ஜனவரி 1, 1968 முதல் வெளிவந்த இவ்விதழின் பக்கங்கள் 160. விலை ரூபாய் ஒன்று. சில மாதங்களுக்குப் பின் ஒன்றரை ரூபாய்க்கு இவ்விதழ் விற்பனையானது. ஆண்டு சந்தா ரூபாய் 6.00/- அப்போது குமுதம் நான்கணா விலைக்கும், ஆனந்த விகடன் முப்பது பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்காலகட்டத்தில் மிக அதிகமான விலையில் வந்த ஒரே இலக்கிய இதழ் கண்ணதாசன் தான்.

இராம. கண்ணப்பன் இவ்விதழின் இணை ஆசிரியராக இருந்தார். ஓவியர் அமுதோனின் அழகான ஓவியங்களுடன் இவ்விதழ் வெளிவந்தது

உள்ளடக்கம்

கவிஞர் முதல் இதழில்,

போற்றுபவர் போற்றட்டும் ; புழுதிவாரித்

தூற்றுபவர் தூற்றட்டும் ; தொடர்ந்து செல்வேன்

ஏற்றதொரு கருத்தை என ( து ) உள்ளம் என்றால்

எடுத்துரைப்பேன் ; எவர்வரினும் நில்லேன் ; அஞ்சேன்

என்றும்,

“கவிதையிலோ, காவியத்திலோ புதிய மரபுகள் அல்லது புதிய உத்திகள் எவற்றையும்  நான் கைக்கொள்ளவில்லை . இரண்டு யுகங்களுக்கு நடுவில் நான்  நிற்கிறேன் . கடந்த யுகத்தைப் பிரதிபலிக்கிறேன் . வரப்போகும்  யுகத்தைத் துவக்கி வைக்கிறேன் . எத்தகைய விமர்சனத்திற்கும் நான்  எப்போதும் தயாராக இருக்கிறேன் . கூடிப் புகர்வோரைப் போலவே குற்றம் சொல்வோரையும் நான் நேசிக்கிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.