under review

வ. ஜெயதேவன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Normalized selected wikitext line breaks;)
 
Line 14: Line 14:
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் கல்விக்குழு சார்பில் மொரீசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தார். மலேசியாவிற்கும் கல்விப் பயணமாகச் சென்றுவந்தார்.  
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் கல்விக்குழு சார்பில் மொரீசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தார். மலேசியாவிற்கும் கல்விப் பயணமாகச் சென்றுவந்தார்.  


==பொறுப்புகள்==  
==பொறுப்புகள்==
*சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையின் தகைசால் பேராசிரியராக இருந்தார்.
*சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையின் தகைசால் பேராசிரியராக இருந்தார்.
*பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்குப் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும், கல்விக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
*பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்குப் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும், கல்விக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

Latest revision as of 23:58, 11 October 2026

வ. ஜெயதேவன்

வ. ஜெயதேவன் (வ. செயதேவன்) (பிறப்பு: மே 10, 1947- 5 பிரவரி 2026) தமிழ்ப் பேராசிரியர், கல்வியாளர். தமிழ் அகராதித்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தார். தமிழ்ப் பேரகராதியின் மறுபதிப்பு முதன்மைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தார். தமிழாய்வுகளிலும், தமிழ்ப் பயிற்றுவித்தலிலும் கணினித் தொழில்நுட்பம், இணையத்தைப் பயன்படுத்தும் முயற்சிகளில் இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

வ.ஜெயதேவன் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம் உப்பிலியபுரத்தில் வரதாரசன், சரோசா இணையருக்கு மே 10, 1947-ல் பிறந்தார். மாராடி என்ற சிற்றூரில் தொடக்கப் பள்ளிக் கல்வி பயின்றார். திருச்சிராப்பள்ளி இடையாற்றுமங்கலம் அரங்கசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளியில் (ERI) உயர்நிலைக் கல்வி பயின்றார். திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் புகுமுக வகுப்பைப் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் - தாவரவியலில் (B.Sc.Botany) இளங்கலைப்பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1970-ல் மொழியியல் துறையில் சான்றிதழ் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் தமிழ் பயிலும்பொழுது அறிஞர்கள் இராமசாமியார், வ.சுப.மாணிக்கம், க.வெள்ளைவாரணனார், சுவாமி ஐயா, க. திருநாவுக்கரசு ஆகியோர் தமிழ்ப் பேராசிரியர்களாக இருந்தனர்.

1979-ல் முனைவர் சஞ்சீவியின் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிந்து முனைவர் சி. பாலசுப்பிரமணியனின் நெறிப்படுத்தலில் ஆய்வு செய்து பட்டம் பெற்றார். இவரின் முனைவர் பட்ட ஆய்வேடு "தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு" என்ற நூலாக வெளிவந்தது.

ஆசிரியப்பணி

வ. ஜெயதேவன் சென்னை விவேகானந்தர் கல்லூரியில் 1971-ல் உரையாளராகத் தமிழ்ப்பணியைத் தொடங்கினார். 1973 முதல் 1989 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் இருந்தார். 1984-1989 காலகட்டத்தில் இணைப்பேராசிரியராகப் பணி உயர்வு பெற்றார். தமிழ்ப் பேராசிரியராக 1990-ல் பணியுயர்வு பெற்றார். 1997 முதல் தமிழ் மொழித்துறையின் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

அகராதி, இலக்கணம், பாட்டியல், நாட்டுப்புறவியல், புதினம், பாடல், மொழியியல் சார்ந்த பலதுறைகளில் முப்பதுக்கும் அதிகமான மாணவர்கள் இவரின் நெறியாள்கையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவ்வகையில் இதுவரை . பேராசிரியர்கள் கேசவன், சற்குணம், சத்தியசீலன், கொழந்தசாமி, கோதில்மொழியன், வேல்.கார்த்திகேயன், ஞானகுரு, திரைப்பா ஆசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் இவர்களின் குறிப்பிடத்தக்க மாணவர்களுள் சிலர். எண்பதுக்கும் மேற்பட்ட இளம் முனைவர் பட்டஆய்வு மாணவர்களுக்கும் நெறியாளராக இருந்து நெறிப்படுத்தியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் கல்விக்குழு சார்பில் மொரீசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தார். மலேசியாவிற்கும் கல்விப் பயணமாகச் சென்றுவந்தார்.

பொறுப்புகள்

  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையின் தகைசால் பேராசிரியராக இருந்தார்.
  • பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்குப் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும், கல்விக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
  • இந்திய அரசு, தமிழக அரசு அமைத்துள்ள பல கல்வி சார்ந்த குழுக்களில் உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்தார். இந்திய அரசின் நடுவண் தேர்வாணையம் (UPSC), பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு (UGC),தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NCRT) தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆகியவற்றில் உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.
  • தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்வளர்ச்சிப் பிரிவு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.
  • தமிழக அரசின் சிறந்த நூல்கள் பரிசுக்குழு, பிர்லா அறநிலை, சாகித்ய அகாதெமி உள்ளிட்டவற்றில் உறுப்பினராக இருந்தார்.
  • தமிழக, இந்திய, உலக அளவிலான பல பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வு, முதுமுனைவர் பட்ட ஆய்வுகளை மதிப்பிடும் அறிஞர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

இதழியல்

வ. ஜெயதேவன் தமிழாய்வு, தமிழ்ச்சோலை, நோக்கு உள்ளிட்ட ஆய்வு இதழ்களின் ஆசிரியர் குழுவில் பலநிலைகளில் பணிபுரிந்தார்.

பதிப்பியல்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறை இயக்குரநராகப் பணிபுரிந்தபொழுது (1988-99) பதிப்புத்துறையை மக்களிடம் கொண்டு சேர்த்துத் தரமான பல்கலைக்கழக வெளியீடுகள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்தார். தொல்காப்பிய அகராதி, சித்திரக்கவி களஞ்சியம் ஆகியவை இவர் பதிப்பித்த நூல்கள்.

அகராதியியல்

வ. செயதேவனின் ஆய்வுப் புலமாக அகராதியியல், தமிழ் பயிற்றுவித்தல், மொழியியல், பதிப்புத்துறை, இலக்கியத் திறனாய்வு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். உலக அளவில், தேசிய அளவில் நடைபெற்ற மாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரைகள் படித்தார். தமிழ்ப் பேரகராதியின் மறுபதிப்பு முதன்மைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தார்.

இந்திய அளவிலும் உலக அளவிலும் அகராதியியல் சார்ந்த அமைப்புகள், இதழ்களுக்கு அறிவுரைஞராகவும் உள்ளார். அகராதியியல் துறைசார்ந்த பல பயிலரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வறிஞராக உரையாற்றினார்.

தமிழ் தொடர்பான செய்திகளைக் கொண்டிருக்கும் கலைக்களஞ்சியங்கள் பலவற்றிற்குக் கட்டுரை எழுதித் தமிழிலும் ஆங்கிலத்திலுமான ஆக்கங்களை வழங்கியவர். பல்வேறு பயிலரங்குகளில் கலந்துகொண்டு மொழியியல், இலக்கணம், அகராதியியல் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி பெற்றுள்ளார்.

எஸ். வையாபுரிப் பிள்ளை தலைமையில் உருவான தமிழ்ப்பேரகராதியின் மறுபதிப்புப்பணியில் முதன்மைப் பதிப்பாசிரியராக சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். இதற்கெனப் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவிலிருந்து 23.51 இலட்சம் நிதியும், தமிழக அரசிடமிருந்து பத்து இலட்சம் நிதியும் பெற்று மறுபதிப்புப் பணியில் ஈடுபட்டார்

மறைவு

ஜெயதேவன் 5 பிப்ரவரி 2026 அன்று சென்னை பெருங்குடியில் தன் இல்லத்தில் காலமானார்.

இலக்கிய இடம்

ஜெயதேவன் தமிழ் அகராதியியல் அறிஞர். தமிழ் அகராதிப்பணிகளிலும் கலைக்களஞ்சியப் பணிகளிலும் பங்களிப்பாற்றியவர். கல்வியாளராகவும் குறிப்பிடத்தக்கவர்.

நூல் பட்டியல்

  • தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு
பதிப்பித்தவை
  • தொல்காப்பிய அகராதி
  • சித்திரக்கவி களஞ்சியம்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Feb-2026, 12:18:29 IST