under review

மெய்கண்ட சந்தானம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
Tag: Reverted
Line 2: Line 2:
== வரலாறு ==
== வரலாறு ==
பொ.யு. 8-ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் சைவ மரபில் ஏகான்மவாதம் என்னும் கொள்கை ஓங்கியது. வேதாந்தத்திற்கு அணுக்கமானது இது. இது சிவனுடன் அடியார் ஒன்றென்றாவதை முன்வைப்பது. சிவோஹம் என்னும் மந்திரம் இவர்களுக்குரியது. இது சைவ தத்துவத்திற்கு எதிரானது என்ற தரப்பை முன்வைத்தவர் பொ.யு. 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[மெய்கண்டார்]]. பசு, பதி, பாசம் என்னும் மூன்றுதத்துவக் கொள்கையை முன்வைக்கும் [[சிவஞானபோதம்]] என்னும் நூல் இவரால் இயற்றப்பட்டது.  

மெய்கண்டாரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர் என்றும் அவர்களில் அருணந்தி சிவாச்சாரியார் முதன்மையானவர் என்றும் சொல்லப்படுகிறது. இவரின் மாணவர் மறைஞான சம்பந்தர். மறைஞான சம்பந்தரின் மாணவர் உமாபதி சிவாச்சாரியார். உமாபதி சிவாச்சாரியாரின் வழிவந்த அருள்நமச்சிவாயரின் மாணாக்கரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமசிவாயமூர்த்திகள் எனப்படும் பஞ்சாக்கர தேசிகர். இவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாக விளங்கியவர் ஆதிசிவப்பிரகாசர். மெய்கண்ட சந்தானம் [[திருக்கயிலாய பரம்பரை]] என்றும் சொல்லப்படுகிறது.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 14:49, 3 July 2023

மெய்கண்ட சந்தானம் (பொ.யு. 13 முதல்) சைவ சமயத்தின் மெய்கண்டார் மரபு. மெய்கண்டாரின் மைந்தர்கள் என்னும் பொருளில் இப்பெயர் வழங்குகிறது. மெய்கண்டார் மரபில் வந்த சைவ மடாதிபதிகள் இப்படி அழைக்கப்படுகிறார்கள். திருக்கையிலாய பரம்பரை என்றும் கூறுவதுண்டு.

வரலாறு

பொ.யு. 8-ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் சைவ மரபில் ஏகான்மவாதம் என்னும் கொள்கை ஓங்கியது. வேதாந்தத்திற்கு அணுக்கமானது இது. இது சிவனுடன் அடியார் ஒன்றென்றாவதை முன்வைப்பது. சிவோஹம் என்னும் மந்திரம் இவர்களுக்குரியது. இது சைவ தத்துவத்திற்கு எதிரானது என்ற தரப்பை முன்வைத்தவர் பொ.யு. 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார். பசு, பதி, பாசம் என்னும் மூன்றுதத்துவக் கொள்கையை முன்வைக்கும் சிவஞானபோதம் என்னும் நூல் இவரால் இயற்றப்பட்டது. மெய்கண்டாரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர் என்றும் அவர்களில் அருணந்தி சிவாச்சாரியார் முதன்மையானவர் என்றும் சொல்லப்படுகிறது. இவரின் மாணவர் மறைஞான சம்பந்தர். மறைஞான சம்பந்தரின் மாணவர் உமாபதி சிவாச்சாரியார். உமாபதி சிவாச்சாரியாரின் வழிவந்த அருள்நமச்சிவாயரின் மாணாக்கரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமசிவாயமூர்த்திகள் எனப்படும் பஞ்சாக்கர தேசிகர். இவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாக விளங்கியவர் ஆதிசிவப்பிரகாசர். மெய்கண்ட சந்தானம் திருக்கயிலாய பரம்பரை என்றும் சொல்லப்படுகிறது.

உசாத்துணை

✅Finalised Page