தரவுக் கொச்சகக் கலிப்பா: Difference between revisions

From Tamil Wiki
Removed {{OtherUses-ta|TitleSection=கலிப்பா|DisambPageTitle=கலிப்பா (பெயர் பட்டியல்)}}
No edit summary
 
Line 1: Line 1:
{{OtherUses-ta|TitleSection=கொச்சகக்|DisambPageTitle=[[கொச்சகக் (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=கொச்சகக்|DisambPageTitle=[[கொச்சகக் (பெயர் பட்டியல்)]]}}
ஒரு தரவு மட்டும் வந்தும் அல்லது தரவோடு தனிச் சொல்லும், சுரிதகமும் பெற்று முடிவது தரவு கொச்சகக் கலிப்பா.  
ஒரு தரவு மட்டும் வந்தும் அல்லது தரவோடு தனிச் சொல்லும், சுரிதகமும் பெற்று முடிவது தரவு கொச்சகக் கலிப்பா.  

Latest revision as of 15:36, 12 October 2026

கொச்சகக் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கொச்சகக் (பெயர் பட்டியல்)

ஒரு தரவு மட்டும் வந்தும் அல்லது தரவோடு தனிச் சொல்லும், சுரிதகமும் பெற்று முடிவது தரவு கொச்சகக் கலிப்பா.

தரவு கொச்சகக் கலிப்பா இலக்கணம்

  • கலிப்பாவின் பொதுவான இலக்கணம் பெற்று வரும்.
  • ஒரு தரவு மட்டும் வரலாம்.
  • தரவோடு, தனிச்சொல், சுரிதகமும் வரலாம்.
  • தரவு கொச்சகக் கலிப்பாவின் குறைந்த பட்ச அடிகள் நான்கு. இதில் தாழிசை இடம் பெறுவதில்லை.

உதாரணப் பாடல் (1)

(தரவு)

முருகவிழ்தா மரைமலர்மேல் முடிஇமையோர் புடைவரவே
வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்
இருவினைபோய் விழமுனியா எதிரியகா தியைஅரியா
நிருமலராய் அருவினராய் நிலவுவர்சோ தியினிடையே

- இது நான்கடிகளில், ஒரே ஒரு தரவு மட்டும் வந்த தரவுக் கொச்சகக் கலிப்பா.

உதாரணப் பாடல் (2)

(தரவு)

குடநிலைத் தண்புறவிற் கோவலர் எடுத்தார்ப்பத்
தடநிலைப் பெருந்தொழுவில் தகையேறு மரம்பாய்ந்து
வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தேறப்போய்க்
கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப

(தனிச்சொல்)

என ஆங்கு

(சுரிதகம்)

ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும்
கானுடைத் தவர்தேர் சென்ற வாறே

- இது நான்கடிகளில் தரவு, தனிச்சொல், ஆசிரியச் சுரிதகம் பெற்று முடியும் தரவுக் கொச்சகக் கலிப்பா.

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Aug-2023, 12:08:39 IST