நெய்தல் படைப்பாளிகள் பட்டியல்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 37: Line 37:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்: ஜஸ்டின் திவாகர்
* தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்: ஜஸ்டின் திவாகர்
* மீன்குருதி படிந்த வரலாறு: ஜெயமோகன்

Revision as of 13:37, 20 September 2022

கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தல் நிலத்திலிருந்து உருவாகி வந்த எழுத்தாளர்களின் வழி அம்மக்களின் வாழ்வியல், வரலாறு, அரசியல், பொருளாதார, சமூக சிக்கல்கள் புலப்படுகின்றன.

வரலாறு

தமிழகத்திற்கு அச்சுத்துறையை முதலில் அறிமுகப்படுத்தியது கிறிஸ்தவம். தமிழ் மொழியில் முதன் முறையாக 1577-ல் ‘கிரிசித்தியானி (கிறிஸ்தவ) வேதோபதேசம்’ என்ற நூலும் 1579-ல் ‘கிறிஸ்துவ வணக்கம்’ என்னும் உரைநடை நூலும் ஹென்ரிக்கஸ் என்ற யேசு சபைப் பாதிரியாரால் அச்சிடப்பட்டதாகவும், சுயமாக அச்செழுத்துக்களை இஞ்ஞாசி ஆச்சாமணி என்பவர் உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகக் கடற்கரையில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னைக்காயல் என்ற மீனவக் கிராமத்தில் 16ஆம் நூற்றாண்டில் அச்சுப்பொறி இயந்திரத்தை நிறுவினர். இதற்கு அங்கு வாழ்ந்த மீனவர்களின் பொருட்பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. அவ்வாறு அச்சிட்டவைகளில் பல புத்தகப் பிரதிகளை மீனவர்களின் பங்கேற்பிற்கு பிரதிபலனாகக் கொடுத்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன.

நெய்தல் படைப்பாளிகள் பட்டியல்

  • வலம்புரி ஜான் (உவரி)
  • ஜோ டி குருஸ் (உவரி)
  • வறீதையா கான்ஸ்தந்தின் (பள்ளம் துறை)
  • ஆ.தாமஸ் (புத்தன்துறை)
  • சி.பெர்லின்(குறும்பனை)
  • அரிமா வளவன் (உவரி)
  • தொ. சூசைமிக்கேல் (பள்ளம்துறை)
  • மரியஜான் காலிங்கராயர் (கோவளம்)
  • ம.சேவியர் (உவரி)
  • ஜோ.இவாரியஸ் பர்னாண்டோ (இடிந்தகரை)
  • ஜெயசீலன் கர்வாலோ (வேம்பார்)
  • ஜோ.தமிழ்ச்செல்வன் (மண்டைக்காடு புதூர்)
  • பீட்டர்ராயன் (இடிந்தகரை)
  • எஸ். எ.ஆர். பரதராஜ்(கன்னியாகுமரி)
  • பா.மரியதாசன் (ஏர்வாடி)
  • இதயநேசன்(மூக்கையூர்)
  • அ.அருள்தாசன் (பள்ளம்)
  • அருள் எழிலன்(புத்தன் துறை)
  • நேவிஸ் விக்டோரியா(வேம்பார்)
  • ஜெபமாலை ஆராச்சி(கன்னியாகுமரி)
  • ஜஸ்டின் திவாகர்(பொழிக்கரை)
  • ஜெரால்டு ராயன்(வீரபாண்டியப் பட்டணம்)
  • அலங்காரப் பரதர்(தூத்துக்குடி)
  • சிறில் அலெக்ஸ்(முட்டம்)
  • கபிரியேல் மெல்கியாஸ்(பள்ளம்)
  • எஸ். டெக்லா (கூட்டப்புளி)
  • ஜவகர்ஜி (நாகர்கோவில்)
  • பீட்டர் ராயன்(இடிந்தகரை)
  • டி அருள் எழிலன்(புத்தன்துறை)
  • ஜே.பி. வெனிஸ் (கோவளம்)

உசாத்துணை

  • தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்: ஜஸ்டின் திவாகர்
  • மீன்குருதி படிந்த வரலாறு: ஜெயமோகன்