அரசவாகை: Difference between revisions
(Corrected typo errors;) |
(Corrected typo errors;) |
||
| Line 4: | Line 4: | ||
வாகைத் திணை வெற்றியைக் குறிக்கிறது. வாகைத் திணையின் 32 துறைகளில் ஒன்று அரசவாகை. போரில் வெற்றி பெற்ற அரசனின் சிறப்பைக் கூறுதல் என்பது இதன் பொருள். அரசனது செங்கோன்மையை வீரர்களும் பிறரும் பாராட்டுவதைக் கொளு,<poem>பகலன்ன வாய்மொழி | வாகைத் திணை வெற்றியைக் குறிக்கிறது. வாகைத் திணையின் 32 துறைகளில் ஒன்று அரசவாகை. போரில் வெற்றி பெற்ற அரசனின் சிறப்பைக் கூறுதல் என்பது இதன் பொருள். அரசனது செங்கோன்மையை வீரர்களும் பிறரும் பாராட்டுவதைக் கொளு,<poem>பகலன்ன வாய்மொழி | ||
இகல்வேந்தன் இயல்புரைத்தன்று. - (கொளு-3)</poem> | இகல்வேந்தன் இயல்புரைத்தன்று. - (கொளு-3)</poem> | ||
எனக் காட்டுகிறது. | எனக் காட்டுகிறது. 'நுகத்தடியின் பகலாணி போன்ற நடுநிலைமையான சொல்லைக் கொண்டவனும் பகையை வென்றவனுமாகிய அரசனின் தன்மையைச் சொல்லுதல்' என்பது பொருள். | ||
வெண்பா, அரசனின் தகுதிகளை எடுத்துக் காட்டுகிறது.<poem>காவல் அமைந்தான் கடலுலகம் காவலால் | வெண்பா, அரசனின் தகுதிகளை எடுத்துக் காட்டுகிறது.<poem>காவல் அமைந்தான் கடலுலகம் காவலால் | ||
ஓவல் அறியாது உயிர்க்குவகை - மேவருஞ்சீர் | ஓவல் அறியாது உயிர்க்குவகை - மேவருஞ்சீர் | ||
ஐந்தொழில் நான்மறை முத்தீ இருபிறப்பு | ஐந்தொழில் நான்மறை முத்தீ இருபிறப்பு | ||
வெந்திறல் தண்ணளிஎம் வேந்து</poem> | வெந்திறல் தண்ணளிஎம் வேந்து</poem>'ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிலுதல், பல்லுயிர் ஓம்புதல் என்னும் ஐந்து வகைத் தொழில்களையும் குறைவின்றிச் செய்பவன் எம் அரசன். நான்கு மறைகளைக் கற்றவன்; முத்தீ வளர்த்து வழிபடுபவன்; பூணூல் அணிதலின் முன், அணிந்த பின் என இரு பிறப்பினை உடையவன்; கருணை மிக்கவன். அவன் நடுவு நிலைமை தவறாது காத்தலால் நாட்டு உயிர்கள் மகிழ்வோடிருகின்றன'. இவ்வாறு வெற்றி பெற்ற அரசனைப் பாராட்டுவர். | ||
[[தொல்காப்பியம்]] இதனை | [[தொல்காப்பியம்]] இதனை 'ஐவகை மரபின் அரசர் பக்கம்' எனக் குறிப்பிடுகிறது. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை என [[இளம்பூரணர்]] இதற்கு விளக்கம் அளிக்கிறார் | ||
==புறநானூற்றில் அரசவாகை== | ==புறநானூற்றில் அரசவாகை== | ||
Latest revision as of 17:39, 22 November 2025
அரசவாகை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. அரசனது இயல்பையோ, சிறப்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரச வாகை .
விளக்கம்
வாகைத் திணை வெற்றியைக் குறிக்கிறது. வாகைத் திணையின் 32 துறைகளில் ஒன்று அரசவாகை. போரில் வெற்றி பெற்ற அரசனின் சிறப்பைக் கூறுதல் என்பது இதன் பொருள். அரசனது செங்கோன்மையை வீரர்களும் பிறரும் பாராட்டுவதைக் கொளு,
பகலன்ன வாய்மொழி
இகல்வேந்தன் இயல்புரைத்தன்று. - (கொளு-3)
எனக் காட்டுகிறது. 'நுகத்தடியின் பகலாணி போன்ற நடுநிலைமையான சொல்லைக் கொண்டவனும் பகையை வென்றவனுமாகிய அரசனின் தன்மையைச் சொல்லுதல்' என்பது பொருள்.
வெண்பா, அரசனின் தகுதிகளை எடுத்துக் காட்டுகிறது.
காவல் அமைந்தான் கடலுலகம் காவலால்
ஓவல் அறியாது உயிர்க்குவகை - மேவருஞ்சீர்
ஐந்தொழில் நான்மறை முத்தீ இருபிறப்பு
வெந்திறல் தண்ணளிஎம் வேந்து
'ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிலுதல், பல்லுயிர் ஓம்புதல் என்னும் ஐந்து வகைத் தொழில்களையும் குறைவின்றிச் செய்பவன் எம் அரசன். நான்கு மறைகளைக் கற்றவன்; முத்தீ வளர்த்து வழிபடுபவன்; பூணூல் அணிதலின் முன், அணிந்த பின் என இரு பிறப்பினை உடையவன்; கருணை மிக்கவன். அவன் நடுவு நிலைமை தவறாது காத்தலால் நாட்டு உயிர்கள் மகிழ்வோடிருகின்றன'. இவ்வாறு வெற்றி பெற்ற அரசனைப் பாராட்டுவர்.
தொல்காப்பியம் இதனை 'ஐவகை மரபின் அரசர் பக்கம்' எனக் குறிப்பிடுகிறது. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை என இளம்பூரணர் இதற்கு விளக்கம் அளிக்கிறார்
புறநானூற்றில் அரசவாகை
- இடைக்குன்றூர்கிழார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றி நான்கு பாடல்களும் (76-79),
- குறுக்கோழியூர்க்கிழார் மாந்தரஞ்சேரலிரும்பொறையைப் பற்றி இரண்டு பாடல்கள் (20,22),
- பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றி ஒரு பாடல்(17)
- ஐயூர் மூலங்கிழார் உக்கிரப் பெருவழுதியைப் பற்றி ஒரு பாடல்(21),
- தாமப்பல் கண்ணனார் சோழன் நலங்கிள்ளி பற்றி ஒரு பாடல்(43),
- வெண்ணிக்குயத்தியார் கரிகால் பெருவளத்தான் பற்றி ஒரு பாடல்(66)
- பொருந்தில் இளங்கீரனார் மாந்தரஞ்சேரலிரும்பொறை பற்றி ஒரு பாடல்(53)
- ஔவையார் அதியமான் நெடுமானஞ்சி பற்றி ஆறு பாடல்களும் (93,94,98-100,104)
- குடபுலவியனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பற்றி ஒரு பாடல்(19)
- கல்லாடனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பற்றி இரண்டு பாடல்களும் (23,25)
- கோவூர்கிழார் சோழன் நலங்கிள்ளி பற்றி மூன்று பாடல்களும் (31,33,44)
- மாரோக்கத்து நப்பசலையார் கருவூர் முற்றியிருந்தான் பற்றி ஒரு பாடல்(42) மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன் பற்றி ஒரு பாடல்(174)
- ஐயூர் முடவனார் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழி பற்றி ஒரு பாடல்(51)
- மருதனிளநாகனார் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி பற்றி ஒரு பாடல்(52)
- பொருந்திலிளங்கீரனார் மாந்தரஞ்சேரல் மாடலன் மதுரைக்குமரனார் சேரமான்குட்டுவன் கோதை பற்றி ஒரு பாடல்(54),
- சோழன் இலவந்திசைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி பற்றி ஒரு பாடல்(61) ஏனாதி திருக்கிள்ளி பற்றி ஒரு பாடல்(167)
- சாத்தந்தையார் சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி பற்றி இரண்டு பாடல்களும் (81,82)
- வடவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் வன்மலையன் பற்றி ஒரு பாடல்(125)
- கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார் பிட்டங்கொற்றன் பற்றி ஒரு பாடல்(68)
- மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பற்றி ஒரு பாடல்(26)
ஆகப் பதினெட்டு அரசர்களைப் பற்றிப் பதினெட்டுப் புலவர்கள் பாடிய 36 அரசவாகைப் பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன. அரசவாகைப் பாடல்களில் வீரமே பெரிதும் பாடப்படுகிறது.
எடுத்துக்காட்டு
புறநானூறு 31
- பாடியவர் : கோவூர் கிழார். பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
- திணை :வாகை. துறை: அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
இரு குடை பின்பட ஓங்கி ஒருகுடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,
நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்
பாசறை யல்லது நீயல் லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடிமதில் பாயும்நின் களிறுஅடங் கலவே;
போர்எனில் புகலும் புனைகழல் மறவர்
காடிடைக் கிடந்த நாடுநனி சேய;
செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்
குணகடல் பின்ன தாகக் குடகடல்
வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப
வலமுறை வருதலும் உண்டுஎன்று அலமந்து
நெஞ்சுநடுங்கு அவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே
பகைவரை வென்று ஆரவாரிப்பதைப் பற்றி இப்பாடலில் கூறப்பட்டிருப்பதால், இப்பாடல் வாகைத் திணையில் அடங்கும். சோழன் நலங்கிள்ளி, போரை விரும்பிப் பாசறையில் இருப்பதாகக் கூறியது அவனது இயல்பைக் கூறியதாகும். ஆகவே, இப்பாடல் அரசவாகைத் துறையைச் சார்ந்தது என்று கருதப்படுகிறது. மற்றும், பகைவர்களின் மதில்களை நலங்கிள்ளியின் யானைகள் குத்தித் தாக்கியதையும், அவன் படை வீரர்கள் எப்பொழுதும் போரை விரும்புவதையும், வட நாட்டு மன்னர்கள் நலங்கிள்ளியின் வருகையை நினைத்து நடுங்கி உறக்கமின்றி இருப்பதையும் கூறியிருப்பது பகைவரின் நாட்டை அழிப்பதைக் குறிப்பதால், இப்பாடல் மழபுல வஞ்சித் துறையைச் சார்ந்ததாகவும் கருதப்படுகிறது.
புறநானூறு 66
- பாடியவர்: வெண்ணிக்குயத்தியார் பாடப்பட்டோன் : கரிகால் வளவன்
- திணை : வாகை துறை: அரசவாகை
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால்வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே?
திணை வாகை; துறை அரச வாகை.
கரிகால் வளவனின் வெற்றியைப் பாடுவதால் இது அரசவாகை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Mar-2025, 17:25:53 IST