being created

வி. சாரதிடேச்சு: Difference between revisions

From Tamil Wiki
(Page Created by ASN)
 
(படம் சேர்க்கப்பட்டது.)
Line 3: Line 3:
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
பார்த்தசாரதி என்னும் இயற்பெயரை உடைய சாரதிடேச்சு ஆகஸ்ட் 26, 1959 அன்று, சென்னையில் பிறந்தார். வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தனியார் துறையில் மேலாளராகப் பணியாற்றினார். மணமானவர். ஒரே மகள்: தீபிகா.
பார்த்தசாரதி என்னும் இயற்பெயரை உடைய சாரதிடேச்சு ஆகஸ்ட் 26, 1959 அன்று, சென்னையில் பிறந்தார். வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தனியார் துறையில் மேலாளராகப் பணியாற்றினார். மணமானவர். ஒரே மகள்: தீபிகா.
[[File:Sarathu Dechu Joke.jpg|thumb|வி. சாரதிடேச்சு நகைச்சுவை]]


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==

Revision as of 21:24, 14 November 2025

வி. சாரதிடேச்சு (பார்த்தசாரதி) (பிறப்பு: ஆகஸ்ட் 26, 1959) நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர். 17000-க்கும் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளை எழுதினார். தனியார் துறையில் மேலாளராகப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பார்த்தசாரதி என்னும் இயற்பெயரை உடைய சாரதிடேச்சு ஆகஸ்ட் 26, 1959 அன்று, சென்னையில் பிறந்தார். வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தனியார் துறையில் மேலாளராகப் பணியாற்றினார். மணமானவர். ஒரே மகள்: தீபிகா.

வி. சாரதிடேச்சு நகைச்சுவை

இலக்கிய வாழ்க்கை

இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு கொண்டிருந்த சாரதிடேச்சு, நண்பர்களின் தூண்டுதலால் எழுத ஆரம்பித்தார். தாம் எழுத வந்த காலத்தில் பார்த்தசாரதி என்ற பெயரில் பலர் எழுதிக் கொண்டிருந்ததால் தனது பெயரின் பிற்பாதியையும், (சாரதி) தனது தம்பி வெங்கடேசனின் பிற்பாதியையும் (டேசன் = டேச்சு) இணைத்துக் கொண்டு ‘சாரதிடேச்சு’ என்ற பெயரில் எழுதினார். முதல் நகைச்சுவைத் துணுக்கு, 1979-ல், தமிழ்ப்புத்தாண்டு இதழில், ‘இதயம் பேசுகிறது’ இதழில் வெளியானது. தொடர்ந்து ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், கல்கி தொடங்கி தமிழின் முன்னணி இதழ்கள் பலவற்றிலும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதினார். இவரது துணுக்குகளுக்கென்றே இதழ்கள் தனிப் பக்கங்களை ஒதுக்கின. 17000-க்கும் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளை எழுதினார்.

பார்த்தசாரதி, தீபிகா சாரதி, தீபிகா அகிலேஷ் போன்ற பெயர்களிலும் எழுதினார். தனது படைப்புகளை நூலாகக் கொண்டு வருவதில் ஈடுபாடு காட்டவில்லை.

அமைப்புச் செயல்பாடுகள்

சாரதிடேச்சு, லயன்ஸ் கிளப் உள்ளிட்டவை நடத்திய பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். காமெடி கிளப் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு பங்களித்தார்.

ஊடகம்

1990-ல் சென்னை வானொலியில், தென்கச்சி சுவாமிநாதன் முன்னிலையில் நிகழ்ந்த நகைச்சுவைக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

விஜய் டிவியில் நையாண்டி தர்பார் நிகழ்ச்சியில் நடிகர் யூகிசேதுவுடன் இணைந்து பணிபுரிந்தார். 'சந்திர மண்டலம் கோல்ட்’ என்ற நிகழ்ச்சியில் இவர் தயார் செய்த அரசியல் நையாண்டிகள் பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்தன.

விருதுகள்/பரிசு

சாரதிடேச்சுவின் நகைச்சுவைத் துணுக்குகள் பல்வேறு பரிசுகளைப் பெற்றன. ஆனந்த விகடன் 75-ம் ஆண்டு விழா மலரில் நான்கு நகைச்சுவைத் துணுக்குகள் வெளியாகி ரூ.4000/- பரிசு பெற்றார்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.