மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
; Added info on Finalised date |
||
| Line 43: | Line 43: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|27-Oct-2025, 13:40:00 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 03:44, 28 October 2025
மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா மதுரை மீனாட்சியம்மையைப் போற்றி சிதம்பர சுவாமிகள் இயற்றிய நூல். திருப்போரூர் முருகன் சந்நிதிமுறையில் இடம்பெறும் ஒரு பிரபந்தம்.
பதிப்பு, வெளியீடு
1865-ம் ஆண்டுக்கு முன்னரே திருப்போரூர் சந்நிதி முறை அச்சுப்பிரதியாகக் கிடைத்தது. அதைப் பதிப்பித்தவர் யாரென்று அறியவரவில்லை. அதன்பின் காஞ்சிபுரம் சபாபதி முதலியார், புஷ்பரதச் செட்டியார் உள்ளிட்ட பலரும் பதிப்பித்திருந்தனர். 1967-ல் திருப்போரூர் கந்தசாமி தேவஸ்தானம் வெளியிட்டது.
ஆசிரியர்
சிதம்பர சுவாமிகள் (சிதம்பர அடிகள்) வீரசைவ மரபைச் சேர்ந்த பக்திக் கவிஞர். வீரசைவ மரபைச் சேர்ந்த துறையூர் சாந்தலிங்க அடிகளின் மாணவர். திருப்போரூரில் கோயில் கொண்ட முருகன் மேல் பல துதி நூல்களை இயற்றியவர்.
தோற்றம்
சிதம்பர சுவாமிகளுக்கு ஆழ்ந்த தியானத்தில் ஒருமுறை மயிலின் உருவம் தோன்றியது. அவரது ஆசிரியர் குமாரதேவர் அது மீனாட்சியம்மையைக் குறிப்பதாகக் கூறி மதுரை சென்று மீனாடசியம்மையைத் துதித்து தவம் செய்யப் பணித்தார். அவ்வாறே மதுரைக்குச் சென்று மீனாட்சியம்மை ஆலயத்தில் நாட்கணக்கில் தியானம் செய்தார். மீனாட்சியம்மை கலிவெண்பாவைப் பாடித் துதித்தார். சிதம்பர சுவாமிகள். அவரது தவத்துக்குக் கனிந்து மீனாட்சியம்மை அவர்முன் தோன்றியதாகவும் சென்னைக்கருகே ஆறுமுறை அழ்ந்து மீண்டும் எழுந்த திருப்போருர் முருகன் ஆலயத்தை சீரமைத்து, குடமுழுக்கு செய்ய ஆணையிட்டதாகவும் தொன்மம் கூறுகிறது.
நூல் அமைப்பு
மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா விநாயகப் பெருமானைத் துதிக்கும் காப்பு தவிர 92 கண்ணிகளால் ஆனது.
உள்ளடக்கம்
ஆதி அந்தமில்லாதவளாய், அம்மையாய் காப்பவளாய், சக்தியாய் மீனாட்சியம்மையைக் காண்கிறார் சிதம்பர அடிகள். சாக்த வழிபாட்டின் பல கூறுகள் இதில் காணப்படுகின்றன. ஶ்ரீசக்கரத்தின் மையப் பகுதியிலுள்ள 43 கோணங்களில் உறைபவளாகவும், ஆறு சுவைகள், ஒன்பது மெய்ப்பாடுகள், ஆறு ஆதாரங்கள், பத்து வாயுக்கள் அனைத்திலும் உறைபவளாக அன்னையைத் துதிக்கிறார்.
பாடல் நடை
சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே சேயிழையே
காராரும் மேனிக் கருங்குயிலே - ஆராயும்
வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே மின்னொளியே
ஆதி பராபரையே அம்பிகையே - சோதியே
அண்டரெல்லாம் போற்றும் அரும்பொருளே யாரணங்கே
எண்திசைக்குந் தாயான ஈஸ்வரியே - தெண்திரையில்
வந்தஅமு தேயென்று மாறாம லேநினைப்பார்
சிந்தைதனி லேயுறையுஞ் செல்வியே - அந்தமிலா
மாயோன் தனக்கிளைய வல்லியே மாமயிலோன்
தாயே பராபரையே சங்கரியே - தூயவொளி
மன்னுங் கயிலாச மாமயிலே மேருவெனும்
பொன்னங் கிரியுடைய பூங்கொடியே - அன்னமே
அட்டகுல வெற்பாய் அமர்ந்தவளே
....
உசாத்துணை
திருப்போரூர் முருகன் சந்நிதிமுறை, ஆர்கைவ் வலைத்தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2025, 13:40:00 IST