வயலட்: Difference between revisions

From Tamil Wiki
SakthivelS (talk | contribs)
Corrected typo errors;
Line 13: Line 13:


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
வயலட்டின் முதல் முதல் சிறுகதை ’நூலகத்தில்’ ஜெயமோகனின் தளத்தில் 2013-ல் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு ”ஊதா ஸ்கர்ட் கதைகள்” 2017-ல் வெளியானது. இவரின் படைப்புகள் நீலம், அகழ், காலச்சுவடு, பதாகை, வனம் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. கிளாரிஸ் லிஸ்பெக்டர், [[அனார்]], ஸ்ரீவள்ளி, டி.தர்மராஜ் ஆகியோரை இவரின் ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.  
வயலட்டின் முதல் முதல் சிறுகதை 'நூலகத்தில்' ஜெயமோகனின் தளத்தில் 2013-ல் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு "ஊதா ஸ்கர்ட் கதைகள்" 2017-ல் வெளியானது. இவரின் படைப்புகள் நீலம், அகழ், காலச்சுவடு, பதாகை, வனம் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. கிளாரிஸ் லிஸ்பெக்டர், [[அனார்]], ஸ்ரீவள்ளி, டி.தர்மராஜ் ஆகியோரை இவரின் ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.  


வயலட் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. 2017-ல் காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்’ என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார்.
வயலட் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. 2017-ல் காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்' என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார்.


== மதிப்பீடு ==
== மதிப்பீடு ==
“இதோ நம் தாய் – ரொம்ப அழகிய தீவிரமான கவித்துவ படிமமாய் உருபெற்றிருக்கிறது. மொத்த குறுநாவலும் தாய்மையை ஒரு கருத்துருவமாக இல்லாமல் - மனிதர்கள் வாழ்வோடும் நீதியோடும் சக மனிதர்களோடும் வேறு ஜீவராசிகளோடும் கொள்ளும் உறவாக அழுத்தமான முறையில் முன்வைத்திருக்கிறது. மினிமலிஸ்ட்டிக்காக இருக்கும்போதும் ஆரம்பத்து முன் கதையில் ஒரு அபாரமான நம்பகத்தன்மையும் கலையமைதியும் உணர்ச்சிகரமும் அமைந்திருக்கிறது.” என [[விஷால்ராஜா]] மதிப்பிடுகிறார்.
"இதோ நம் தாய் - ரொம்ப அழகிய தீவிரமான கவித்துவ படிமமாய் உருபெற்றிருக்கிறது. மொத்த குறுநாவலும் தாய்மையை ஒரு கருத்துருவமாக இல்லாமல் - மனிதர்கள் வாழ்வோடும் நீதியோடும் சக மனிதர்களோடும் வேறு ஜீவராசிகளோடும் கொள்ளும் உறவாக அழுத்தமான முறையில் முன்வைத்திருக்கிறது. மினிமலிஸ்ட்டிக்காக இருக்கும்போதும் ஆரம்பத்து முன் கதையில் ஒரு அபாரமான நம்பகத்தன்மையும் கலையமைதியும் உணர்ச்சிகரமும் அமைந்திருக்கிறது." என [[விஷால்ராஜா]] மதிப்பிடுகிறார்.


== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
Line 36: Line 36:
* [https://violetrees.medium.com/ வயலட் - ஆங்கில மொழிபெயர்ப்புகள்]
* [https://violetrees.medium.com/ வயலட் - ஆங்கில மொழிபெயர்ப்புகள்]
* [https://paperplane207.wordpress.com/2024/12/31/ithonamthaai/ இதோ நம் தாய் நாவல் பற்றி - விஷால்ராஜா]
* [https://paperplane207.wordpress.com/2024/12/31/ithonamthaai/ இதோ நம் தாய் நாவல் பற்றி - விஷால்ராஜா]
* [https://neeli.co.in/6266/ தாய்மடியில் நான் தலையைச் சாய்க்கிறேன் – சக்திவேல்: நீலி மின்னிதழ் - இதோ நம் தாய் நாவல் குறித்து]
* [https://neeli.co.in/6266/ தாய்மடியில் நான் தலையைச் சாய்க்கிறேன் - சக்திவேல்: நீலி மின்னிதழ் - இதோ நம் தாய் நாவல் குறித்து]
* [https://www.youtube.com/watch?v=DBE3Pu3DG2A&ab_channel=ShrutiTVLiterature L.J.Violet speech | ஸ்ரீவள்ளி கவிதைகள் | எல்.ஜே.வயலட்]
* [https://www.youtube.com/watch?v=DBE3Pu3DG2A&ab_channel=ShrutiTVLiterature L.J.Violet speech | ஸ்ரீவள்ளி கவிதைகள் | எல்.ஜே.வயலட்]
* [https://www.youtube.com/watch?v=p79O3qBidT8&ab_channel=QueerChennaiChronicles%28QCC%29 அறிமுக உரை எல்.ஜே.வயலட்| Queer LitFest Chennai| 2018]
* [https://www.youtube.com/watch?v=p79O3qBidT8&ab_channel=QueerChennaiChronicles%28QCC%29 அறிமுக உரை எல்.ஜே.வயலட்| Queer LitFest Chennai| 2018]

Revision as of 16:03, 22 November 2025

வயலட்

வயலட் (எல்.ஜே.வயலட்) (பிறப்பு: மே 5, 1991) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர். சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

வயலட் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்செல்வன், மதியரசி இணையருக்கு மே 5, 1991-ல் பிறந்தார். மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தொலைதூரக் கல்வியில் ஆங்கிலத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். வயலட் பெங்களூரில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார்.

இதழியல்

  • காலச்சுவடு இதழில் ஓராண்டு (2014) உதவி ஆசிரியராக பணியாற்றினார்.
  • 2015-ல் "எனில்" என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார்.

பதிப்பகம்

வயலட் குயர் சென்னை க்ரோனிகிள்ஸ் (Queer Chennai Chronicles) என்ற பதிப்பகத்தின் இணை நிறுவனர். 2017-18 காலகட்டங்களில் அதில் செயல்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

வயலட்டின் முதல் முதல் சிறுகதை 'நூலகத்தில்' ஜெயமோகனின் தளத்தில் 2013-ல் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு "ஊதா ஸ்கர்ட் கதைகள்" 2017-ல் வெளியானது. இவரின் படைப்புகள் நீலம், அகழ், காலச்சுவடு, பதாகை, வனம் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. கிளாரிஸ் லிஸ்பெக்டர், அனார், ஸ்ரீவள்ளி, டி.தர்மராஜ் ஆகியோரை இவரின் ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

வயலட் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. 2017-ல் காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்' என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார்.

மதிப்பீடு

"இதோ நம் தாய் - ரொம்ப அழகிய தீவிரமான கவித்துவ படிமமாய் உருபெற்றிருக்கிறது. மொத்த குறுநாவலும் தாய்மையை ஒரு கருத்துருவமாக இல்லாமல் - மனிதர்கள் வாழ்வோடும் நீதியோடும் சக மனிதர்களோடும் வேறு ஜீவராசிகளோடும் கொள்ளும் உறவாக அழுத்தமான முறையில் முன்வைத்திருக்கிறது. மினிமலிஸ்ட்டிக்காக இருக்கும்போதும் ஆரம்பத்து முன் கதையில் ஒரு அபாரமான நம்பகத்தன்மையும் கலையமைதியும் உணர்ச்சிகரமும் அமைந்திருக்கிறது." என விஷால்ராஜா மதிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

நாவல்
  • இதோ நம் தாய் (2025, சால்ட் பதிப்பகம்)
சிறுகதைத் தொகுப்பு
  • ஊதா ஸ்கர்ட் கதைகள் (மோக்லி பதிப்பகம், 2017)
  • நட்சத்திரங்களுக்குச் செல்லும் வழி (நீலம் பதிப்பகம், 2024)
மொழிபெயர்ப்பு
  • குந்தரின் கூதிர்காலம் (காலச்சுவடு, 2017)
  • ஊர்சுற்றிகள் (அறிவியல் புனைவு) (ஆழி பதிப்பகம், 2024)

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 19:33:44 IST