ஜங்கம பண்டாரம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ஜங்கம பண்டாரம் சாதியினர் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வாழும் நாடோடிக் கலைஞர்கள். பகல் வேடம் கலையை ஊர் ஊராகச் சென்று நிகழ்த்தும் தெலுங்கு நாடோடியினர்.")
 
No edit summary
Line 1: Line 1:
ஜங்கம பண்டாரம் சாதியினர் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வாழும் நாடோடிக் கலைஞர்கள். பகல் வேடம் கலையை ஊர் ஊராகச் சென்று நிகழ்த்தும் தெலுங்கு நாடோடியினர்.

பார்க்க: [[பகல் வேடம் (நிகழ்த்துக்கலை)|பகல் வேடம்]]
== வரலாறு ==
பகல் வேடம் கலை நிகழ்த்தும் ஜங்கம பண்டாரம் சாதியினர் நாயக்க மன்னர்கள் தமிழகம் வந்த போது அவர்களுடன் வந்து குடியேறியவர்கள். பகல் வேடம் நிகழ்த்துக்கலை தமிழகத்தில் பொ.யு. 15 ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே வழக்கில் இருந்தது. ஆந்திரா மாநிலத்தில் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இக்கலை நிகழ்ந்ததற்கு தெலுங்கு இலக்கிய சான்றுகள் கிடைக்கின்றன. நாயக்க மன்னர்கள் ஜங்கம பண்டாரங்களை ஒற்று வேலைகளுக்கு பயன்படுத்தினர். அதற்காக அவர்களுக்கு வல்லம் பகுதியில் மானியங்கள் வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் தற்போது இருபத்தைந்திற்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளனர். ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து கலை நிகழ்த்தி செல்பவர்களும் உள்ளனர். இவர்களின் சாதி அதிகாரபூர்வமாக ‘ஜங்கம்’ எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் வாழ்கின்ற இடத்தைப் பொறுத்து தங்கள் சாதியை குல்லுக்கவர் நாயுடு, பலிங்க நாயுடு, லிங்காயத்து நாயுடு எனக் கூறிக் கொள்கின்றனர்.
== வாழும் இடங்கள் ==
தமிழநாட்டில் தென் ஆற்காடு மாவட்டத்தில் அதிகம் வசிக்கின்றனர். தென்னாற்காடு மாவட்டத்தில் திண்டிவனத்திற்கும் விழுப்புரத்திற்கும் இடையில் தென்களவாய் எனும் ஊரின் அருகில் உள்ள மதுரவையிரம் பேட்டையில் பத்துக் குடும்பங்கள் வசிக்கின்றனர். இதன் அருகே உள்ளெ வேங்கை என்னும் கிராமத்தில் பத்து குடும்பங்கள் வசிக்கின்றனர். இதனைச் சுற்றி ஆண்டார்குப்பம், தர்க்காஸ், ஓமந்தூர் ஆகிய கிராமங்களிலும் சில குடும்பங்கள் வசிக்கின்றனர். நாடோடி சமூகமாக வாழும் இவர்கள் ஆந்திராவிலிருந்தும் வந்து முகாமிட்டு நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
== மொழி ==
ஜங்கம பண்டாரம் சாதியினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் நிகழ்ச்சி நடத்தும் போது தமிழிலேயே பாட்டுபாடி கதை சொல்கின்றனர். தெலுங்கு பாடல்களைப் பாடி கதை சொல்பவர்களும் உள்ளனர். ஆந்திராவிலிருந்து வந்து செல்பவர்கள் தெலுங்கு மொழியே பாடுகின்றனர்.

Revision as of 18:11, 12 September 2022

ஜங்கம பண்டாரம் சாதியினர் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வாழும் நாடோடிக் கலைஞர்கள். பகல் வேடம் கலையை ஊர் ஊராகச் சென்று நிகழ்த்தும் தெலுங்கு நாடோடியினர்.

பார்க்க: பகல் வேடம்

வரலாறு

பகல் வேடம் கலை நிகழ்த்தும் ஜங்கம பண்டாரம் சாதியினர் நாயக்க மன்னர்கள் தமிழகம் வந்த போது அவர்களுடன் வந்து குடியேறியவர்கள். பகல் வேடம் நிகழ்த்துக்கலை தமிழகத்தில் பொ.யு. 15 ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே வழக்கில் இருந்தது. ஆந்திரா மாநிலத்தில் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இக்கலை நிகழ்ந்ததற்கு தெலுங்கு இலக்கிய சான்றுகள் கிடைக்கின்றன. நாயக்க மன்னர்கள் ஜங்கம பண்டாரங்களை ஒற்று வேலைகளுக்கு பயன்படுத்தினர். அதற்காக அவர்களுக்கு வல்லம் பகுதியில் மானியங்கள் வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் தற்போது இருபத்தைந்திற்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளனர். ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து கலை நிகழ்த்தி செல்பவர்களும் உள்ளனர். இவர்களின் சாதி அதிகாரபூர்வமாக ‘ஜங்கம்’ எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் வாழ்கின்ற இடத்தைப் பொறுத்து தங்கள் சாதியை குல்லுக்கவர் நாயுடு, பலிங்க நாயுடு, லிங்காயத்து நாயுடு எனக் கூறிக் கொள்கின்றனர்.

வாழும் இடங்கள்

தமிழநாட்டில் தென் ஆற்காடு மாவட்டத்தில் அதிகம் வசிக்கின்றனர். தென்னாற்காடு மாவட்டத்தில் திண்டிவனத்திற்கும் விழுப்புரத்திற்கும் இடையில் தென்களவாய் எனும் ஊரின் அருகில் உள்ள மதுரவையிரம் பேட்டையில் பத்துக் குடும்பங்கள் வசிக்கின்றனர். இதன் அருகே உள்ளெ வேங்கை என்னும் கிராமத்தில் பத்து குடும்பங்கள் வசிக்கின்றனர். இதனைச் சுற்றி ஆண்டார்குப்பம், தர்க்காஸ், ஓமந்தூர் ஆகிய கிராமங்களிலும் சில குடும்பங்கள் வசிக்கின்றனர். நாடோடி சமூகமாக வாழும் இவர்கள் ஆந்திராவிலிருந்தும் வந்து முகாமிட்டு நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

மொழி