being created

டி.என். சுகி சுப்பிரமணியன்: Difference between revisions

From Tamil Wiki
(Para Added, Image Added)
(Para Added)
Line 2: Line 2:
[[File:Suki Subramaniyam at Middle Age.jpg|thumb|சுகி சுப்பிரமணியம் (நடுத்தர வயதில்)]]

சிறுகதை, நாவல், நாடகம், சிறார் எழுத்து என்று இலக்கிய உலகின் பல களங்களில் செயல்பட்டவர் டி.என். சுகி சுப்பிரமணியன். (சுகி, சுகி சுப்பிரமணியம்: 1917-1986) பொது வாசிப்புக்குரிய படைப்புகளையும், நகைச்சுவை அம்சமுள்ள கதை, கட்டுரைகளையும் தந்தவர். திருச்சி மற்றும் சென்னை வானொலி நிலையங்களில் நாடக அமைப்பாளராகப் பணியாற்றியவர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
சுகி சுப்பிரமணியன். மார்ச் 22, 1917 அன்று, திருநெல்வேலி மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சி என்ற கிராமத்தில், நல்லபெருமாள் - முத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திருநெல்வேலி இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பள்ளியில் இவருடன் பயின்றவர் மீ.ப. சோமு.

== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
1941-ல், கோமதியுடன் திருமணம் நிகழ்ந்தது. பெருமாள், நம்பிராஜன், சிவம் ஆகியோர் இவரது மகன்கள். ராஜலட்சுமி, சிவகாமி, காந்திமதி ஆகியோர் மகள்கள்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சிறு வயதில் வாசித்த ஆனந்த விகடன், கலைமகள் போன்ற இதழ்கள் சுகி சுப்பிரமணியனின் எழுத்தார்வத்தை வளர்த்தன. டி.கே.சி.யின் ‘வட்டத்தொட்டி’யில் பங்கு கொண்டார். டி.கே.சி.யின் மகன் திலீபன் இவரது நெருங்கிய நண்பரானார். பெரும்பாலான நேரங்களை வட்டத்தொட்டியிலேயே கழித்தார். இலக்கிய ஆர்வம் மேலும் அதிகரித்தது. புகழ்பெற்ற எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளின் அறிமுகமும் கிடைத்தது. ‘கல்கி’ இவரது மனம் கவர்ந்த எழுத்தாளராக இருந்தார்.  

Line 14: Line 11:
கல்கி மீது கொண்ட ஈர்ப்பால், கிருஷ்ணமூர்த்தியின் முதல் எழுத்தான ‘கி’ என்பதைத் தன் பெயரின் முதல் எழுத்துடன் இணைத்துக் கொண்டு ‘சுகி சுப்பிரமணியன்’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். 1936-ல், உண்மை நிகழ்வு ஒன்றை மையமாக வைத்து, ‘ஏழைகளின் தோணி'  என்ற சிறுகதையை ஆனந்த விகடனுக்கு எழுதி அனுப்பினார்.  அது பிரசுரமானது. திருநெல்வேலியில் உள்ள சுலோசன முதலியார் பாலத்தின் அருகே இருக்கும் தைப்பூச மண்டபத்தில் தினந்தோறும் படுத்துறங்கும் ஏழை எளிய மக்கள், திடீரெனப் பெருகி வரும் தாமிரபரணியின் வெள்ளத்தால் ஏற்படும் அவலத்தை மையமாக வைத்து அந்தக் கதையை எழுதியிருந்தார். அதுதான் சுகி சுப்பிரமணியனின் முதல் எழுத்து முயற்சி. டி.கே.சிதம்பரநாத முதலியாரும், கல்கியும் அவரது இந்த முதல் கதையை வெகுவாகப் பாராட்டி ஊக்குவித்தனர்.

புதுமைப்பித்தனும் இவரைக் கவர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவரானார். டி.கே.சி.யை தனது ஆசானாகவும், கல்கியை தனது ஆதர்ச எழுத்தாளராகவும் வரித்துக் கொண்ட சுகி சுப்பிரமணியம், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, நாடகங்கள் என்று எழுதத் துவங்கினார். சுகி சுப்பிரமணியனின், “கற்பகக் கனிகள்” தொகுப்பை, ஆங்கிலக் கட்டுரையாளர் லிண்டின் (Lynd) எழுத்தைப் போலவே நகைச்சுவையும், கருத்தும், சிறப்பும் செறிந்திருருப்பதாக வி.ஆர்.எம். செட்டியார் பாராட்டி ஊக்குவித்தார்.  
புதுமைப்பித்தனும் சுகியின் கவர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவர். டி.கே.சி.யை தனது ஆசானாகவும், கல்கியை தனது ஆதர்ச எழுத்தாளராகவும் வரித்துக் கொண்ட சுகி சுப்பிரமணியம், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, நாடகங்கள் என்று எழுதத் துவங்கினார். சுகி சுப்பிரமணியனின், “கற்பகக் கனிகள்” தொகுப்பை, ஆங்கிலக் கட்டுரையாளர் லிண்டின் (Lynd) எழுத்தைப் போலவே நகைச்சுவையும், கருத்தும், சிறப்பும் செறிந்திருருப்பதாக வி.ஆர்.எம். செட்டியார் பாராட்டி ஊக்குவித்தார்.  

சுதேசமித்திரன். காதல், சிவாஜி, தினமணி கதிர், தினமணி சுடர், தமிழரசு, கல்கி, விகடன் போன்ற பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. இந்தி, மராத்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் இவரது சிறுகதைகள் சில மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுப் பாடல் நூல் நிறுவனம் இவரது சிறுகதை ஒன்றை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான துணைப்பாட நூலில் சேர்த்திருந்தது. சென்னைப் பல்கலையின் பாடத்திட்டத்திலும் இவரது சிறுகதை ஒன்று பாடமாக இடம் பெற்றிருந்தது. சாகித்ய அகாதமி தொகுப்பில் இவரது சிறுகதை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. 
===== நகைச்சுவை எழுத்து =====
===== நகைச்சுவை எழுத்து =====
தொடர்ந்து நகைச்சுவையை மையப்படுத்தி பல கட்டுரைகளை எழுதினார் சுகி. “டாக்டர் மியாவ் மியாவ்”, “சுண்டெலி” போன்ற கட்டுரைகள் பலராலும் ரசிக்கப்பட்டன.

Line 23: Line 22:
''ஆரஞ்சைக் கண்டாலும் இனிதே பேரஞ்செய்து''

''ஆறஞ்சை வாங்குதலும் இனிதே - அதனிலும்''  
''ஆறஞ்சை வாங்குதலும் இனிதே - அதனிலும்''

''உரையை உரித்து சுளைகாண்டல் இனிதே''
''உரையை உரித்து சுளைகாண்டல் இனிதே''

''விரையைத் தெரித்து விழுங்கலும் இனிதே''  
''விரையைத் தெரித்து விழுங்கலும் இனிதே''
 
Line 34: Line 34:
''பக்கநின்று நோற்றாலும் பாழ்வயிற்றுள் பட்டாலும்''

''வேர்த்தாலும் குளிர்ந்தாலும் வேறொருவர் தந்தாலும்''  

''இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் காப்பியே''

===== இலக்கியச் செயல்பாடுகள் =====
===== இலக்கியச் செயல்பாடுகள் =====
திருச்சியில் எழுத்தாளர் சங்கம் உருவாக உழைத்த குழுவினரில் சுகியும் ஒருவர். திருச்சி எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.  
திருச்சியில் எழுத்தாளர் சங்கம் உருவாக உழைத்த குழுவினரில் சுகியும் ஒருவர். திருச்சி எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். தனது மனைவியை எழுத ஊக்கப்படுத்தி அவரையும் சிறந்த எழுத்தாளராக்கினார். மகன்கள் மற்றும் மகள்களையும் எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, இலக்கியவாதிகளாகச் செயல்படத் தூண்டினார்.
 
== வானொலி வாழ்க்கை ==
== வானொலி வாழ்க்கை ==
சுகி சுப்பிரமணியனுக்கு, திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் நாடக எழுத்தாளர் (script writer) வேலை கிடைத்தது. தனது உழைப்பால், முயற்சியால் விரைவிலேயே நிகழ்ச்சித் தயாரிப்பாளராக உயர்ந்தார். வானொலிக்காக பல நாடகங்களை எழுதி, இயக்கி அரங்கேற்றினார். திருச்சியிலிருந்து, சென்னை வானொலிக்கு இவருக்குப் பணிமாற்றம் நிகழ்ந்தது. சென்னை வானொலியில் பணியாற்றும் காலத்தில் புகழ்மிக்க பல நாடகாசிரியர்களை இவர் உருவாக்கினார். கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களை நாடகங்கள் எழுதும்படி ஊக்குவித்தார். பதினைந்து நிமிடக் குறு நாடகங்கள், அரைமணி நேரச் சிறு நாடகங்கள், ஒரு மணி நேர முழு நீள நாடகங்கள் என வானொலியில் விதம் விதமான பரீட்சார்த்த முறைகளைக் கையாண்டு வெற்றி பெற்றார். “புதிய படிக்கற்கள்”, “காப்புக் கட்டிச் சத்திரம்”, “துபாஷ் வீடு”,”ஸதி-பதி” போன்ற வானொலி நாடகங்கள் இவருக்கு மிகவும் புகழைச் சேர்த்தன.

1940 முதல் 1977 வரை முப்பத்தியேழு ஆண்டுகள் திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றி ஆயிரக்கணக்கான நாடகங்களை அரங்கேற்றினார் சுகி சுப்பிரமணியன்.  நாடக நடிகர்கள் பலரை உருவாக்கினார். “எனக்கு நாடக நுணுக்கங்களை, குரல் எப்படி ஒலிக்க வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்தவர். எனது குரு. எனக்கு துரோணாச்சாரியாராக இருந்தவர் சுகி சுப்பிரமணியம்” என்கிறார், நாடக, திரைப்பட நடிகரும், உதவி இயக்குநருமான நாயர் ராமன். நாகேஷ், மனோரமா போன்றவர்களுக்கும் இந்த நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து ஊக்குவித்தவர் சுகி சுப்பிரமணியன்தான்.
 
இவரது நாடகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. 1977-ல், வானொலியிலிருந்து பணி ஓய்வு பெற்றார் சுகி சுப்பிரமணியன்.

இதழியல் வாழ்க்கை
1940 முதல் 1977 வரை முப்பத்தியேழு ஆண்டுகள் திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றி ஆயிரக்கணக்கான நாடகங்களை அரங்கேற்றினார் சுகி சுப்பிரமணியன். நாடக நடிகர்கள் பலரை உருவாக்கினார். “எனக்கு நாடக நுணுக்கங்களை, குரல் எப்படி ஒலிக்க வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்தவர். எனது குரு. எனக்கு துரோணாச்சாரியாராக இருந்தவர் சுகி சுப்பிரமணியம்” என்கிறார், நாடக, திரைப்பட நடிகரும், உதவி இயக்குநருமான நாயர் ராமன். நாகேஷ், மனோரமா போன்றவர்களுக்கும் இந்த நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து ஊக்குவித்தவர் சுகி சுப்பிரமணியன்தான். ‘காப்புக்கட்டிச் சத்திரம்’ என்ற நாடகத்தில் தான், முதல் முறையாக ‘ஆச்சி’ என்ற பாத்திரமேற்று நடித்தார் மனோரமா.

ஆரம்ப காலக்கட்டத்தில் இதழியல் ஆர்வத்தால் சென்னையில் ‘ஹநுமான்’ இதழில் சிலகாலம் பணியாற்றினார் சுகி சுப்பிரமணியம். காலச்சக்கரம் என்ற இதழின் கௌரவ ஆசிரியராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தார்.  ‘அமுதம்’ என்ற இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். பல சிறுகதை, நாவல் போட்டிகளுக்கு இவர் நடுவராக, தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒருவராகச் செயல்பட்டிருக்கிறார்.  
சுகியின் நாடகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. 1977-ல், வானொலியிலிருந்து பணி ஓய்வு பெற்றார் சுகி சுப்பிரமணியன்.

== இதழியல் வாழ்க்கை ==

Revision as of 22:06, 11 September 2022

சுகி சுப்பிரமணியம் : இள வயதுப் படம்
சுகி சுப்பிரமணியம் (நடுத்தர வயதில்)

சிறுகதை, நாவல், நாடகம், சிறார் எழுத்து என்று இலக்கிய உலகின் பல களங்களில் செயல்பட்டவர் டி.என். சுகி சுப்பிரமணியன். (சுகி, சுகி சுப்பிரமணியம்: 1917-1986) பொது வாசிப்புக்குரிய படைப்புகளையும், நகைச்சுவை அம்சமுள்ள கதை, கட்டுரைகளையும் தந்தவர். திருச்சி மற்றும் சென்னை வானொலி நிலையங்களில் நாடக அமைப்பாளராகப் பணியாற்றியவர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

சுகி சுப்பிரமணியன். மார்ச் 22, 1917 அன்று, திருநெல்வேலி மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சி என்ற கிராமத்தில், நல்லபெருமாள் - முத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திருநெல்வேலி இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பள்ளியில் இவருடன் பயின்றவர் மீ.ப. சோமு.

தனி வாழ்க்கை

1941-ல், கோமதியுடன் திருமணம் நிகழ்ந்தது. பெருமாள், நம்பிராஜன், சிவம் ஆகியோர் இவரது மகன்கள். ராஜலட்சுமி, சிவகாமி, காந்திமதி ஆகியோர் மகள்கள்.

இலக்கிய வாழ்க்கை

சிறு வயதில் வாசித்த ஆனந்த விகடன், கலைமகள் போன்ற இதழ்கள் சுகி சுப்பிரமணியனின் எழுத்தார்வத்தை வளர்த்தன. டி.கே.சி.யின் ‘வட்டத்தொட்டி’யில் பங்கு கொண்டார். டி.கே.சி.யின் மகன் திலீபன் இவரது நெருங்கிய நண்பரானார். பெரும்பாலான நேரங்களை வட்டத்தொட்டியிலேயே கழித்தார். இலக்கிய ஆர்வம் மேலும் அதிகரித்தது. புகழ்பெற்ற எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளின் அறிமுகமும் கிடைத்தது. ‘கல்கி’ இவரது மனம் கவர்ந்த எழுத்தாளராக இருந்தார்.

கல்கி மீது கொண்ட ஈர்ப்பால், கிருஷ்ணமூர்த்தியின் முதல் எழுத்தான ‘கி’ என்பதைத் தன் பெயரின் முதல் எழுத்துடன் இணைத்துக் கொண்டு ‘சுகி சுப்பிரமணியன்’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். 1936-ல், உண்மை நிகழ்வு ஒன்றை மையமாக வைத்து, ‘ஏழைகளின் தோணி'  என்ற சிறுகதையை ஆனந்த விகடனுக்கு எழுதி அனுப்பினார்.  அது பிரசுரமானது. திருநெல்வேலியில் உள்ள சுலோசன முதலியார் பாலத்தின் அருகே இருக்கும் தைப்பூச மண்டபத்தில் தினந்தோறும் படுத்துறங்கும் ஏழை எளிய மக்கள், திடீரெனப் பெருகி வரும் தாமிரபரணியின் வெள்ளத்தால் ஏற்படும் அவலத்தை மையமாக வைத்து அந்தக் கதையை எழுதியிருந்தார். அதுதான் சுகி சுப்பிரமணியனின் முதல் எழுத்து முயற்சி. டி.கே.சிதம்பரநாத முதலியாரும், கல்கியும் அவரது இந்த முதல் கதையை வெகுவாகப் பாராட்டி ஊக்குவித்தனர்.

புதுமைப்பித்தனும் சுகியின் கவர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவர். டி.கே.சி.யை தனது ஆசானாகவும், கல்கியை தனது ஆதர்ச எழுத்தாளராகவும் வரித்துக் கொண்ட சுகி சுப்பிரமணியம், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, நாடகங்கள் என்று எழுதத் துவங்கினார். சுகி சுப்பிரமணியனின், “கற்பகக் கனிகள்” தொகுப்பை, ஆங்கிலக் கட்டுரையாளர் லிண்டின் (Lynd) எழுத்தைப் போலவே நகைச்சுவையும், கருத்தும், சிறப்பும் செறிந்திருருப்பதாக வி.ஆர்.எம். செட்டியார் பாராட்டி ஊக்குவித்தார்.

சுதேசமித்திரன். காதல், சிவாஜி, தினமணி கதிர், தினமணி சுடர், தமிழரசு, கல்கி, விகடன் போன்ற பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. இந்தி, மராத்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் இவரது சிறுகதைகள் சில மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுப் பாடல் நூல் நிறுவனம் இவரது சிறுகதை ஒன்றை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான துணைப்பாட நூலில் சேர்த்திருந்தது. சென்னைப் பல்கலையின் பாடத்திட்டத்திலும் இவரது சிறுகதை ஒன்று பாடமாக இடம் பெற்றிருந்தது. சாகித்ய அகாதமி தொகுப்பில் இவரது சிறுகதை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

நகைச்சுவை எழுத்து

தொடர்ந்து நகைச்சுவையை மையப்படுத்தி பல கட்டுரைகளை எழுதினார் சுகி. “டாக்டர் மியாவ் மியாவ்”, “சுண்டெலி” போன்ற கட்டுரைகள் பலராலும் ரசிக்கப்பட்டன.

நகைச்சுவையாகப் பல கவிதைகளையும் எழுதினார். சான்றாகக் கீழ்காணும் கவிதைகளைக் கூறலாம்.

ஆரஞ்சைக் கண்டாலும் இனிதே பேரஞ்செய்து

ஆறஞ்சை வாங்குதலும் இனிதே - அதனிலும்

உரையை உரித்து சுளைகாண்டல் இனிதே

விரையைத் தெரித்து விழுங்கலும் இனிதே

பார்த்தாலும் நினைத்தாலும் பசிதீரக் குடிப்போர்

பக்கநின்று நோற்றாலும் பாழ்வயிற்றுள் பட்டாலும்

வேர்த்தாலும் குளிர்ந்தாலும் வேறொருவர் தந்தாலும்

இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் காப்பியே

இலக்கியச் செயல்பாடுகள்

திருச்சியில் எழுத்தாளர் சங்கம் உருவாக உழைத்த குழுவினரில் சுகியும் ஒருவர். திருச்சி எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். தனது மனைவியை எழுத ஊக்கப்படுத்தி அவரையும் சிறந்த எழுத்தாளராக்கினார். மகன்கள் மற்றும் மகள்களையும் எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, இலக்கியவாதிகளாகச் செயல்படத் தூண்டினார்.

வானொலி வாழ்க்கை

சுகி சுப்பிரமணியனுக்கு, திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் நாடக எழுத்தாளர் (script writer) வேலை கிடைத்தது. தனது உழைப்பால், முயற்சியால் விரைவிலேயே நிகழ்ச்சித் தயாரிப்பாளராக உயர்ந்தார். வானொலிக்காக பல நாடகங்களை எழுதி, இயக்கி அரங்கேற்றினார். திருச்சியிலிருந்து, சென்னை வானொலிக்கு இவருக்குப் பணிமாற்றம் நிகழ்ந்தது. சென்னை வானொலியில் பணியாற்றும் காலத்தில் புகழ்மிக்க பல நாடகாசிரியர்களை இவர் உருவாக்கினார். கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களை நாடகங்கள் எழுதும்படி ஊக்குவித்தார். பதினைந்து நிமிடக் குறு நாடகங்கள், அரைமணி நேரச் சிறு நாடகங்கள், ஒரு மணி நேர முழு நீள நாடகங்கள் என வானொலியில் விதம் விதமான பரீட்சார்த்த முறைகளைக் கையாண்டு வெற்றி பெற்றார். “புதிய படிக்கற்கள்”, “காப்புக் கட்டிச் சத்திரம்”, “துபாஷ் வீடு”,”ஸதி-பதி” போன்ற வானொலி நாடகங்கள் இவருக்கு மிகவும் புகழைச் சேர்த்தன.

1940 முதல் 1977 வரை முப்பத்தியேழு ஆண்டுகள் திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றி ஆயிரக்கணக்கான நாடகங்களை அரங்கேற்றினார் சுகி சுப்பிரமணியன். நாடக நடிகர்கள் பலரை உருவாக்கினார். “எனக்கு நாடக நுணுக்கங்களை, குரல் எப்படி ஒலிக்க வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்தவர். எனது குரு. எனக்கு துரோணாச்சாரியாராக இருந்தவர் சுகி சுப்பிரமணியம்” என்கிறார், நாடக, திரைப்பட நடிகரும், உதவி இயக்குநருமான நாயர் ராமன். நாகேஷ், மனோரமா போன்றவர்களுக்கும் இந்த நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து ஊக்குவித்தவர் சுகி சுப்பிரமணியன்தான். ‘காப்புக்கட்டிச் சத்திரம்’ என்ற நாடகத்தில் தான், முதல் முறையாக ‘ஆச்சி’ என்ற பாத்திரமேற்று நடித்தார் மனோரமா.

சுகியின் நாடகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. 1977-ல், வானொலியிலிருந்து பணி ஓய்வு பெற்றார் சுகி சுப்பிரமணியன்.

இதழியல் வாழ்க்கை

ஆரம்ப காலக்கட்டத்தில் இதழியல் ஆர்வத்தால் சென்னையில் ‘ஹநுமான்’ இதழில் சிலகாலம் பணியாற்றினார் சுகி சுப்பிரமணியம். காலச்சக்கரம் என்ற இதழின் கௌரவ ஆசிரியராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தார். ‘அமுதம்’ என்ற இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். பல சிறுகதை, நாவல் போட்டிகளுக்கு இவர் நடுவராக, தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒருவராகச் செயல்பட்டிருக்கிறார்.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.