under review

ஆறுமுக சீதாராமன்: Difference between revisions

From Tamil Wiki
(; Added info on Finalised date)
Line 87: Line 87:
*[https://www.hindutamil.in/news/literature/137080--2.html#google_vignette ஆறுமுக சீதாராமன் - தமிழ் ஹிந்து கட்டுரை]
*[https://www.hindutamil.in/news/literature/137080--2.html#google_vignette ஆறுமுக சீதாராமன் - தமிழ் ஹிந்து கட்டுரை]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|30-Jul-2025, 09:37:59 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 03:44, 31 July 2025

ஆறுமுக சீதாராமன்

ஆறுமுக சீதாராமன் (அளக்குடி ஆறுமுக சீதாராமன்) (பிறப்பு: ஜனவரி 20, 1968) ஆய்வாளர், நாணயவியலாளர். பொ.மு. ஒன்றாம் நூற்றாண்டு சங்ககால நாணயத்தை ஆய்விற்குக் கொண்டு வந்தவர் என அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

வரலாறு கூறும் தமிழ்நாட்டுக் காசுகள் நூல் வெளியீட்டின் போது

ஆறுமுக சீதாராமன் ஜனவரி 20, 1968 அன்று மயிலாடுதுறையில் சோம. ஆறுமுகம், தனலட்சுமி இணையருக்குப் பிறந்தார். ஆறுமுக சீதாராமனின் சொந்த ஊர் சிதம்பரம் அருகிலுள்ள அளக்குடி. தந்தை சோம. ஆறுமுகம் முதுநிலை பூச்சியியல் வல்லுநராகப் பணியாற்றியதால் சீதாராமன் தமிழகத்தின் பல பகுதிகளில் கல்வி பயின்றார். ஊட்டி செயிண்ட் ஜோசப் பள்ளியில் பத்தாம் வகுப்பும், கோயம்புத்தூர் சித்தாபுத்தூர் கார்பரேஷன் உயர்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் முடித்தார். வரலாற்றில் இளங்கலைப் பட்டத்தை கோயம்புத்தூர் அரசினர் கலைக் கல்லூரியிலும், முதுகலைப் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

தனி வாழ்க்கை

சீதாராமன் கயல்விழியை மே 25, 1997 அன்று திருமணம் செய்துக் கொண்டார். சீதாராமன் - கயல்விழி தம்பதியருக்கு ஒரு மகன் ஆதவ்ராம். சீதாராமன் முழு நேர நாணயவியல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஆய்வுப் பணி

ஆறுமுக சீதாராமன் பொ.யு. 1985 தொடங்கி தமிழகம் முழுவதும் நாணயங்கள், முத்திரைகள், மோதிரங்கள், தொல்பொருட்கள் ஆகியவற்றை தேடி தொகுத்து அதன் வாயிலாக தமிழக நாணயவியல் வரலாற்றை மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார். தமிழக நாணயவியலுக்கான ஆய்வு நூலகம் ஒன்றை தஞ்சையில் அமைத்துள்ளார். ஐராவதம் மகாதேவனுடன் இணைந்து 25 ஆண்டுகள் தமிழ் பிராமி கல்வெட்டுகள் சார்ந்து பணியாற்றியுள்ளார்.

தமிழகக் காசுகள் சார்ந்து ஆறுமுக சீதாராமன் எழுதிய பல தனிக் கட்டுரைகள் தினமணி, தினமலர் போன்ற பிரபல நாளிதழ்களிலும், ஆவணம், வரலாறு, சாசனம் போன்ற முக்கிய வரலாற்று இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

வகுப்புகள்

தமிழ்நாடு தொல்லியல் துறை கல்வெட்டியல் பயிலரங்கில் ஆய்வாளர்களுக்கு நாணயவியல் வகுப்புகள் நடத்தி வருகிறார். தமிழகம், இலங்கையிலுள்ள கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாணயவியல் தொடர்பான வகுப்புகள் தொடர்ந்து நடத்தி வருகிறார். தமிழக கல்லூரிகளில் நாணயக் கண்காட்சிகளும் நிகழ்த்தியுள்ளார்.

விருதுகள்

  • தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு - தமிழக காசுகள் நூலுக்காக (2014 - 2015)
  • நாணயமாமணி விருது - புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகம் (2009)
  • காசு இயில் செம்மல் விருது - தஞ்சாவூர் சோழமண்டல நாணயவியல் கழகம் (2018)
  • தமிழ் மேம்பாட்டு விருது - வா.செ. குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை (2016)
  • பம்பாயில் - முற்றா ரத்னா புரஷ்கார் (2021)
  • தமிழ் செம்மல் விருது (2022)

ஆய்வு இடம்

தமிழக நாணயவியல் ஆய்வில் தி. தேசிகாச்சாரியார் போன்ற முன்னோடிகள், அடுத்த தலைமுறையில் இரா. கிருஷ்ணமூர்த்தி போன்ற ஆய்வாளர்களுக்குப் பின் சமகாலத்தைய முதன்மை ஆய்வாளராக ஆறுமுக சீதாராமன் கருதப்படுகிறார். தொல்லியல் மதிப்பு கொண்ட நாணயங்களைச் சேகரிப்பது, அவற்றை பிற வரலாற்றுச் செய்திகளுடன் இணைத்து வரலாற்றை விரித்து எழுதுவது ஆகிய தளங்களில் தொடர்பணி ஆற்றிவருகிறார்.பொ.மு. ஒன்றாம் நூற்றாண்டு சங்ககால நாணயத்தை ஆய்விற்குக் கொண்டு வந்தவர் என அறியப்படுகிறார்.

நூல்கள்

  • தமிழகத் தொல்லியல் சான்றுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்) - தொகுதி 1 (அக்டோபர், 1994)
  • தமிழகத் தொல்லியல் சான்றுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்) - தொகுதி 2 (பிப்ரவரி, 2002)
  • தமிழகத் தொல்லியல் சான்றுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்) - தொகுதி 3 (டிசம்பர், 2004)
  • தமிழகத் தொல்லியல் சான்றுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்) - தொகுதி 4 (மார்ச், 2008)
  • தமிழகக் காசுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள் (மார்ச், 2002)
  • தஞ்சாவூர் நாயக்கர் காசுகள் (பிப்ரவரி, 2002)
  • மதுரை நாயக்கர் காசுகள் (மே, 2002)
  • பல்லவர் காசுகள் (ஏப்ரல் 2002)
  • பல்லவர் காசுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்) (டிசம்பர், 2004)
  • காசு இயல் கட்டுரைகள் (மே 2005)
  • சோழர் காசுகள் (ஜுலை 2005)
  • சேதுபதி காசுகள் (டிசம்பர் 2005)
  • தஞ்சை மராட்டியர் காசுகள் (ஏப்ரல் 2005)
  • ஆர்க்காடு நவாபுகளின் தமிழ்க்காசுகள் (பிப்ரவரி 2005)
  • செஞ்சி நாயக்கர் காசுகள் (மார்ச் 2005)
  • பாண்டியர் காசுகள் (ஆகஸ்ட் 2006)
  • சேரர் காசுகள் (வேணாடு, கொங்கு நாடு) (செப்டம்பர் 2006)
  • சங்க காலக் காசுகள் (அக்டோபர் 2006)
  • தமிழகக் காசுகள் (சங்க காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை) (ஜுன் 2005)
  • சங்க கால முத்திரைகள் (மே 2008)
  • சங்க கால மோதிரங்கள் (ஏப்ரல் 2008)
  • தமிழகக் காசுகள் (முழுத் தொகுதி, 2014)
  • தமிழக முத்திரைகள் மோதிரங்கள் (2016) (சங்கரன் ராமனுடன் இணைந்து)
  • சம்புவராயர் காசுகள் (டிசம்பர் 2017)
  • மதுரை சுல்தானியர் காசுகள் (ஜுன் 2018) (அப்துல் ரசூல் யூசுப்புடன் இணைந்து)
  • வரலாறு கூறும் சோழர் காசுகள் (ஆகஸ்ட் 2018)
  • தமிழக முத்திரைக் காசுகள் (நவம்பர் 2018)
  • தமிழக நாயக்க மன்னர்கள் காசுகள் (தஞ்சை, மதுரை, செஞ்சி) (ஏப்ரல், 2019)
  • தமிழகப் பாளையக்காரர், ஜமீன்தார் காசுகள் (செப்டம்பர் 2019)
  • ஆய்வு நோக்கில் பல்லவர் காசுகள் (டிசம்பர் 2019)
  • தமிழகக் காசுகளில் எழுத்துக்கள் (2019)
  • மறவர் நாட்டுக் காசுகள் (ஜனவரி 2020)
  • சங்கத் தமிழர் காசுகள் (ஜனவரி 2021)
  • சங்க கால மலையமான் காசுகள் (ஏப்ரல் 2021)
  • சங்ககாலச் சேரர் காசுகள் (பிப்ரவரி 2021)
  • சங்ககாலப் பாண்டியர் காசுகள் (மார்ச் 2021)
  • செஞ்சி நாயக்க மன்னர்கள் காசுகள் (ஜனவரி 2021)
  • தஞ்சை நாயக்க மன்னர்கள் காசுகள் (மார்ச் 2021)
  • தஞ்சை மராட்டிய மன்னர் காசுகள் (2021)
  • பிற்காலப் பாண்டியர் காசுகள் (2021)
  • ஆர்க்காடு நவாபு காசுகள் (டிசம்பர் 2020)
  • வேணாடு சேரர் காசுகள் (ஜனவரி 2021)
  • பிற்காலக் கொங்குச் சேரர் காசுகள் (2021)
  • வரலாறு கூறும் தமிழ்க்காசுகள் .இரண்டு பாகங்கள் ( தங்கம் தென்னரசுவுடன் இணைந்து)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Jul-2025, 09:37:59 IST