வள்ளிமலை சுவாமிகள்: Difference between revisions
No edit summary |
|||
| Line 7: | Line 7: | ||
இந்த நிகழ்வுகளுக்குப்பின் இறை உணர்வும், உயிர் பற்றிய கேள்விகளும் அவர் மனதில் தோன்றின. பழநி சென்று முருகனைத் துதித்தால் வியாதி தீரும் எனக் கூறப்பட்டதால் மைசூர் அரண்மனை வேலையை விட்டு விட்டு மனைவியுடனும், எஞ்சி இருந்த ஒரு குழந்தையுடனும் பழநிக்கு வந்தார். | இந்த நிகழ்வுகளுக்குப்பின் இறை உணர்வும், உயிர் பற்றிய கேள்விகளும் அவர் மனதில் தோன்றின. பழநி சென்று முருகனைத் துதித்தால் வியாதி தீரும் எனக் கூறப்பட்டதால் மைசூர் அரண்மனை வேலையை விட்டு விட்டு மனைவியுடனும், எஞ்சி இருந்த ஒரு குழந்தையுடனும் பழநிக்கு வந்தார். | ||
பழனிக்கு வந்ததும் வயிற்று வலியுகுணமடைந்தது. அர்த்தநாரிக்கு துறவறம் பூணும் எண்னம் வந்தது. சொந்த ஊரான பூநாச்சிபுதூர் சென்று எஞ்சி இருந்த சொத்துக்களை எல்லாம் பிரித்துக் கொடுத்துவிட்டு பழநிக்குத் திரும்பினார். இறை சிந்தனையுடன் ஆலய மண்டபத்திலேயே தங்கி இருந்தார். ' மைசூர் ஸ்வாமிகள்' என அழைக்கப்பட்டார். | |||
== ஆன்மிக வாழ்க்கை == | == ஆன்மிக வாழ்க்கை == | ||
Revision as of 04:47, 19 July 2025
வள்ளிமலை சுவாமிகள் (திருப்புகழ் சுவாமிகள், வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்) நவம்பர் 25, 1870- நவம்பர் 21, 1950) வள்ளிமலையில் வாழ்ந்தவர். திருப்புகழைப் பரப்பியவர். பல ஆன்மிக, சமூகப் பணிகளைச் செய்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
வள்லிமலை சுவாமிகள் கோவைக்கு அருகிலுள்ல பூநாச்சி என்ற கிராமத்தில் சிதம்பர ஐயர்-லட்சுமி இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இயற்பெயர் அர்த்தநாரி. ஐந்து வயதிலேயே தந்தையை இழந்தார். மாமன் வீட்டில் வளர்ந்தார். உபநயனம் ஆனது. பள்ளியிலும் சேர்க்கப் பட்டார். ப்டிப்பில் நாட்டமில்லாததால் நிறுத்திவிட்டார். நல்ல குரல்வளம் இருந்ததால் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். பாலமுருகன், பாலகிருஷ்ணன் போன்ற வேடங்களை ஏற்று பாடி, ஆடி நடித்தார்.
மாமன் மகள் மகாலக்ஷியை மணந்துகொண்டார். மைசூர் சென்று அரண்மனையில் சமையல் வேலை பார்த்தார் அர்த்தநாரி. அங்கேயே வேலைசெய்த நஞ்சம்மாவை இரண்டாம் மனைவியாக மணந்துகொண்டார். முதல் மனைவிக்குப் பிறந்த அவரின் குழந்தைகள் ஒவ்வொன்றாக இறக்க அதே ஏக்கத்தில் மகாலக்ஷ்மியும் இறந்தார். இரண்டாம் மனைவியான நஞ்சம்மாவின் குழந்தைகளும் இறக்க கடைசியாகப் பிறந்த நரசிம்மன் என்ற சிறுவன் மட்டும் உயிருடன் இருந்தான். வாழ்க்கை மீது வெறுப்புக் கொண்ட அர்த்தநாரி தற்கொலை செய்துகொள்ள எண்ணினார். அடிக்கடி ஏற்பட்ட வயிற்று நோவும் அவரை வருத்தி வந்தது.
இந்த நிகழ்வுகளுக்குப்பின் இறை உணர்வும், உயிர் பற்றிய கேள்விகளும் அவர் மனதில் தோன்றின. பழநி சென்று முருகனைத் துதித்தால் வியாதி தீரும் எனக் கூறப்பட்டதால் மைசூர் அரண்மனை வேலையை விட்டு விட்டு மனைவியுடனும், எஞ்சி இருந்த ஒரு குழந்தையுடனும் பழநிக்கு வந்தார்.
பழனிக்கு வந்ததும் வயிற்று வலியுகுணமடைந்தது. அர்த்தநாரிக்கு துறவறம் பூணும் எண்னம் வந்தது. சொந்த ஊரான பூநாச்சிபுதூர் சென்று எஞ்சி இருந்த சொத்துக்களை எல்லாம் பிரித்துக் கொடுத்துவிட்டு பழநிக்குத் திரும்பினார். இறை சிந்தனையுடன் ஆலய மண்டபத்திலேயே தங்கி இருந்தார். ' மைசூர் ஸ்வாமிகள்' என அழைக்கப்பட்டார்.
ஆன்மிக வாழ்க்கை
சமாதி
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.