ஒளவை நோன்பு: Difference between revisions
No edit summary |
|||
| Line 1: | Line 1: | ||
[[File:Ovvai.png|thumb|ஒளவை]] | |||
ஒளவை நோன்பு (அவ்வையார் நோன்பு) பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையாருக்கு கன்னியாகுமரியில் எழுப்பட்ட கோவில்களை ஒட்டி பெண்கள் இந்த நோன்பை மேற்கொள்கின்றனர். | ஒளவை நோன்பு (அவ்வையார் நோன்பு) பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையாருக்கு கன்னியாகுமரியில் எழுப்பட்ட கோவில்களை ஒட்டி பெண்கள் இந்த நோன்பை மேற்கொள்கின்றனர். | ||
Revision as of 11:54, 10 July 2025
ஒளவை நோன்பு (அவ்வையார் நோன்பு) பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையாருக்கு கன்னியாகுமரியில் எழுப்பட்ட கோவில்களை ஒட்டி பெண்கள் இந்த நோன்பை மேற்கொள்கின்றனர்.
பார்க்க: அவ்வைச் சித்தர்
ஒளைவை நோன்பு
அவ்வையாருக்குத் தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் மூன்று கோயில்கள் உள்ளன. நாஞ்சில் நாட்டில் ஆரல்வாய்மொழி - பூதப்பாண்டி சாலையில் உள்ள தாழக்குடிக்கு அடுத்து அவ்வையார் அம்மனுக்கு என தனிக்கோவில் உள்ளது. இங்கு அவ்வைக்கு நெல்லியடி அம்மன் என்ற பெயர் வழங்கப்படுகிறது. இந்த கோவிலில் தான் அவ்வையார் முக்தி நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி மாநகர்., பாளையம்கோட்டை அருள்மிகு திரிபுராந்திசுவரர் திருக்கோயிலில் அவ்வையார் அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கதாகவும். இக்கோயில்களில் ஒளவையாரம்மன் வழிபடப்படுகிறார்.
ஆடி, தை, மாசி ஆகிய மாதங்களில் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மட்டுமே மேற்கொள்கிற நோன்பு ஒளவை நோன்பு எனப்படும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இது பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் நோன்பு. இது தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
ஒளைவை நோன்பு முறை
ஆடிச்செவ்வாயன்று மாலையில் நீராடி ஆடவர் இல்லாத வீட்டில் ஒரு அறையில் பெண்கள் கதவை அடைத்து விட்டு இரவு பத்து மணிக்குமேல் நோன்பு தொடங்கி காலை ஐந்து மணி வரை நோன்பு மேற்கொள்வர். ஒளவயம்மனுக்கு உப்பு இல்லாத கூழும், கொழுக்கட்டையும் படைப்பர். கொழுக்கட்டை வீட்டிற்குத்தேவையான பொருட்களின் வடிவத்தில் படைப்பர். அவற்றை கொதிக்கும் நீரில் போட்டு எடுப்பர்.
நோன்பிருக்கும் அறையில் கண்ணாடியை வைத்து அதில் அவ்வையம்மனின் உருவத்தை வரைவர். அதற்கு பூசைப் பொருள் படைப்பர். புன்கு இலை, புளியிலை, அரளி இலைகள் பூசைக்கு முக்கியப் பொருட்களாக உள்ளது.
நோன்பு மேற்கொள்வர்களில் முதியவர் அவ்வையாரம்மனின் கதையைச் சொல்வார். கதை சொல்லும் போது புன்கு இலை, புளியிலை கொடுத்து கதை சொல்வது வழக்கம். முதன்முதலில் கன்னிப்பெண்ணுக்கே கொழுக்கட்டை கொடுப்பார்கள். ஆண்களுக்கு இந்தக் கொழுக்கொட்டைகளைக் கொடுக்கக் கூடாது. பெண்கள் நோன்பிருப்பதை ஆண்கள் வேடிக்கை பார்க்கக்கூட அனுமதி இல்லை. அறையில் நோன்பு எப்போது நடக்கிறது என்பதைப் பெண்கள் ஆண்களிடம் சொல்லவும் கூடாது. ஆண்கள் அவ்வையாருக்கு நோன்பு இருக்காவிட்டாலும், மூன்று கோயில்களுக்கும் சென்று ஆடி மாதங்களில் வழிபாடு செய்வதற்குக் தடை இல்லை.
தொன்மம்
ஆண்கள் ஏன் ஒளைவை நோன்புக்கு அனுமதியில்லை என்பதற்கு தொன்மக்கதை ஒன்று உள்ளது. கன்னியாகுமரியிலுள்ள குறத்தியறையில் காணப்படும் ஒளவை சிலையின் பின்புறம் ஒரு குகை இருந்ததது. அங்கு பெண்கள் தாங்கள் திருமணம் செய்யத் தேவையான நகை, ஆடைகளைக் கேட்டு கண்ணீரோடு வேண்டுவர். காலையில் துணிகளால் மூடப்பட்ட இரு தட்டுகள் இருக்கும். அதில் அவர்கள் கேட்ட பொருட்கள் இருக்கும். அதை ஒளவையாரம்மன் செய்வதை ஒரு முறை ஒரு ஆடவர் பார்த்து கூச்சல் போட்டதால் அன்று முதல் ஆண்களுக்கு ஒளை நோன்பில் அனுமதி மறுக்கப்பட்டது என்றும் நம்பிக்கை உள்ளது. ஒளிந்திருந்து பார்த்த காரணத்தால் ஆடவருக்கு கொழுக்கட்டை கூட கொடுக்கக்கூடாது என்ற நம்பிக்கை பல ஆண்டுகாலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.