second review completed

முன்தேர்க் குரவை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 2: Line 2:


தேரின் முன்னே ஆடுதல் முன் தேர்க்குரவை.
தேரின் முன்னே ஆடுதல் முன் தேர்க்குரவை.
[[வாகைத் திணை]]யிலும் முன்தேர்க்குரவை என்ற துறை உள்ளது. வென்ற வேந்தனின் தேரின் முன் குரவையாடுவதைக் கூறுவது.


==விளக்கம்==
==விளக்கம்==

Revision as of 23:01, 1 July 2025

முன்தேர்க் குரவை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. தும்பைப் போரிலே வென்ற மன்னனின் படைவீரர்கள் போர்க் களத்திலேயே வெற்றியைக் கொண்டாடி மகிழ்வர். வெற்றி பெற்ற மன்னனது தேரின் முன்னேயும் பின்னேயும் ஆடுதல், அரசனுடன் சேர்ந்து ஆடுதல், களிற்றைக் கொன்று அதன் கீழ்ப்பட்டவனைப் பாராட்டுதல், வெற்றி பெற்ற அரசனை இருபக்க வீரர்களும் பாராட்டுதல் என வெற்றி கொண்டாடப்படுகிறது.

தேரின் முன்னே ஆடுதல் முன் தேர்க்குரவை.

வாகைத் திணையிலும் முன்தேர்க்குரவை என்ற துறை உள்ளது. வென்ற வேந்தனின் தேரின் முன் குரவையாடுவதைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கழல் அணிந்த வீரரொடு வளையலணிந்த விறலியர் பெருந்தகையான அரசனது தேரின் பின் ஆடியது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

கருங்கழல் மறவரொட வெள்வளை விறலியர்
பெருந்தகை தேரின் பின் ஆடின்று(கொளு 7.18)

வெண்பா

கிளை ஆய்ந்து பண்ணிய கேள்வி யாழ் பாணும்
வளையா வயவரும் பின்னாக் - கொளை ஆயந்து
அசை விளங்கும் பாடலொடு ஆட வருமெ
திசை விளங்கும் தானையான் தேர் (144)

பொருள் : திசைகளிலே விளங்கும் தானைப் பெருக்கினை உடைய தும்பை வேந்தனது தேர், அதன் பின்பக்கத்தே, கிளை நரம்பினை ஆய்ந்தமைத்த சுருதி மிகுந்த யாழிசையை எழுப்பவல்ல பாண் மகளிரும், வீரமறவரும், இசையாய்ந்து தூக்குதல் அமைந்த பாடலுடனே ஆடலையும் நிகழ்த்தியவராக வந்து கொண்டிருப்பவருமாக அசைந்து வந்தது.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.