மதுரை இளங்கௌசிகனார்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
; Added info on Finalised date |
||
| Line 33: | Line 33: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|06-May-2025, 14:05:58 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 03:44, 7 May 2025
மதுரை இளங்கௌசிகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
மதுரை இளங்கௌசிகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
மதுரை இளங்கௌசிகனார் பாடிய பாடல்கள் அகநானூறில் 381-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டும் பொருட்டு தலைவியைப் பிரிந்து பாலை நிலத்தில் பயணம் செய்யும் தலைவன் பிரிவாற்றாமையால் தனக்கு தானே ஆறுதல் கூறிக் கொள்வதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- பாலை நிலத்தில் வீசும் கடும் வெம்மையினால் வறட்சி ஏற்பட்டு யானைகள் மெலிந்தும் சிங்கங்கள் பசித்தும் காணப்படும். பசித்திருக்கும் சிங்கம் வலிமையான யானையைக் கொன்று அதன் ஊனையும் தந்தத்தின் குருத்து பகுதியையும் உண்ணும்.
- பாலை நிலத்தில் வேட்டையாடும் மக்கள் வடுகர் என அழைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் வேட்டை நாய்களை வளர்ப்பர். தம் வேட்டை நாய்களின் உதவியுடன் பசுவின் கன்றுகளை கொன்று குருதி வழிய சமைக்காமல் உண்பர். அவர் உண்டு வீசிய எஞ்சிய இரையை கழுகுகள் உண்ணும்.
- கணவரைப் பிரிந்து இல்லத்தில் தனித்திருந்து உடல் மெலிந்து வாடும் மகளிரின் நிலையானது மாலையணிந்த சேரன் படை கொண்டு தாக்கி அழித்த பகையரசரின் பாழ்பட்ட கோட்டையை ஒத்து இருந்தது.
- பிரிவாற்றாமையால் வருந்தும் மகளிரின் கண்களில் நீர் கசிவது வறண்ட குளத்தில் பூத்திருக்கும் குவளை மலர்களினுள் ஆழ இறங்கி சென்று வண்டுகள் தேன் குடிப்பதை போலுள்ளது.
பாடல் நடை
அகநானூறு - 381
- திணை: பாலை கூற்று: தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும்
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
.....................................................................
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணத்தனார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- அகநானூறு - 381:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 14:05:58 IST